Just In
- 1 hr ago
மாருதி அரேனா கார்களுக்கு ஆன்லைன் மூலமாக எளிதாக கடன் பெறும் திட்டம்!
- 1 hr ago
ரொம்ப பாதுகாப்பானது... 1 கோடி ரூபாய்க்கு வால்வோ கார் வாங்கிய பிரபல டிவி நடிகை... யார்னு தெரியுமா?
- 2 hrs ago
2021 சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-எஸ்125 பைக் சர்வதேச சந்தையில் அறிமுகம்!! 125சிசி பைக்கிற்கு இவ்வளவு விலையா?!
- 4 hrs ago
இந்தியாவின் மலிவான க்ரூஸர் மோட்டார்சைக்கிள், பஜாஜ் அவென்ஜெர்ஸின் விலை அதிகரிப்பு!!
Don't Miss!
- News
"ரொம்ப கஷ்டப்பட்டோம்.." கொரோனா தடுப்பூசி பணியை துவங்கியபோது.. நாக்கு தழுதழுத்து, கண்கள் பனித்த மோடி!
- Movies
அடடா.. வனிதா வீட்டுல திரும்பவும் விசேஷமாம்.. போட்டோவுடன் ஹேப்பி போஸ்ட்!
- Lifestyle
உங்க மனைவிகிட்ட இந்த வித்தியாசங்கள் தெரிஞ்சா அவங்க உங்கள சந்தேகப்பட தொடங்கிட்டாங்கனு அர்த்தமாம்...!
- Sports
அவ்ளோ ஈஸியா விட்டுற மாட்டோம்.. ஆஸி.வை சுருட்டிய 2 தமிழக வீரர்கள்!
- Education
தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை வேண்டுமா?
- Finance
கலவரத்திற்கு முன் பிட்காயின் மூலம் பேமெண்ட்.. அமெரிக்காவில் நடந்த கொடூரம்..!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சும்மா அள்ளுது... இந்தியர்களை வசீகரிக்க வருகிறது ரெனால்ட் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் கார்...
ரெனால்ட் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரான்ஸை சேர்ந்த ரெனால்ட் நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் அடுத்தடுத்து பல்வேறு புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்யும் பணிகளில் மும்முரம் காட்டி வருகிறது. இதன் ஒரு பகுதியாக ரெனால்ட் நிறுவனம் கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்பு விற்பனைக்கு அறிமுகம் செய்த ட்ரைபர் காருக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த வரிசையில் ரெனால்ட் நிறுவனம் ஸோயி எலெக்ட்ரிக் காரையும் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இது ரெனால்ட் நிறுவனத்தின் சர்வதேச மார்க்கெட்களில் மிகவும் பிரபலமாக உள்ள எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக் ரக கார் ஆகும். அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஆட்டோ எக்ஸ்போவில் ஸோயி காட்சிப்படுத்தப்படலாம் என கூறப்படுகிறது.

இதை தொடர்ந்து நடப்பாண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் இந்திய மார்க்கெட்டில் முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த கார் குறித்த முக்கிய அம்சங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

அட்டகாசமான ரேஞ்ச்!
எலெக்ட்ரிக் காரை வாங்குவதில் பலருக்கும் இருக்கும் தயக்கமே குறைவான ரேஞ்ச்தான். ஆனால் ரேஞ்ச் விஷயத்தில் ரெனால்ட் ஸோயி கண்டிப்பாக அனைவரையும் கவரும். இந்திய மார்க்கெட்டில் வரும் ஆண்டுகளில் பல்வேறு எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக் கார்கள் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் அவற்றில் பெரும்பாலான கார்கள் ரெனால்ட் ஸோயி அளவிற்கு ரேஞ்ச்சை வழங்காது. இந்த காரை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால், 395 கிலோ மீட்டர்கள் பயணிக்க முடியும் என ரெனால்ட் நிறுவனம் கூறுகிறது. இதற்கு இந்த காரின் புதிய 52 kW பேட்டரிக்குதான் நன்றி சொல்ல வேண்டும். ரெனால்ட் மற்றும் எல்ஜி செம் நிறுவனங்கள் கூட்டாக இணைந்து இந்த பேட்டரியை தயாரித்துள்ளன.

முந்தைய தலைமுறை ஸோயி காருடன் ஒப்பிடும்போது, ரேஞ்ச் 25 சதவீதம் அதிகரித்துள்ளதாக ரெனால்ட் நிறுவனம் கூறுகிறது. எனவே ரெனால்ட் ஸோயி எலெக்ட்ரிக் கார் இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டால், ரேஞ்ச் விஷயத்தில் நிச்சயமாக வாடிக்கையாளர்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கார் நிச்சயமாக உங்களுக்கு ஏமாற்றத்தை அளிக்காது. நகர பயன்பாடு மட்டுமின்றி, தொலை தூர பயணங்களுக்கும் ஏற்றதாகவே ரெனால்ட் ஸோயி எலெக்ட்ரிக் கார் இருக்கும். டிசி ஃபாஸ்ட் சார்ஜரை பயன்படுத்தினால், ரெனால்ட் ஸோயி எலெக்ட்ரிக் காரின் பேட்டரியை வெறும் 1 மணி நேரம் 10 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்து விட முடியும்.

பெர்ஃபார்மென்ஸ்!
பொதுவாக எலெக்ட்ரிக் கார்களின் பெர்ஃபார்மென்ஸ் நன்றாக இருக்காது என்ற பேச்சு பரவலாக உள்ளது. ஆனால் இந்த விஷயத்திலும் ரெனால்ட் ஸோயி உங்களை கவரக்கூடும். ஏனெனில் 132 எச்பி பவரை வெளிப்படுத்தக்கூடிய 100 kW எலெக்ட்ரிக் மோட்டாரை, ஸோயி எலெக்ட்ரிக் காரில், ரெனால்ட் நிறுவனம் வழங்கியுள்ளது.

ரெனால்ட் ஸோயி எலெக்ட்ரிக் கார் 80ல் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 2.2 வினாடிகளில் எட்டி விடும் திறன் வாய்ந்தது. அருமையான ரேஞ்ச் மற்றும் நல்ல பெர்ஃபார்மென்ஸ் உடன் வருவதால், ரெனால்ட் ஸோயி இந்தியர்களை கவர்ந்து இழுப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகமாகவே இருக்கிறது.

இன்டீரியர் அப்படி இருக்கும்!
பொதுவாக ஹேட்ச்பேக் கார்களின் இன்டீரியர் பிரீமியம் உணர்வை கொடுப்பதில்லை என்ற குறை இருக்கிறது. ஆனால் அந்த குறையையும் ரெனால்ட் ஸோயி போக்கும். இதன் இருக்கை உள்பட அனைத்திலும் சாஃப்ட் மெட்டீரியல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் இதன் ஸ்டீயரிங் வீலில் பல்வேறு கண்ட்ரோல்களுக்கான சுவிட்சகள் கொடுக்கப்பட்டுள்ளன.

மேலும் ரெனால்ட் ஸோயி 10 இன்ச் டச் ஸ்கிரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டத்துடன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் இதன் வெளிப்புறமும் கவர்ச்சிகரமான வகையில் டிசைன் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்தியாவிற்கு வந்தால், ஸோயி வெற்றியை ருசிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆனால் ரெனால்ட் விலையை சரியாக நிர்ணயிக்க வேண்டும்.