ரெனோ கேப்ச்சர் ஃபேஸ்லிஃப்ட் மாடல் வெளியீடு... படங்களுடன் தகவல்கள்!

ரெனோ கேப்ச்சர் எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் ரஷ்யாவில் வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்தியாவிலும் எதிர்பார்க்கப்படும் இந்த புதிய மாடலின் படங்கள், விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

 ரெனோ கேப்ச்சர் ஃபேஸ்லிஃப்ட் மாடல் வெளியீடு!

சந்தைப் போட்டியை மனதில் வைத்து கேப்ச்சர் எஸ்யூவிக்கு புதுப்பொலிவு கொடுத்துள்ளது ரெனோ கார் நிறுவனம். தற்போது இந்தியாவிலும், ரஷ்யாவிலும் விற்பனை செய்யப்படும் மாடலானது ரெனோ நிறுவனத்தின் BO என்ற கட்டமைப்புக் கொள்கையில் உருவாக்கப்பட்டது.

 ரெனோ கேப்ச்சர் ஃபேஸ்லிஃப்ட் மாடல் வெளியீடு!

ஆனால், ரஷ்யாவில் தற்போது வெளியிடப்பட்டு இருக்கும் மாடலானது BO+ என்ற மேம்படுத்தப்பட்ட கட்டமைப்புக் கொள்கையின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது, பழைய மாடலைவிட இந்த மாடலில் 55 சதவீதம் புதிய உதிரிபாகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

 ரெனோ கேப்ச்சர் ஃபேஸ்லிஃப்ட் மாடல் வெளியீடு!

இந்த புதிய மாடலின் க்ரில் அமைப்பு, பம்பர் உள்ளிட்டவற்றில் மாற்றங்கள் செய்யப்பட்டு புதுப்பொலிவு பெற்றுள்ளது. புதிய மாடலில் எல்இடி ஹெட்லைட்டுகள், புதிய அலாய் வீல்கள் ஆகியவை முக்கிய அம்சங்களாக இடம்பெற்றுள்ளன.

 ரெனோ கேப்ச்சர் ஃபேஸ்லிஃப்ட் மாடல் வெளியீடு!

பின்புறத்திலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களுடன் வருகிறது. டெயில் லைட் க்ளஸ்ட்டர், பம்பர் அமைப்பில் மாற்றங்கள் செய்யப்பட்டு புதுப்பொலிவு கொடுக்கப்பட்டு இருக்கிறது. மொத்தத்தில் தோற்றத்தில் மேலும் வசீகரமாக மாறி இருக்கிறது.

 ரெனோ கேப்ச்சர் ஃபேஸ்லிஃப்ட் மாடல் வெளியீடு!

உட்புறத்திலும் சில மாற்றங்களுடன் புதிய பொலிவு பெற்றுள்ளது. புதிய ஸ்டீயரிங் வீல் இடம்பெறுகிறது. அதேபோன்று, இதன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமும் மேம்படுத்தப்பட்டு வர இருக்கிறது. இருக்கைகள் மற்றும் டேஷ்போர்டில் நீல வண்ண அலங்கார பாகங்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கும்.

 ரெனோ கேப்ச்சர் ஃபேஸ்லிஃப்ட் மாடல் வெளியீடு!

புதிய ரெனோ கேப்ச்சர் எஸ்யூவியில் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கும். இந்த எஞ்சின் 130 பிஎஸ் பவரை அளிக்க வல்லதாக தெரிவிக்கப்படுகிறது. ரெனோ - நிஸான் மற்றும் டெய்ம்லர் கூட்டணியில் இந்த புதிய பெட்ரோல் எஞ்சின் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

 ரெனோ கேப்ச்சர் ஃபேஸ்லிஃப்ட் மாடல் வெளியீடு!

பிஎஸ்-6 விதிமுறைகள் காரணமாக, தற்போது ரெனோ கார்களில் பயன்படுத்தப்படும் 1.5 லிட்டர் கே9கே டீசல் எஞ்சின் விலக்கிக் கொள்ளப்பட இருக்கிறது. எனவே, ரெனோ கேப்ச்சர் எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் டீசல் எஞ்சின் தேர்வு இருக்காது என்று நம்பலாம்.

 ரெனோ கேப்ச்சர் ஃபேஸ்லிஃப்ட் மாடல் வெளியீடு!

இந்தியாவில் இந்த மாடலானது சிறிய மாற்றங்களுடன் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு பிற்பாதியில் இந்த ரெனோ கேப்ச்சர் ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

Most Read Articles

மேலும்... #ரினால்ட் #renault
English summary
Renault has released the Captur facelift model official images for the Russian market.
Story first published: Saturday, March 14, 2020, 18:19 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X