நாட்டின் முதல் ஹைட்ரஜன் ப்யூவல் செல் கார் சோதனையோட்டம் வெற்றி... இந்திய விஞ்ஞானிகளை மிரள வைத்த திறன்

இந்தியாவில் முதல் முறையாக ஹைட்ரஜன் ப்யூவல் செல் கார் சோதனையோட்டம் மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையோட்டத்தில் ஹைட்ரஜன் ப்யூவல் செல்லாக வாகனமாக மாற்றப்பட்ட கார் சிறப்பாக செயல்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

நாட்டின் முதல் ஹைட்ரஜன் ப்யூவல் செல் கார் சோதனையோட்டம் வெற்றி... இந்திய விஞ்ஞானிகளை மிரள வைத்த திறன்...

தற்போது பயன்பாட்டில் இருக்கும் பெரும்பாலான வாகனங்கள் சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிப்பவையாகவே காணப்படுகின்றன. குறிப்பாக, பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களால் ஏற்படும் பின் விளைவுகள் எண்ணற்றவை. எனவேதான் இவற்றிற்கான மாற்று வாகனங்களை உருவாக்குவதில் ஆட்டோமொபைல்ஸ் துறையினர் அதிகம் கவனம் செலுத்தி வருகின்றனர்.

நாட்டின் முதல் ஹைட்ரஜன் ப்யூவல் செல் கார் சோதனையோட்டம் வெற்றி... இந்திய விஞ்ஞானிகளை மிரள வைத்த திறன்...

மாற்று எரிபொருள், சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தக் கூடாது என்பதே முக்கியமான நோக்கமாகும். அதேவேலையில் அது அனைவராலும் புழங்கக்கூடிய மலிவு விலையில் இருக்க வேண்டும் என்பதும் வல்லுநர்களின் எண்ணமாகும். இதனடிப்படையிலேயே, மின்சார வாகனம், சிஎன்ஜி, எல்பிஜி மற்றும் ஹைட்ரஜன் ப்யூவல் செல் வாகனங்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரும் முயற்சியில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுட்டு வருகின்றனர்.

நாட்டின் முதல் ஹைட்ரஜன் ப்யூவல் செல் கார் சோதனையோட்டம் வெற்றி... இந்திய விஞ்ஞானிகளை மிரள வைத்த திறன்...

இந்தியாவில், பெட்ரோல்-டீசல் வாகனங்களுக்கு அடுத்தபடியாக மின்சாரம், எல்பிஜி மற்றும் சிஎன்ஜி வாகனங்கள் ஏற்கனவே பயன்பாட்டிற்குக் கொண்ட வரப்பட்டுவிட்டன. ஆனால், ஹைட்ரஜன் ப்யூவல் செல் வாகனங்கள் இன்னும் பயன்பாட்டிற்கு வராதே நிலையேக் காணப்படுகின்றது. இந்த நிலையை உடைக்கும் முயற்சியிலேயே தற்போது இந்திய வாகனத்துறை வல்லுநர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

நாட்டின் முதல் ஹைட்ரஜன் ப்யூவல் செல் கார் சோதனையோட்டம் வெற்றி... இந்திய விஞ்ஞானிகளை மிரள வைத்த திறன்...

அந்தவகையில், ஹைட்ரஜன் ப்யூவல் செல்-லால் இயங்கும் காரை களமிறக்கும் விதமாக இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையோட்டம் வெற்றிகரமாக முடிந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ப்யூவல் செல்லால் இயங்கும் வாகனத்தை மஹாராஷ்டிரா மாநிலம், புனேவை மையமாகக் கொண்டு இயங்கும் சிஎஸ்ஐஆர்-தேசிய இரசாயன ஆய்வகம் உள்நாட்டிலேயே வைத்து உருவாக்கியிருக்கின்றது.

நாட்டின் முதல் ஹைட்ரஜன் ப்யூவல் செல் கார் சோதனையோட்டம் வெற்றி... இந்திய விஞ்ஞானிகளை மிரள வைத்த திறன்...

இந்த வாகனத்தையே சிஎஸ்ஐஆர் (Council of Scientific and Industrial Research) மற்றும் கேபிஐடி ஆகியவை பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளன. அதில், ஹைட்ரஜன் ப்யூவல் செல் வாகனமாக மாற்றப்பட்ட கார் அதிகபட்சமாக 250 கிமீ ரேஞ்ஜை வெளிப்படுத்தி ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. நாட்டில் ஹைட்ரஜன் ப்யூவல் செல்லால் இயங்கும் காரை பரிசோதிப்பது இதுவே முதல் முறையாகும். ஆகையால், இந்த நிகழ்வு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

நாட்டின் முதல் ஹைட்ரஜன் ப்யூவல் செல் கார் சோதனையோட்டம் வெற்றி... இந்திய விஞ்ஞானிகளை மிரள வைத்த திறன்...

ஹைட்ரஜன் ப்யூவல் செல் என்றால் என்ன?

சிஎன்ஜி மற்றும் எல்பிஜி ஆகியவற்றைப் போலலே ஹைட்ரஜன் ப்யூவல் செல் என்பது ஓர் வாயுவாகும். இது மின்சாரத்தை உருவாக்க உதவும். ஆம், ஹைட்ரஜன் ப்யூவல் செல்லை எரியூட்டி அதன் மூலம் கிடைக்கும் ஆற்றலை மின்சாரமாக மாற்றி, அதையே காருக்கு தேவையான மின்னாற்றலாக மாற்றப்படுகின்றது. இந்த ஆற்றல் நேரடியாக பேட்டரிகளுக்கு அனுப்பப்பட்டு, அதில் சேமிக்கப்படுகின்றது.

நாட்டின் முதல் ஹைட்ரஜன் ப்யூவல் செல் கார் சோதனையோட்டம் வெற்றி... இந்திய விஞ்ஞானிகளை மிரள வைத்த திறன்...

இதைவைத்தே ஹைட்ரஜன் ப்யூவல் செல் கார் இயங்கும். ஆகையால், இதனை மின்சார கார் என்றும் அழைக்கலாம். ஆனால், இதற்கு தேவையான மின்னாற்றலை ஹைட்ரஜன் ப்யூவல் செல் உருவாக்குவதால், இதனை விஞ்ஞானிகள் ஹைட்ரஜன் ப்யூவல் செல் வாகனம் என்றே குறிப்பிடுகின்றனர். அதேசமயம், இந்த வாயுவை எரியூட்டுவதன் மூலம் ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் ஆகியவையே கழிவாக வெளியேற்றப்படுகின்றன.

நாட்டின் முதல் ஹைட்ரஜன் ப்யூவல் செல் கார் சோதனையோட்டம் வெற்றி... இந்திய விஞ்ஞானிகளை மிரள வைத்த திறன்...

இதனால், இயற்கைக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. எனவேதான், இதனையும் இயற்கையின் நண்பன் என ஆட்டோத்துறை வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர். மேலும், மின்சார வாகனத்தைக் காட்டிலும் ஹைட்ரஜன் ப்யூவல் செல் கார் மிகவும் சிறந்தது எனவும் அவர்கள் கூறுகின்றனர். பொதுவாக, ஓர் மின்சார காரை சார்ஜ் செய்ய குறைந்தது 3 மணி நேரங்கள் முதல் 8 மணி நேரங்கள் வரை தேவைப்படும்.

நாட்டின் முதல் ஹைட்ரஜன் ப்யூவல் செல் கார் சோதனையோட்டம் வெற்றி... இந்திய விஞ்ஞானிகளை மிரள வைத்த திறன்...

ஆனால், ஹைட்ரஜன் ப்யூவல் செல் காரில் ஒரு முறை வாயுவை நிரப்பிவிட்டால், இதன் பின்னர் கார் இயங்கும்போதே காருக்கு தேவையான மின்சாரத்தை வாயு உருவாக்க ஆரம்பித்துவிடும். ஆகையால், ஒரு சில நிமிடங்களிலேயே காரின் பேட்டரிகள் சார்ஜாக ஆரம்பித்துவிடும். எனவே சார்ஜ் தீர்ந்துவிடும் என்ற அச்சமின்றி வாகனத்தின் உரிமையாளரால் பயணிக்க முடியும்.

நாட்டின் முதல் ஹைட்ரஜன் ப்யூவல் செல் கார் சோதனையோட்டம் வெற்றி... இந்திய விஞ்ஞானிகளை மிரள வைத்த திறன்...

மஹிந்திரா நிறுவனத்தின் வெரிட்டோ காருக்கே ஹைட்ரஜன் ப்யூவல் செல் திறன் வழங்கப்பட்டு பரிசோதனைச் செய்யப்பட்டிருக்கின்றது. இந்த பரிசோதனையில் பிற பயணிகள் வாகனத்தைப் போலவே எந்தவொரு சிக்கலும் இன்றி இந்த கார் செயல்பட்டுள்ளது. குறிப்பாக, 65 முதல் 75 டிகிரி சென்டிகிரேடில் வைத்து இயக்கியபோதும் இக்கார் சிறப்பாக இயங்கியிருக்கின்றது.

நாட்டின் முதல் ஹைட்ரஜன் ப்யூவல் செல் கார் சோதனையோட்டம் வெற்றி... இந்திய விஞ்ஞானிகளை மிரள வைத்த திறன்...

மேலும், 1.75 கிலோகிராம் ஹைட்ரஜன் ப்யூவல் செல்லில் சுமார் 250 கிமீ வரை ரேஞ்ஜை அது வெளிப்படுத்தியிருக்கின்றது. ஆகையால், பிற வாகனங்களைக் காட்டிலும் இதில் அதிக லாபம் கிடைக்கும் என்பது உறுதியாகியுள்ளது. எனவேதான் இந்த கார் பற்றிய தகவல் வாகன ஆர்வலர்கள் மத்தியில் அதிக ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.

Most Read Articles

English summary
India’s First Hydrogen Fuel Cell Car Testing Completed: Ready For Production?. Read In Tamil.
Story first published: Tuesday, October 13, 2020, 14:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X