உல்லாச கப்பலையே அசால்ட் செய்யும் கியா கார்னிவல்.. இது ஒன்றே போதும் சொந்த வீடே தேவையில்லை..

கியா நிறுவனத்தின் கார்னிவல் எம்பிவி கார் உல்லாச கப்பல்களின் சொகுசு வசதிக்கே டஃப் கொடுக்கின்ற வகையில் உருமாறியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

உல்லாச கப்பலையே அசால்ட் செய்யும் கியா கார்னிவல்.. இது ஒன்றே போதும் சொந்த வீடே தேவையில்லை..

தென் கொரியாவை மையமாகக் கொண்டு இயங்கும் கியா நிறுவனம், இந்தியாவில் தால் கடம் பதித்ததை அடுத்து இரண்டாம் மாடலாக கியா கார்னிவல் எம்பிவி காரை அறிமுகம் செய்தது. இந்த காரை டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா எம்பிவி காருக்கு போட்டியாக அது களமிறக்கியது.

லக்சூரி அம்சத்தை விரும்பும் இந்திய வாடிக்கையாளர்களைக் கவரும் நோக்கில் பல்வேறு அம்சங்களை இந்த காரில் கியா சேர்த்துள்ளது.

உல்லாச கப்பலையே அசால்ட் செய்யும் கியா கார்னிவல்.. இது ஒன்றே போதும் சொந்த வீடே தேவையில்லை..

இந்த அம்சத்தில் திருப்தி கொள்ளாத தொழிலதிபர்களைக் கூடுதல் சிறப்பம்சங்களுடன் கவர்கின்ற வகையில் டிசி2 நிறுவனம் கார்னிவலை மாடிஃபை செய்துள்ளது. ஏற்கனவே, இந்த காரில் காணப்படும் சொகுசு அம்சங்கள் கார்னிவலை கார்தானா அல்லது உல்லாச கப்பலா என்ற கேள்வியை எழுப்புமளவிற்கு தொழில்நுட்பங்களும், லக்சூரி வசதிகளும் வாரி வழங்கப்பட்டிருக்கின்றன.

உல்லாச கப்பலையே அசால்ட் செய்யும் கியா கார்னிவல்.. இது ஒன்றே போதும் சொந்த வீடே தேவையில்லை..

இதைக் காட்டிலும் ஏராளமான வசதிகளை கார்னிவல் எம்பிவி காரில் டிசி2 புகுத்தியுள்ளது. இதுகுறித்த தகவலைதான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம்.

டிசி2 நிறுவனம் இந்தியாவில் இயங்கி வரும் பழமையான வாகன மாடிஃபிகேஷன் நிறுவனம் ஆகும். இந்நிறுவனம், முன்பாக டிசி என்ற பெயரில் இயங்கி வந்தது. சமீபத்தில்தான் டிசி2 என்ற பெயரில் அதன் புதிய அத்தியாத்தைத் தொடங்கியது.

உல்லாச கப்பலையே அசால்ட் செய்யும் கியா கார்னிவல்.. இது ஒன்றே போதும் சொந்த வீடே தேவையில்லை..

இந்த புதிய பெயருடன் பல்வேறு புத்தம் புதிய மாடிஃபிகேஷன் கொள்கைகளையும் அது களமிறக்கியிருக்கின்றது. அதன்படி, சமீபத்தில் பிரபல இந்தி திரைப்பட நடிகை மாதுரி திக்சித்-இன் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா காரை மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் வி-கிளாஸ் காருக்கு இணையாக மாடிஃபை செய்திருந்தது. இதுபோன்ற பல கார்களை அதிலும் மிக முக்கியமாக வழக்கமான பட்ஜெட் கார்களைக் கூட இந்நிறுவனம் பல கோடி ரூபாய் மதிப்புள்ள கார்களுக்கு இணையாக மாடிஃபை செய்திருக்கின்றது.

உல்லாச கப்பலையே அசால்ட் செய்யும் கியா கார்னிவல்.. இது ஒன்றே போதும் சொந்த வீடே தேவையில்லை..

இதனடிப்படையிலேயே டிசி2 நிறுவனம் தற்போது கியா கார்னிவல் பிரிமியம் எம்பிவி ரக காரை மாடிஃபை செய்துள்ளது. டிசி2 நிறுவனத்தின் இந்த நடவடிக்கையால் கியா கார்னிவல் கார், பல நட்சத்திர சொகுசு விடுதிகளில்கூட காணப்படாத வசதியைப் பெற்றிருக்கின்றது. இதற்காக பல அதிரடி நடவடிக்கைகளை அது மேற்கொண்டுள்ளது.

உல்லாச கப்பலையே அசால்ட் செய்யும் கியா கார்னிவல்.. இது ஒன்றே போதும் சொந்த வீடே தேவையில்லை..

முக்கியமாக, 7, 8 மற்றும் 9 ஆகிய இருக்கைத் தேர்வில் கிடைக்கும் கார்னிவலை 4 நான்கு இருக்கைக் கொண்ட காராக மாற்றியிருக்கின்றது.

இதனால், முந்தைய மாடலைக் காட்டிலும் தற்போது கூடுதல் இட வசதி கிடைத்துள்ளது. அதுமட்டுமின்றி, டிரைவர் மற்றும் கோ டிரைவர் இருக்கைகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

உல்லாச கப்பலையே அசால்ட் செய்யும் கியா கார்னிவல்.. இது ஒன்றே போதும் சொந்த வீடே தேவையில்லை..

ஆகையால், காரின் பின்னிருக்கையில் இருப்பவர்கள் தனியறையில் இருப்பதைப் போல் உணர முடியும். மேலும், தனியறை உணர்வு மட்டுமின்றி சொகுசு வசதிக்காக அவ்விரு இருக்கையில் மடித்து வைத்துக் கொள்ளக்கூடிய ஃபுட் ரெஸ்ட்டுகள் வழங்கப்பட்டிருக்கின்றன.

உல்லாச கப்பலையே அசால்ட் செய்யும் கியா கார்னிவல்.. இது ஒன்றே போதும் சொந்த வீடே தேவையில்லை..

தொடர்ந்து, இருக்கைகளை தேவைக்கேற்ப சாய்த்து அல்லது நேராக நிமிர்த்து வைத்தும் பயன்படுத்திக் கொள்ள முடியும். ஆகையால், தேவைப்பட்டால் மினி கட்டிலாக இந்த இருக்கையை நீண்ட தூர பயணங்களின் அதன் உரிமையாளரால் மாற்றிக் கொள்ள முடியும். இத்துடன் அவ்விருக்கைக்கும் இடையில் மரக்கட்டை மற்றும் குரோம் பூச்சுகொண்ட கூல் ட்ரிங்க் ஹோல்டர்கள் நிறுவப்பட்டிருக்கின்றன.

உல்லாச கப்பலையே அசால்ட் செய்யும் கியா கார்னிவல்.. இது ஒன்றே போதும் சொந்த வீடே தேவையில்லை..

அவை, கூல் ட்ரிங்குகளை எப்போதுமே கூலிங்காகவே வைத்துக் கொள்ள உதவும். தொடர்ந்து, இரு இருக்கையிலும் அமர்பவர்கள் முழுமையாக எஞ்ஜாய் செய்ய வேண்டும் என்பதற்காக எல்சிடி டிவி பெட்டி முன் நிறுத்தப்பட்டுள்ளது. இது, பிரிமியம் தரம் கொண்ட ஸ்பீக்கர்கள் மூலம் ஒலியை வெளிப்படுத்தும். இத்துடன், பப்புகளில் காணப்படுவதைப் போன்று வண்ண மயமான மின் விளக்குகள் காரின் உட்பகுதியில் டிசி2 பொருத்தியிருக்கின்றது.

உல்லாச கப்பலையே அசால்ட் செய்யும் கியா கார்னிவல்.. இது ஒன்றே போதும் சொந்த வீடே தேவையில்லை..

இது, நாம் எந்த மூடில் இருந்தாலும் மிகவும் அமைதியாக மாற்றிவிடும். இம்மாதிரியான ஏராளமான வசதிகளை டிசி2 நிறுவனம் கியா கார்னிவல் எம்பிவி காரில் வாரி வழங்கியிருக்கின்றது. இதனால், இந்த காரைப் பார்ப்போர் ஒரு நிமிடம் நிச்சயம் தலை சுற்றிவிடுவார்கள் என்பதை நாங்கள் உறுதியுடன் தெரிவிக்கின்றனர். சாதாரணமாகவே கியா கார்னிவல் காரின் அம்சங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்தும் வகையில் இருக்கின்றன.

உல்லாச கப்பலையே அசால்ட் செய்யும் கியா கார்னிவல்.. இது ஒன்றே போதும் சொந்த வீடே தேவையில்லை..

இதில், டிசி2 நிறுவனம் மேற்கொண்ட முயற்சி கூடுதலாக ஆச்சரியத்தின் உச்சபட்ச விளிம்பிற்கே கொண்டு சென்றுவிடுகின்றது.

கியா நிறுவனம், இந்த காரை மூன்று விதமான தேர்வுகளில் விற்பனைச் செய்து வருகின்றது. இதன் ஆரம்ப நிலை மாடலுக்கு ரூ. 24.95 லட்சம் என்ற விலையையும், உயர் ரக மாடலுக்கு ரூ. 33.95 லட்சம் என்ற விலையும் அது நிர்ணயித்துள்ளது. இது தலை நகர் டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலையாகும்.

Most Read Articles

English summary
India's First Modified Kia Carnival. Read In Tamil.
Story first published: Thursday, April 2, 2020, 15:05 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X