இந்தியாவின் முதல் மாடிஃபை டாடா அல்ட்ராஸ் கார் இதுதான் போல!! பார்க்க சும்மா நச்சுனு இருக்கு!

மிக அதிகமாக மாடிஃபை செய்யப்பட்ட இந்தியாவின் முதல் டாடா அல்ட்ராஸ் காரை பற்றிய விபரங்கள் வெளிவந்துள்ளன. அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தியாவின் முதல் மாடிஃபை டாடா அல்ட்ராஸ் கார் இதுதான் போல!! பார்க்க சும்மா நச்சுனு இருக்கு!

இந்திய சந்தையில் டாடா அல்ட்ராஸ் ப்ரீமியம் ஹேட்ச்பேக் காராக இந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. விற்பனையில் இதற்கு மாருதி சுஸுகி பலேனோ, ஹூண்டாய் ஐ20, டொயோட்டா க்ளான்ஸா, ஹோண்டா ஜாஸ் மற்றும் ஃபோக்ஸ்வேகன் போலோ உள்ளிட்டவை போட்டியாக உள்ளன.

இந்தியாவின் முதல் மாடிஃபை டாடா அல்ட்ராஸ் கார் இதுதான் போல!! பார்க்க சும்மா நச்சுனு இருக்கு!

டாடாவின் இம்பேக்ட் 2.0 ஸ்டைலிங் மொழியில் உருவாக்கப்பட்டுள்ள அல்ட்ராஸின் தோற்றம் பிரிவில் உள்ள மற்ற ப்ரீமியம் ஹேட்ச்பேக் கார்களுக்கு சரியான போட்டியாக மிகவும் அருமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த மாதங்களில் அல்ட்ராஸின் மூலமாக கணிசமான விற்பனை எண்ணிக்கைகளை டாடா நிறுவனம் பதிவு செய்துள்ளது.

இந்தியாவின் முதல் மாடிஃபை டாடா அல்ட்ராஸ் கார் இதுதான் போல!! பார்க்க சும்மா நச்சுனு இருக்கு!

இதன் தோற்றம் பலரை கவர்ந்திருந்தாலும், சிலருக்கு போதவில்லை போல. அத்தகையவர்களில் ஒருவர் தனது அல்ட்ராஸ் காரை இந்தியாவில் முதல் ஆளாக மிக அதிகமான மாடிஃபை மாற்றங்களுக்கு உட்படுத்தியுள்ளார்.

இந்தியாவின் முதல் மாடிஃபை டாடா அல்ட்ராஸ் கார் இதுதான் போல!! பார்க்க சும்மா நச்சுனு இருக்கு!

இந்த அல்ட்ராஸின் உரிமையாளர் பெயர் அமல்ஜித். கேரளாவை சேர்ந்தவரான இவர் தனது அல்ட்ராஸ் காரில் 17 இன்ச்சில் மெக்கேலின் ரப்பரால் சூழப்பட்ட சந்தைக்கு பிறகான மல்டி-ஸ்போக் அலாய் சக்கரங்களை பொருத்தியுள்ளார்.

இந்தியாவின் முதல் மாடிஃபை டாடா அல்ட்ராஸ் கார் இதுதான் போல!! பார்க்க சும்மா நச்சுனு இருக்கு!

க்ரோம்களை இழந்துள்ள இந்த மாடிஃபை காரில் ப்ரேக் காலிபர்கள் மஞ்சள் நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளன. தொழிற்சாலையில் பொருத்தப்பட்ட எக்ஸாஸ்ட் குழாய்க்கு மாற்றாக ரெமுஸ் வால்வ்ட்ரோனிக் எக்ஸாஸ்ட் பொருத்தப்பட்டுள்ளது.

இந்தியாவின் முதல் மாடிஃபை டாடா அல்ட்ராஸ் கார் இதுதான் போல!! பார்க்க சும்மா நச்சுனு இருக்கு!

எக்ஸாஸ்ட் வெளிப்படுத்தும் சத்தத்தை அதிகரிக்கவும், குறைக்கவும் ஒரு பொத்தானை அழுத்தினாலே போதும். காரின் முன்பக்கத்தில் சைடு ஸ்கிர்ட்ஸ் உடன் ஸ்பிளிட்டரையும் பார்க்க முடிகிறது. இவற்றுடன் கூடுதலாக ஹெட்லேம்ப் ஸ்மோக் டிண்ட் செய்யப்பட்டுள்ளது. மற்றப்படி என்ஜின் அமைப்பில் மாற்றம் இருக்க வாய்ப்பில்லை.

இந்தியாவின் முதல் மாடிஃபை டாடா அல்ட்ராஸ் கார் இதுதான் போல!! பார்க்க சும்மா நச்சுனு இருக்கு!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அல்ட்ராஸில் 1.2 லிட்டர், 3-சிலிண்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் 4-சிலிண்டர் டீசல் என்ற இரு என்ஜின்களை தேர்வுகளாக வழங்குகிறது. இருப்பினும் ட்ரான்ஸ்மிஷன் தேர்வாக ஒரே 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும் தான் வழங்கப்படுகிறது.

Most Read Articles

English summary
India’s First Heavily Modified Tata Altroz Is From Kerala, And It Looks Rad!
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X