இந்தியாவில் சுற்றி திரியும் வெளிநாட்டு பதிவெண் கொண்ட கார்கள்.. அம்பானியிடமே இல்லாத அரிய கார்கள்..!

உலக செல்வந்தர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் அம்பானியிடமே இல்லாத வகையிலான கார்கள் இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

இந்தியாவில் சுற்றி திரியும் வெளிநாட்டு பதிவெண்ணுடைய ஆடம்பர கார்கள்... அம்பானியிடமே இம்மாதிரியான அரிய கார்கள் இல்லையாம்...

தலைப்பைக் கேட்டு உங்களுக்கு குழப்பம் ஏற்பட்டிருக்கலாம். என்ன, இந்தியாவில் வெளிநாட்டு பதிவெண் கொண்ட வாகனங்கள் இயக்கப்படுகின்றதா? சும்மா கத விடாதீங்க பாஸ் என்றும் கேட்க தோன்றலாம். நிச்சயம் இது உண்மை. இந்திய சாலைகளில் துபாய், அரபு உள்ளிட்ட நாடுகளின் பதிவெண் கொண்ட சொகுசு ஆடம்பர ரக கார்கள் இறக்குமதி செய்யப்பட்டு, பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் சுற்றி திரியும் வெளிநாட்டு பதிவெண்ணுடைய ஆடம்பர கார்கள்... அம்பானியிடமே இம்மாதிரியான அரிய கார்கள் இல்லையாம்...

இம்மாதிரி வெளிநாட்டு பதிவெண் கொண்ட கார்கள் கார்நெட் என்பதன் வழியாக இந்தியாவில் இறக்குமதி செய்யப்படுகின்றன.

சாதாரணமாக வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு நாம் எதிர்பாராத வகையில் வரி விதிக்கப்படுகின்றன. அந்த வரியானது அந்த காரை புதிதாக வாங்குவதைக் காட்டிலும் இரு மடங்காக இருக்கும்.

இந்தியாவில் சுற்றி திரியும் வெளிநாட்டு பதிவெண்ணுடைய ஆடம்பர கார்கள்... அம்பானியிடமே இம்மாதிரியான அரிய கார்கள் இல்லையாம்...

இதனாலயே, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கார்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இந்தியாவில் காணப்படுகின்றது. இருப்பினும், இந்தியச் சாலைகளில் இம்மாதிரியான அதி-திறன் வாய்ந்த ஆடம்பர கார்களின் எண்ணிக்கை அண்மைக் காலங்களாக உயரத் தொடங்கியிருக்கின்றது. அந்தவகையில், இறக்குமதிச் செய்யப்படும் வாகனங்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயரத் தொடங்கியுள்ளது.

இந்தியாவில் சுற்றி திரியும் வெளிநாட்டு பதிவெண்ணுடைய ஆடம்பர கார்கள்... அம்பானியிடமே இம்மாதிரியான அரிய கார்கள் இல்லையாம்...

ஆனால், கார்நெட் வழியாக இந்தியாவில் வெளிநாட்டு பதிவெண்ணுடன் இறக்குமதிச் செய்யப்படும் வாகனங்களை இயக்க சில காலங்கள் மட்டுமே அதிகாரப்பூர்வமாக இயக்க முடியும். இதனை மீறி இயக்கும்போது அது சட்டத்திற்கு புரம்பான நடவடிக்கையாக மாறிவிடும். ஆகையால், காலம் முடிவடைவதற்குள்ளாக இந்திய பதிவெண்ணிற்கு மாற்றம் செய்தல் அல்லது உரிய நாட்டிற்கே திரும்ப எடுத்தச் செல்லுதல் மட்டுமே முடியும்.

இந்தியாவில் சுற்றி திரியும் வெளிநாட்டு பதிவெண்ணுடைய ஆடம்பர கார்கள்... அம்பானியிடமே இம்மாதிரியான அரிய கார்கள் இல்லையாம்...

இந்த வகையிலான குறிப்பிட்ட வாகனங்களைப் பற்றிதான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம். இந்தியாவில் வெளிநாட்டு பதிவெண் கொண்ட ஐந்து வாகனங்கள் அதிகாரப்பூர்வமாக இயக்கப்பட்டு வருகின்றன. அதில், அதி-திறனுடைய டாட்ஜ் சேலஞ்ஜர் எஸ்ஆர்டி முதல் ஜிஎம்சி சியாரா வரை அடங்கும். வாருங்கள் அதுகுறித்த தகவலை பார்க்கலாம்.

இந்தியாவில் சுற்றி திரியும் வெளிநாட்டு பதிவெண்ணுடைய ஆடம்பர கார்கள்... அம்பானியிடமே இம்மாதிரியான அரிய கார்கள் இல்லையாம்...

டாட்ஜ் சேலஞ்ஜர் எஸ்ஆர்டி (Dodge Challenger SRT)

டாட்ஜ் சேலஞ்ஜர் எஸ்ஆர்டி இந்த கார் துபாயில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இது தற்போது மும்பையில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த கார் கட்டுமஸ்தான உடல்வாகு உடைய சிறப்பான காராகும். குறிப்பாக அதிவேக ஓடு திறனுக்கு ஏற்ப இதன் தோற்றம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, இதன் எஞ்ஜின் திறனும் நம்மை பிரம்மிப்பில் ஆழ்த்தும் வகையில் இருக்கின்றது.

இந்தியாவில் சுற்றி திரியும் வெளிநாட்டு பதிவெண்ணுடைய ஆடம்பர கார்கள்... அம்பானியிடமே இம்மாதிரியான அரிய கார்கள் இல்லையாம்...

Source: Car Crazy India/Instagram

ஆனால், தற்போது காட்சியளித்திருக்கும் டாட்ஜ் சேலஞ்ஜரில் எந்த வெர்ஷன் கொண்ட எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது என உறுதியாக தெரியவில்லை. இருப்பினும், இந்த காரில் இருவிதமான தேர்விலேயே எஞ்ஜின் உள்ளது. அதில் ஒன்று 5.7 லிட்டர் எச்இஎம்ஐ வி8 எஞ்ஜின் பயன்படுத்தப்படுகின்றது.

இந்தியாவில் சுற்றி திரியும் வெளிநாட்டு பதிவெண்ணுடைய ஆடம்பர கார்கள்... அம்பானியிடமே இம்மாதிரியான அரிய கார்கள் இல்லையாம்...

இது அதிகபட்சமாக 375 பிஎச்பி திறனை வெளிப்படுத்தக்கூடியது. இதேபோன்று, இதன் உயர்நிலை வேரியண்டில் 6.4 லிட்டர் வி8 எஞ்ஜின் பயன்படுத்தப்படுகின்றது. இது அதிகபட்சமாக 485 பிஎச்பி திறனை வெளிப்படுத்தும். இவ்விரு எஞ்ஜின்களுமே பெட்ரோல் எஞ்ஜின்களாகும்.

இந்தியாவில் சுற்றி திரியும் வெளிநாட்டு பதிவெண்ணுடைய ஆடம்பர கார்கள்... அம்பானியிடமே இம்மாதிரியான அரிய கார்கள் இல்லையாம்...

ஷெல்பி ஜிடி500 கன்வெர்டபிள் (Shelby GT500 convertible)

இந்தியாவின் முதல் மற்றும் ஒரே ஒரு ஷெல்பி கார் என்றால் அது இந்த கார் மட்டும்தான். இந்த காரை புனேவில் உள்ள தொழிலதிபர் ஒருவர் பயன்படுத்தி வருகின்றார். நாம் கூறியதன்படி இவர் மட்டுமே இந்த காரை இந்தியாவில் பயன்படுத்தி வருகின்றார். பல ஆடம்பர கார்களைப் பயன்படுத்தி வரும் முகேஷ் அம்பானியிடம்கூட இந்த கார் இல்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்தியாவில் சுற்றி திரியும் வெளிநாட்டு பதிவெண்ணுடைய ஆடம்பர கார்கள்... அம்பானியிடமே இம்மாதிரியான அரிய கார்கள் இல்லையாம்...

Source: Car Crazy India/Instagram

இந்த கார் பார்ப்பதற்கு மிகவும் புதிது போன்று அழகாக காட்சியளிக்கின்றது. அந்தளவிற்கு அதன் உரிமையாளர் அதனை பராமரித்து வருகின்றார். இந்த ஷெல்பி ஜிடி500 மடாலை அந்நிறுவனம் 2013ம் ஆண்டிலேயே விற்பனைக்கு அறிமுகம் செய்துவிட்டது. ஆனால், இந்தியாவில் இந்நிறுவனத்தின் கார்கள் விற்பனைக்குக் கிடைப்பதில்லை. தேவைப்பட்டால், வெளிநாட்டில் உள்ள டீலர்களின்மூலம் மட்டுமே இதனை இறக்குமதிச் செய்து பயன்படுத்த முடியும்.

இந்தியாவில் சுற்றி திரியும் வெளிநாட்டு பதிவெண்ணுடைய ஆடம்பர கார்கள்... அம்பானியிடமே இம்மாதிரியான அரிய கார்கள் இல்லையாம்...

இந்த காரில் 5.8 லிட்டர் வி8 பெட்ரோல் எஞ்ஜின் பயன்படுத்தப்படுகின்றது. இது அதிகபட்சமாக 662 பிஎச்பி பவரையும், 856 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனைக் கொண்டிருக்கின்றது. இந்த அதீத திறனானது 0த்தில் இருந்து 100 என்ற வேகத்தை வெறும் 3.6 நொடிகளிலேயே தொட வைக்கும். அதேசமயம், இது மணிக்கு 322 கிமீ வேகத்தில் செல்லும் திறனைக் கொண்டிருக்கின்றது.

இந்தியாவில் சுற்றி திரியும் வெளிநாட்டு பதிவெண்ணுடைய ஆடம்பர கார்கள்... அம்பானியிடமே இம்மாதிரியான அரிய கார்கள் இல்லையாம்...

செவ்ரோலட் கேமரோ எஸ்எஸ் ரோட்ஸ்டர் (Chevrolet Camaro SS Roadster)

இந்தியாவில் மிக அரிய வகையில் காணப்படும் கார்களில் ஒன்றுதான் செவ்ரோலட் கேமரோ எஸ்எஸ் ரோட்ஸ்டர். அதில் ஒன்றுதான் தற்போது இந்தியாவில் காட்சியளித்துள்ளது. இது புதிய தலைமுறை காராகும். அதன் தோற்றத்தை வைத்தே நம்மால் இதனை உறுதியாக கூறிவிட முடியும்.

இந்த கார் வெளிநாட்டில் இறக்குமதி செய்யப்பட்ட கார் என்பதால் இடது பக்க ஸ்டியரிங் வீல் அமைப்பைக் கொண்டிருக்கின்றது.

இந்தியாவில் சுற்றி திரியும் வெளிநாட்டு பதிவெண்ணுடைய ஆடம்பர கார்கள்... அம்பானியிடமே இம்மாதிரியான அரிய கார்கள் இல்லையாம்...

Source: Car Crazy India/Instagram

மேலும், செவ்ரோலட் நிறுவனம் இந்த காரை பல விதமான தேர்வுகளில் வழங்கி வருகின்றது. 2.0 லிட்டர், 3.6 லிட்டர், 6.2 லிட்டர் ஆகிய தேர்வுகளில் இந்த கார் வெளிநாடுகளில் விற்பனைக்கு கிடைக்கின்றது. இதில், 2.0 லிட்டர் எஞ்ஜின் 275 பிஎச்பி திறனையும், 3.6 லிட்டர் வி6 எஞ்ஜின் 335 பிஎச்பி பவரையும், 6.2 லிட்டர் வி8 எஞ்ஜின் 455 பிஎச்பி பவரையும் வெளிப்படுத்தும் திறனைக் கொண்டிருக்கின்றது.

இந்தியாவில் சுற்றி திரியும் வெளிநாட்டு பதிவெண்ணுடைய ஆடம்பர கார்கள்... அம்பானியிடமே இம்மாதிரியான அரிய கார்கள் இல்லையாம்...

ஜிஎம்சி சியாரா ஜிஎல்இ (GMC Sierra GLE)

ஜிஎம்டி சியாரா கார் அரபு நாட்டில் இருந்து இறக்குமதிச் செய்யப்பட்டு இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த கார் தற்போது மும்பை சாலையில் வளம் வந்துக் கொண்டிருக்கின்றது. இந்த காரும் கார்நெட் வாயிலாக இந்தியாவில் இறக்குமதிச் செய்யப்பட்டு உபயோகப்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்தியாவில் சுற்றி திரியும் வெளிநாட்டு பதிவெண்ணுடைய ஆடம்பர கார்கள்... அம்பானியிடமே இம்மாதிரியான அரிய கார்கள் இல்லையாம்...

Source: Car Crazy India/Instagram

இந்த கார் முதல் முறையாக 2014ம் ஆண்டிலேயே உலகில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில், 4.3 லிட்டர் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது அதிகபட்சமாக 285 பிஎச்பி மற்றும் 305 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறனைக் கொண்டது.

இந்தியாவில் சுற்றி திரியும் வெளிநாட்டு பதிவெண்ணுடைய ஆடம்பர கார்கள்... அம்பானியிடமே இம்மாதிரியான அரிய கார்கள் இல்லையாம்...

டாட்ஜ் ரேம் 1500 (Dodge Ram 1500)

டாட்ஜ் ரேம் ஓர் பிக்-அப் டிரக் ரக வாகனமாகும். இந்த காரை குஜராத்தைச் சேர்ந்த கோண்டல் ராயல் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த காரை பார்ப்பதற்கு 2000வது ஆண்டில் களமிறக்கப்பட்ட மாடலைப் போன்ற காட்சியளிக்கின்றது.

இந்தியாவில் சுற்றி திரியும் வெளிநாட்டு பதிவெண்ணுடைய ஆடம்பர கார்கள்... அம்பானியிடமே இம்மாதிரியான அரிய கார்கள் இல்லையாம்...

Source: Car Crazy India/Instagram

இதில் அதீத திறனை வழங்கும் விதமாக 4.7 லிட்டர் வி8 எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது, அதிகபட்சமாக 238 பிஎச்பி திறனை வெளிப்படுத்தும் தன்மையுடையது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
India’s Latest Super Exotic Cars With Foreign Reg Plates. Read In Tamil.
Story first published: Friday, March 20, 2020, 13:52 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X