இந்தியாவின் அதிக பாதுகாப்பான கார்கள் இவைதான்.. ரூ.10லட்சம் விலையில் கிடைக்கும் வாகனங்களின் பட்டியல்!

ரூ. 10 லட்சத்திற்கும் குறைவாக இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கும் அதிக பாதுகாப்பு நிறைந்த கார்களைப் பற்றிய தகவலை இந்த தொகுப்பில் காணலாம்.

இந்தியாவின் அதிக பாதுகாப்பான கார்கள் இவைதான்.. ரூ.10 லட்சம் விலையில் கிடைக்கும் வாகனங்களின் பட்டியல்!

நாம் உல்லாசமாக பயணம் மேற்கொள்வதற்கு வாகனங்கள் எந்த அளவிற்கு முக்கியமோ, அதை விட பல மடங்கு முக்கியமானது அவை பாதுகாப்பானதா., என்பதுதான். ஒரு சிறு தவறுகூட இன்ப சுற்றுலாவை மிக மோசமான அனுபவம் கொண்ட நிகழ்வாக மாற்றிவிடும். இம்மாதிரியான நேரங்களில் அதிக பாதுகாப்பு வசதிக் கொண்ட கார்களே நமக்கு உதவியாக இருக்கும்.

இந்தியாவின் அதிக பாதுகாப்பான கார்கள் இவைதான்.. ரூ.10 லட்சம் விலையில் கிடைக்கும் வாகனங்களின் பட்டியல்!

அவை விபத்து நேர்ந்தாலும் நமக்கு பிடித்தமானவர்களை இழக்க அனுமதிக்காது. அந்தவகையிலான பல கார்கள் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஒரு சில கார்கள் பத்து லட்சம் ரூபாயக்கும் குறைந்த விலையில் கிடைக்கின்றன. அவ்வாறு, இந்தியாவில் கிடைக்கும் பாதுகாப்பு நிறைந்த கார்களைப் பற்றிய தகவலைதான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம்.

இந்தியாவின் அதிக பாதுகாப்பான கார்கள் இவைதான்.. ரூ.10 லட்சம் விலையில் கிடைக்கும் வாகனங்களின் பட்டியல்!

நாம் பார்க்கவிருக்கும் அனைத்து கார்களும், க்ராஷ் டெஸ்ட் எனப்படும் விபத்து பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவை ஆகும். இந்த பரிசோதனையானது, எதிர்பாராத அசம்பாவிதங்களில் இருந்து, கார்கள் எப்படி பயணி பாதுகாக்கும் என செய்யப்படும் ஆய்வு ஆகும். இந்த பரிசோதனையில் தேர்ச்சி பெற்ற கார்களைதான் நாம் இங்கு பார்க்கவிருக்கின்றோம்.

இந்தியாவின் அதிக பாதுகாப்பான கார்கள் இவைதான்.. ரூ.10 லட்சம் விலையில் கிடைக்கும் வாகனங்களின் பட்டியல்!

அதாவது நல்ல தரமான கார் என்ற பெயரை வாங்கியவற்றை பற்றி மட்டுமே பார்க்க இருக்கின்றோம். அதுவும், ரூ. 10 லட்சம் என்ற குறைந்த விலையில், இந்தியாவில் விற்பனையாகும் கார்களைதான் இங்கு தொகுத்து வழங்கியுள்ளோம். வாருங்கள் பார்க்கலாம்...

இந்தியாவின் அதிக பாதுகாப்பான கார்கள் இவைதான்.. ரூ.10 லட்சம் விலையில் கிடைக்கும் வாகனங்களின் பட்டியல்!

மஹிந்திரா எக்ஸ்யூவி300

பாதுகாப்பான கார்களின் பட்டியலில் முதலில் மஹிந்திரா எக்ஸ்யூவி300 காரைதான் நாம் பார்க்கவிருக்கின்றோம். இந்த பாதுகாப்புகுறித்து செய்யப்பட்ட க்ராஷ் டெஸ்டில் ஐந்திற்கு 5 நட்சத்திரங்களைப் பெற்று முன்னணியில் இருக்கின்றது. இதனை குலோபல் என்சிஏபி என்ற அமைப்பு மோதல் வினைக்கு உட்படுத்தி இந்த முடிவை கடந்த ஆண்டு வெளியிட்டது. ஆகையால், இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் அதிக பாதுகாப்பு தரம் வாய்ந்த கார் என்ற பட்டத்தை மஹிந்திரா எக்ஸ்யூவி300 பெற்றுள்ளது.

இந்தியாவின் அதிக பாதுகாப்பான கார்கள் இவைதான்.. ரூ.10 லட்சம் விலையில் கிடைக்கும் வாகனங்களின் பட்டியல்!

எஸ்யூவி தரத்திலான இந்த காரில் பயணிக்கும்போது சிறுவர்களுக்கு அதிகபட்சமாக 4 நட்சத்திர பாதுகாப்பையும், பெரியவர்களுக்கு 5 நட்சத்திர பாதுகாப்பை வழங்கும். இந்த காரின் ஆரம்பநிலை மாடல் ரூ. 9.65 லட்சம் என்ற விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. அதேசமயம், இதன் உயர்நிலை மாடல் ரூ. 15.41 லட்சத்திற்கு விற்கப்படுகின்றது. ஆரம்பநிலை மாடலைக் காட்டிலும் உயர்நிலை மாடலில் அதிக பாதுகாப்பு அம்சம் இருப்பது குறிப்பிடத்தகுந்தது.

டாடா அல்ட்ராஸ்

இந்திய நான்கு சக்கர வாகன உலகின் ஜாம்பவான் என்று போற்றப்படும் டாடாவின் அல்ட்ராஸ், பாதுகாப்பு திறனில் ஐந்து நட்சத்திரங்களைப் பெற்றிருக்கின்றது. இந்த காரின் பாதுகாப்புகுறித்த பரிசோதனையையும் குலோபல் என்சிஏபி அமைப்பே செய்துள்ளது.

டாடா அல்ட்ராஸ் குழந்தைகளின் பாதுகாப்பு தரத்தில் குறைந்த நட்சத்திரங்களையேப் பெற்றிருக்கின்றது. அதாவது, 3 ஸ்டார்களை மட்டும் அது பெற்றுள்ளது.

இந்தியாவின் அதிக பாதுகாப்பான கார்கள் இவைதான்.. ரூ.10 லட்சம் விலையில் கிடைக்கும் வாகனங்களின் பட்டியல்!

ஆனால், பெரியவர்களின் பாதுகாப்பில் அதிகபட்சமாக 5 நட்சத்திரங்களைப் பெற்று அசத்தியுள்ளது. இந்த காரில் அனைத்து நிலை வேரியண்டுகளில் இரு ஏர் பேக்குகள் ஸ்டாண்டர்டு பாதுகாப்பு அம்சமாக வழங்கப்பட்டு வருகின்றது. இதுதவிர மேலும் பல பாதுகாப்பு அம்சங்களையும் டாடா இந்த காரில் வழங்கி வருகின்றது. அது எதிர்பாராத விபத்து காலத்தில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும். இந்த காரின் ஆரம்ப நிலை மாடல் ரூ. 7 லட்சத்திற்கும் குறைவான விலையில் கிடைக்கின்றது. ஆனால், இதன் உயர்நிலை ரூ. 10 லட்சத்திற்கும் அதிகமாக உள்ளது.

டாடா நெக்ஸான்

இந்தியாவின் முதல் பாதுகாப்பான கார் என்ற பட்டத்தை சூடிய மாடல்தான் டாடா நெக்ஸான். அதாவது, டாடா அல்ட்ராஸ் மாடலுக்கு முன்பே நெக்ஸான் அதிக பாதுகாப்பு நிறைந்த கார் என்ற வாகையை சூடிவிட்டது. இந்த கார் க்ராஷ் டெஸ்ட் சோதனையில் ஐந்திற்கு ஐந்து நட்சத்திரங்கள் என்ற நன்மதிப்பைப் பெற்றிருக்கின்றது.

இந்த கார் விபத்து காலங்களில் கழுத்து, தலை, கால் என பல பகுதிகளுக்கு நல்ல பாதுகாப்பை வழங்கியதன் காரணத்தால் இந்த நற்சான்றை அது பெற்றிருக்கின்றது.

இந்தியாவின் அதிக பாதுகாப்பான கார்கள் இவைதான்.. ரூ.10 லட்சம் விலையில் கிடைக்கும் வாகனங்களின் பட்டியல்!

இந்த அமோகமான மதிப்பை பெரியவர்களுக்கு மட்டுமின்றி சிறியவர்கள் மற்றும் 18 மாத குழந்தைகள் என அனைவருக்கும் வழங்கும் திறனைப் பெற்றிருக்கின்றது.

டாடாவின் முதல் பாதுகாப்பு நிறைந்த கார் என்ற அங்கீகாரம் பெற்ற நெக்ஸான் இந்தியாவில் ரூ. 8.09 லட்சம் என்ற ஆரம்ப விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

டாடா டியாகோ மற்றும் டிகோர்

டாடா நிறுவனத்தின் அல்ட்ராஸ் மற்றும் நெக்ஸான் ஆகிய இரு கார்கள் மட்டுமே பாதுகாப்பு நிறைந்த கார்கள் என்ற பட்டத்தைச் சூடவில்லை. அதன் மற்றுமொரு தயாரிப்புகளான டியாகோ மற்றும் டிகோர் ஆகிய இரு கார்களும் அதிக பாதுகாப்பு நிறைந்தவை என்ற புகழைச் சூடியிருக்கின்றன.

இந்த கார்கள் அண்மையில் நடத்தப்பட்ட க்ராஷ் டெஸ்ட்டில் ஐந்திற்கு ஐந்து நட்சத்திரங்களைப் பெற்றது.

இந்தியாவின் அதிக பாதுகாப்பான கார்கள் இவைதான்.. ரூ.10 லட்சம் விலையில் கிடைக்கும் வாகனங்களின் பட்டியல்!

டியாகோ மற்றும் பார்ப்பதற்கு ஒரே மாதிரியானதாக காட்சியளித்தாலும் இவ்விரு கார்களுக்கும் இடையே பல்வேறு வித்தியாசங்கள் காணப்படுகின்றன. ஆனாலும், பாதுகாப்பு தரத்தில் சிறு துளியளவும் வித்தியாசத்தை இவை கொண்டிருக்கவில்லை.

இந்தியாவின் பெஸ்ட் பட்ஜெட் கார்கள் என்றழைக்கப்படும் இவை ரூ. 10 லட்சத்திற்கும் குறைவான விலையில் விற்பனைக்கு கிடைக்கின்றன.

ஃபோக்ஸ்வேகன் போலோ

தொடர்ச்சியாக டாடா நிறுவனத்தின் கார்களையேப் பார்ததால் இந்தியாவில் வேறெந்த காரும் பாதுகாப்பு நிறைந்தவையாக இல்லையா., என்ற கேள்வி உங்களுக்கு எழும்பியிருக்கலாம். இருக்கின்றது என்பதுதான் எங்கள் பதில்.

இந்தியாவின் அதிக பாதுகாப்பான கார்கள் இவைதான்.. ரூ.10 லட்சம் விலையில் கிடைக்கும் வாகனங்களின் பட்டியல்!

ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் ஹேட்ச்பேக் மாடலான போலோ கார்தான் அது. இந்த கார் அண்மையில் நிகழ்த்தப்பட்ட க்ராஷ் டெஸ்ட்டில் நான்கு நட்சத்திரங்களைப் பெற்றது. மற்றக் கார்களைக் காட்டிலும் இது குறைவான நட்சத்திர தரம் என்றாலும், அதில் பயணிப்பவர்களுக்கு கணிசமான பாதுகாப்பை வழங்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இந்தியாவின் அதிக பாதுகாப்பான கார்கள் இவைதான்.. ரூ.10 லட்சம் விலையில் கிடைக்கும் வாகனங்களின் பட்டியல்!

இந்த காரில் பாதுகாப்பு அம்சமாக இரு ஏர் பேக்குகள் ஸ்டாண்டர்டு அம்சமாக வழங்கப்படுகின்றது. இதுதவிர வேறு சில பாதுகாப்பு அம்சங்களும் இந்த காரில் வழங்கப்பட்டுள்ளன. அவை குறைந்த பாதுகாப்பை வழங்கியதன் காரணத்தினாலயே நான்கு நட்சத்திரத்தை போலோ பெற்றுள்ளது.

இந்த கார் இந்தியாவில் ரூ. 5.82 லட்சம் என்ற ஆரம்ப விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதன் உயர்நிலை மாடலும் ரூ. 10 லட்சத்திற்கும் குறைவான விலையிலேயே கிடைக்கின்றது.

Most Read Articles

English summary
Indias Top 5 Safest Cars Under Rs. 10 Lakh. Read in Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X