டொயோட்டா இன்னோவாவை மாடிஃபை செய்தால் இப்படி இருக்கனும்!! இந்தியாவில் இல்லை..

விலையுயர்ந்த தோற்றத்திற்கு டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார் ஒன்று கஸ்டமைஸ்ட் செய்யப்பட்டுள்ளது. இந்த மாடிஃபை இன்னோவா காரை பற்றிய கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

டொயோட்டா இன்னோவாவை மாடிஃபை செய்தால் இப்படி இருக்கனும்!! இந்தியாவில் இல்லை..

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா இந்தியாவில் மிகவும் பிரபலமான கார் என்பது எல்லாருக்கும் தெரியும். ஏனெனில் டொயோட்டா என்ற பெயருடன் இந்த எம்பிவி கார் விசாலமான உட்புற வசதி மற்றும் சவுகரியத்தை வழங்குகிறது.

டொயோட்டா இன்னோவாவை மாடிஃபை செய்தால் இப்படி இருக்கனும்!! இந்தியாவில் இல்லை..

இந்தியாவை போல் இந்தோனிஷியாவிலும் டொயோட்டா இன்னோவாவிற்கு ஏகோபித்த வரவேற்பு கிடைத்து வருகிறது. அங்கு இந்த கார் டொயோட்டா கிஜங் இன்னோவா என்ற பெயரில் சந்தைப்படுத்தப்படுகிறது.

டொயோட்டா இன்னோவாவை மாடிஃபை செய்தால் இப்படி இருக்கனும்!! இந்தியாவில் இல்லை..

இதனால் இந்திய வாடிக்கையாளர்களை போல் அங்குள்ளவர்களும் தங்களது இன்னோவா கார்களை கஸ்டமைஸ்ட் செய்கின்றனர். இத்தகைய இந்தோனிஷிய கஸ்டமைஸ்ட் இன்னோவா காரை பற்றிதான் இந்த செய்தியில் பார்க்க போகிறோம்.

டொயோட்டா இன்னோவாவை மாடிஃபை செய்தால் இப்படி இருக்கனும்!! இந்தியாவில் இல்லை..

இந்த குறிப்பிட்ட கஸ்டமைஸ்ட் இன்னோவா காரின் உரிமையாளர் பெயர் க்ரிஸ்ட் ராஃபீல். இந்த காரின் முன்பக்கத்தில் கார்பன் ஃபைபர் ஃபினிஷ் செய்யப்பட்ட பிரிப்பான் உடன் காரின் உடல் நிறத்தில் கூடுதலாக க்ளாடிங் சேர்க்கப்பட்டுள்ளது.

ஹெட்லேம்ப்கள் இரு முனைகளிலும் எல்இடி ஸ்ட்ரிப்களுடன் இரட்டை ப்ரோஜெக்டர் அமைப்பை பெற்றுள்ளது. முன்பக்க க்ரில் அமைப்பிலும் எல்இடி ஸ்ட்ரிப்களுடன் லைட்டிங் சிஸ்டத்தை பார்க்க முடிகிறது.

மூடுபனி விளக்குகள் நீல நிற டிண்ட் உடன் உள்ளன. முன்பக்கத்தில் இருந்து பிரிப்பான் பக்கவாட்டிற்கும் தொடரப்பட்டுள்ளது. மேலும் காரின் பக்கவாட்டில் சக்கர வளைவுகள் மற்றும் கதவிற்கு அடிப்பகுதிகள் காரின் நிறத்திலேயே வழங்கப்பட்டுள்ளன.

டொயோட்டா இன்னோவாவை மாடிஃபை செய்தால் இப்படி இருக்கனும்!! இந்தியாவில் இல்லை..

கருப்பு நிற அலாய் சக்கரங்கள் பார்ப்பதற்கு உண்மையில் அழகாக உள்ளன. முன் சக்கரங்களில் ப்ரேக் காலிபர்கள் மஞ்சள் நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளன. பின்பக்க பம்பர் ஆனது ஃபாக்ஸ் டிஃப்யூஸர் உடன் காட்சியளிக்கிறது.

பின்பக்க டெயில்லைட்கள் எல்இடி தரத்தில் ஒரே துண்டாக வழங்கப்பட்டுள்ளன. காருக்கு ஸ்போர்டியான தோற்றத்தை வழங்கும் நோக்கில் மேற்கூரையின் இறுதியில் ஸ்பாய்லர் வழங்கப்பட்டுள்ளது. இந்த டொயோட்டா கிஜங் இன்னோவா காரில் 2.4 லிட்டர், டர்போசார்ஜ்டு, இன்லைன்-4 டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

டொயோட்டா இன்னோவாவை மாடிஃபை செய்தால் இப்படி இருக்கனும்!! இந்தியாவில் இல்லை..

அதிகப்பட்சமாக 149 பிஎஸ் மற்றும் 343 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்ட இந்த டீசல் என்ஜின் அமைப்பிலும் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த மாற்றங்களில் கே&என் மாற்று வடிக்கட்டி உடன் கஸ்டம் இண்டேக் சிஸ்டம், கஸ்டம் எக்ஸாஸ்ட் சிஸ்டம் மற்றும் கவர்ச்சிகர தோற்றத்தில் என்ஜின் மூடி உள்ளிட்டவை அடங்குகின்றன.

Most Read Articles
English summary
This Customised Toyota Innova Looks Macho With A Sporty Body Kit
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X