அறிமுகமானது எம்ஜி இசட்எஸ் மின்சார கார்.. அப்படி என்ன இருக்கு இந்த காரை வாங்க? வாருங்கள் பார்ப்போம்!

எம்ஜி நிறுவனம் அறிமுகம் செய்த இசட்எஸ் மின்சார காரில் அப்படி என்ன இருக்கு..? நாம் ஏன் அதனை வாங்கவேண்டும்..? என்பதுகுறித்த முழுமையான தகவலை இந்த பதிவில் காணலாம்.

விற்பனைக்கு அறிமுகமான எம்ஜி இசட்எஸ் மின்சார கார்.. அப்படி என்ன இருக்கு இந்த காரை வாங்க? வாருங்கள் பார்ப்போம்...

இங்கிலாந்தை மையமாகக் கொண்டு இயங்கும் எம்ஜி நிறுவனம், சீனாவை சேர்ந்த செயிக் குழுமத்தின் கீழ் செயல்பட்டு வருகின்றது.

இந்நிறுவனம், அதன் எஸ்யூவி ரக காரான ஹெக்டர் மாடலைக் கொண்டு இந்தியாவில் கால் தடம் பதித்தது. இதைத்தொடர்ந்து, இந்தியாவிற்கான இரண்டாவது காரையும் அந்நிறுவனம் இன்று (ஜனவரி 23) அறிமுகம் செய்தது. அது பெட்ரோல் மற்றும் டீசல் அல்லாத மின்சார ரக வாகனம் ஆகும்.

விற்பனைக்கு அறிமுகமான எம்ஜி இசட்எஸ் மின்சார கார்.. அப்படி என்ன இருக்கு இந்த காரை வாங்க? வாருங்கள் பார்ப்போம்...

எம்ஜி நிறுவனத்தின் ஹெக்டர் எஸ்யூவி காருக்கு நிலவி வரும் அதே வரவேற்பு எம்ஜி இசட்எஸ் பென்ற பெயரில் அறிமுகமாகியுள்ள இந்த எஸ்யூவி ரக எலெக்ட்ரிக் காருக்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேசமயம், இந்த நம்பிக்கைக்கு பலன் கிடைக்கின்ற வகையில் எலெக்ட்ரிக்கு சிறப்பான அளவில் புக்கிங் நடைபெற்று வருகின்றது.

இதற்கு, எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் காரில் நிறுவப்பட்டுள்ள பல்வேறு சிறப்பம்சங்கள் முக்கிய காரணமாக இருக்கின்றன.

விற்பனைக்கு அறிமுகமான எம்ஜி இசட்எஸ் மின்சார கார்.. அப்படி என்ன இருக்கு இந்த காரை வாங்க? வாருங்கள் பார்ப்போம்...

எம்ஜி இசட்எஸ் கார் சுற்றுப்புறச்சூழலுக்கு துளியளவும் மாசினை ஏற்படுத்தாது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுவே இந்த காரை நாம் வாங்க வேண்டும் என்பதற்கான முக்கிய காரணமாக இருக்கின்றது. இதுமட்டுமின்றி, இந்த காரை விரைவில் வாங்க வேண்டும் என்பதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. அவற்றைதான் இந்த பதிவில் நாம் காணவிருக்கின்றோம்.

குறிப்பாக இந்த கார் எரிபொருள் வாகனத்தைக் காட்டிலும் மிகக்குறைந்த விலையில் நாம் பயணிக்க மிக உதவியாக இருக்கும்.

விற்பனைக்கு அறிமுகமான எம்ஜி இசட்எஸ் மின்சார கார்.. அப்படி என்ன இருக்கு இந்த காரை வாங்க? வாருங்கள் பார்ப்போம்...

அதாவது, எரிபொருள் காரில் நாம் ஒரு கிமீ செல்ல ரூ. 7 வரை செலவு செய்ய வேண்டியிருக்கும். ஆனால், எம்ஜி நிறுவனத்தின் இந்த புத்தம் புதிய இசட்எஸ் எலெக்ட்ரிக் காரில் ஒரு கிமீ செல்ல 1 ரூபாய்க்கும் குறைவாக செலவாகும். அதற்கேற்பவகையில், இதன் பேட்டரி பேக்-அப் மற்றும் ரேஞ்ச் உள்ளிட்டவை இருக்கின்றன.

விற்பனைக்கு அறிமுகமான எம்ஜி இசட்எஸ் மின்சார கார்.. அப்படி என்ன இருக்கு இந்த காரை வாங்க? வாருங்கள் பார்ப்போம்...

இதில் என்ன நல்லது உள்ளது?

எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் காரில் 44.5kWh கொண்ட திரவ குளிரூட்டப்பட்ட லித்தியம் அயன் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இது ஒரு முழுமையான சுமார் 340 கி.மீ. வரை ரேஞ்ச் வழங்கும். அதுமட்டுமின்றி, 0-த்தில் இருந்து 100 கிமீ என்ற வேகத்தை வெறும் 8.5 செகண்டுகளிலேயே தொட்டுவிடும். அந்த அளவிற்கு இசட்எஸ் மின்சார காரின் மின் மோட்டார் அதீத திறன் வாய்ந்ததாக இருக்கின்றது.

விற்பனைக்கு அறிமுகமான எம்ஜி இசட்எஸ் மின்சார கார்.. அப்படி என்ன இருக்கு இந்த காரை வாங்க? வாருங்கள் பார்ப்போம்...

தொடர்ந்து, இந்த கார் பயணிகளின் பாதுகாப்பில் ஐந்து நட்சத்திரங்களைப் பெற்றிருக்கின்றது என்பது மிகச்சிறந்த ஓர் விஷயம். இந்த காரை அண்மையில் க்ராஷ் டெஸ்ட்டிற்கு உட்படுத்திய யூரோ என்சிஏபி அமைப்பு இதனை உறுதி செய்துள்ளது. இதுகுறித்து நமது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் வெளியிட்ட செய்தியை இங்கு க்ளிக் செய்வதன் மூலம் உங்களால் படிக்க முடியும்.

விற்பனைக்கு அறிமுகமான எம்ஜி இசட்எஸ் மின்சார கார்.. அப்படி என்ன இருக்கு இந்த காரை வாங்க? வாருங்கள் பார்ப்போம்...

பிரிமியம் மற்றும் சொகுசு வசதிகள்:

எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் காரின் டாப் எண்ட் வேரியண்டில் மட்டும் கூடுதல் பிரிமியம் வசதிகள் காணப்படுகின்றது. குறிப்பாக, லக்சூரி கார்களில் காணப்படுவதைப் போன்ற லெதர் இருக்கை, ட்யூவல் பேன் பனோரமிக் ஸ்கை ரூஃப், பிஎம் 2.5 பில்டர் மற்றும் ஆறு வழிகொண்ட டிரைவர் இருக்கை அட்ஜெஸ்ட்மெண்ட் போன்ற வசதிகள் இடம்பெற்றிருக்கின்றது.

விற்பனைக்கு அறிமுகமான எம்ஜி இசட்எஸ் மின்சார கார்.. அப்படி என்ன இருக்கு இந்த காரை வாங்க? வாருங்கள் பார்ப்போம்...

இதைத்தொடர்ந்து, மழை காலத்தில் தானாக வைப்பாகும் வைப்பர்கள மற்றும் பவர் ஃபோல்டிங் ஓஆர்விஎம்கள் என கூடுதல் சிறப்பம்சங்களும் இந்த காரில் காணப்படுகின்றது.

விற்பனைக்கு அறிமுகமான எம்ஜி இசட்எஸ் மின்சார கார்.. அப்படி என்ன இருக்கு இந்த காரை வாங்க? வாருங்கள் பார்ப்போம்...

தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு வசதி:

பாதுகாப்பில் ஐந்து நட்சத்திரங்களைப் பெற்றிருக்கும் இந்த காரில் தொழில்நுட்ப வசதியாக ஐ ஸ்மார்ட் 2.0 கனெக்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது. இது எம்ஜி ஹெக்டர் காரைப் போன்று நேரடி இணைய வசதியை வழங்க உதவும். தொடர்ந்து, பாதுகாப்பு வசதிக்காக 6 ஏர் பேக்குகள், இபிடி உடன் ஏபிஎஸ், பிரேக் அஸிஸ்ட், ஹில் ஸ்டார்ட் அஸிஸ்ட், ஹில் டெசண்ட் கன்ட்ரோல், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், எலெக்ட்ரிக் பார்க்கிங் பிரேக், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் உள்ளிட்ட பல்வேறு பிரம்மிக்க வைக்கின்ற வகையிலான அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

விற்பனைக்கு அறிமுகமான எம்ஜி இசட்எஸ் மின்சார கார்.. அப்படி என்ன இருக்கு இந்த காரை வாங்க? வாருங்கள் பார்ப்போம்...

பேட்டரி மற்றும் எஞ்ஜின்:

இந்த எலெக்ட்ரிக் காரில் ஏற்கனவே நாம் கூறியதைப் போன்று 44.5kWh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இதனை 0-த்தில் இருந்து 80 சதவீதம் சார்ஜ் செய்ய வெறும் 50 நிமிடங்களே போதும். ஆனால், இதனை 50கிலோவாட் டிசி ஃபாஸ்ட் சார்ஜிங் பாயிண்டில் மட்டுமே நம்மால் பெற முடியும்.

விற்பனைக்கு அறிமுகமான எம்ஜி இசட்எஸ் மின்சார கார்.. அப்படி என்ன இருக்கு இந்த காரை வாங்க? வாருங்கள் பார்ப்போம்...

இதுவே, 50 கிலோ வாட்டிற்கும் குறைவான ஏசி சார்ஜிங் பாயிண்டில் சார்ஜ் செய்தால் 6 முதல் 8 மணி நேரம் வரை எடுத்துக் கொள்ளும். ஆகையால், விரைவாக சார்ஜ் செய்ய வேண்டும் ஃபாஸ்ட் சார்ஜிங் மையங்களை நாடுவதே சிறந்தது.

இதன் மின் மோட்டார் 143 பிஎச்பி பவரையும், 353 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இது அதிகபட்சமாக மணிக்கு 140 கிமீ வேகத்தில் செல்லக்கூடியது.

விற்பனைக்கு அறிமுகமான எம்ஜி இசட்எஸ் மின்சார கார்.. அப்படி என்ன இருக்கு இந்த காரை வாங்க? வாருங்கள் பார்ப்போம்...

எம்ஜி இசட்எஸ் மின்சார காரில் என்ன குறைபாடு:

எம்ஜி இசட்எஸ் மின்சார கார் அதிக சிறப்பம்சங்களைக் கொண்டு களமிறங்கியிருப்பதால், தற்போது இந்த காரை டெலிவரி பெறுவதற்கான காத்திருப்பு காலம் 4 முதல் 5 மாதங்களாக நிலவுகின்றது. இதைக் குறைபாடு என்று கூறிவிட முடியாது. இருப்பினும், நீண்ட நாள் காத்திருப்பு என்பது ஓர் அவலநிலையாக இருக்கின்றது.

விற்பனைக்கு அறிமுகமான எம்ஜி இசட்எஸ் மின்சார கார்.. அப்படி என்ன இருக்கு இந்த காரை வாங்க? வாருங்கள் பார்ப்போம்...

தொடர்ந்து, இந்த கார் இந்தியாவின் முக்கிய நகரங்களான மும்பை, பெங்களூரு, டெல்லி, ஹைதரபாத் மற்றும் அஹமதாபாத் ஆகிய நகரங்களில் மட்டும் விற்பனைக்கு கிடைக்கும். விரைவில் மற்ற முக்கிய நகரங்களிலும் விற்பனைக்குக் கொண்டு வரும் முயற்சியில் எம்ஜி ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தகுந்தது.

விற்பனைக்கு அறிமுகமான எம்ஜி இசட்எஸ் மின்சார கார்.. அப்படி என்ன இருக்கு இந்த காரை வாங்க? வாருங்கள் பார்ப்போம்...

எம்ஜி நிறுவனத்தின் இந்த புத்தம் புதிய அதிநவீன எலெக்ட்ரிக் கார் தற்போது இரு விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. அதில், எக்சைட் வேரியண்டிற்கு ரூ. 19,88,000 என்ற விலையும், எக்ஸ்க்ளூசிவ் வேரியண்டிற்கு ரூ. 22,58,000 என்ற விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த விலை கடந்த 17ம் (ஜனவரி) நள்ளிரவு வரை புக்கிங் செய்த வாடிக்கையாளர்களுக்கு இந்த விலையில் எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.

விற்பனைக்கு அறிமுகமான எம்ஜி இசட்எஸ் மின்சார கார்.. அப்படி என்ன இருக்கு இந்த காரை வாங்க? வாருங்கள் பார்ப்போம்...

மற்றபடி, ஜனவரி 18ம் தேதி முதல் இந்த காரை புக் செய்த வாடிக்கையாளர்களுக்கு ரூ. 1 லட்சம் உயர்த்தப்பட்டு எக்சைட் மாடலை ரூ. 20,88,000 என்ற விலையிலும், எக்ஸ்க்ளூசிவ் வேரியண்டை ரூ. 23,58,000 என்ற விலையும் விற்பனைச் செய்ய எம்ஜி திட்டமிட்டிருக்கின்றது.

இந்த கார் இந்தியாவில் ஹூண்டாய் கோனா மற்றும் மிக விரைவில் விற்பனைக்கு வரவிருக்கும் டாடா நெக்ஸான் உள்ளிட்ட கார்களுக்கு கடுமையான போட்டியை வழங்கவிருக்கின்றது.

Most Read Articles

English summary
Interesting Facts About MG ZS Electric Car. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X