தார் எஸ்யூவியின் காத்திருப்பு காலம் 9 மாதங்கள்? உற்பத்தி அதிகரிக்கப்படும் என ஆனந்த் மஹிந்திரா உறுதி

புதிய தார் எஸ்யூவிக்கான காத்திருப்பு காலம் உயர்ந்து கொண்டே வரும் நிலையில், உற்பத்தி அதிகரிக்கப்படும் என ஆனந்த் மஹிந்திரா உறுதியளித்துள்ளார். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

தார் எஸ்யூவியின் காத்திருப்பு காலம் 9 மாதங்கள்? உற்பத்தி அதிகரிக்கப்படும் என ஆனந்த் மஹிந்திரா உறுதி

புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவிக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் ஆதரவு பெருகி வருகிறது. ஆனால் காத்திருப்பு காலம் நீண்டு கொண்டே செல்வதால், முன்பதிவு செய்துள்ள வாடிக்கையாளர்கள் சிலர் அதிருப்தியடைந்துள்ளனர். புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியின் காத்திருப்பு காலம் 7 மாதங்கள் வரை நீண்டுள்ளதாக நடப்பு நவம்பர் மாத தொடக்கத்தில் தகவல்கள் வெளியானது.

தார் எஸ்யூவியின் காத்திருப்பு காலம் 9 மாதங்கள்? உற்பத்தி அதிகரிக்கப்படும் என ஆனந்த் மஹிந்திரா உறுதி

அதற்கு அடுத்த சில நாட்களில் புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியின் காத்திருப்பு காலம், 8 மாதங்கள் வரை உயர்ந்திருப்பதாக செய்திகள் வெளியானது. தற்போது நவம்பர் மாதத்தின் இறுதிக்கு நாம் வந்துள்ள நிலையில், புதிய மஹிந்திரா தார் எஸ்யூவிக்கான காத்திருப்பு காலம் மேலும் உயர்ந்து 9 மாதங்களாக மாறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

தார் எஸ்யூவியின் காத்திருப்பு காலம் 9 மாதங்கள்? உற்பத்தி அதிகரிக்கப்படும் என ஆனந்த் மஹிந்திரா உறுதி

புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியை முன்பதிவு செய்துள்ள வாடிக்கையாளர் ஒருவர், இந்த பிரச்னையை சமீபத்தில் டிவிட்டரில் எழுப்பியிருந்தார். இதற்கு உற்பத்தி அதிகரிக்கப்படும் என மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா பதில் அளித்துள்ளார். புதிய தார் எஸ்யூவிக்காக பேராவலுடன் காத்திருப்பவர்களை, இந்த பதில் சற்றே நிம்மதியடைய செய்துள்ளது.

ராயல் என்பீல்டு ரசிகர்கள் எதிர்பார்க்கும் விஷயங்கள் மீட்டியோர் 350 பைக்கில் உள்ளதா? வீடியோ!

''தார் எஸ்யூவியின் புதிய வெர்ஷன் அற்புதமாக உள்ளது. ஆனால் நாங்கள் 9 மாதங்கள் காத்திருக்க வேண்டும் என அவர்கள் கூறும்போது ஏமாற்றம் ஏற்படுகிறது'' என வாடிக்கையாளர் ஒருவர் சமீபத்தில் டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். ஆனந்த் மஹிந்திரா டிவிட்டரில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்க கூடியவர் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான்.

தார் எஸ்யூவியின் காத்திருப்பு காலம் 9 மாதங்கள்? உற்பத்தி அதிகரிக்கப்படும் என ஆனந்த் மஹிந்திரா உறுதி

இதன்படி புதிய தார் எஸ்யூவியின் காத்திருப்பு காலம் பற்றி குறைபட்டிருந்த வாடிக்கையாளருக்கு, ஆனந்த் மஹிந்திரா பதில் அளித்துள்ளார். ''உற்பத்தியை அதிகரிப்பதற்கு, தீவிரமாக வேலை செய்து வருகிறோம்'' என ஆனந்த் மஹிந்திரா தெரிவித்துள்ளார். இதன்படி மஹிந்திரா நிறுவனம் உற்பத்தியை அதிகரிக்கும்பட்சத்தில், புதிய தார் எஸ்யூவிக்கான காத்திருப்பு காலம் குறையலாம்.

தார் எஸ்யூவியின் காத்திருப்பு காலம் 9 மாதங்கள்? உற்பத்தி அதிகரிக்கப்படும் என ஆனந்த் மஹிந்திரா உறுதி

வாடிக்கையாளர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், புதிய தலைமுறை தார் எஸ்யூவியை மஹிந்திரா நிறுவனம் கடந்த அக்டோபர் 2ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்தது. சந்தைக்கு வந்த சுமார் ஒரு மாத கால அளவிலேயே புதிய தார் எஸ்யூவிக்கு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகளை மஹிந்திரா பெற்றது.

தார் எஸ்யூவியின் காத்திருப்பு காலம் 9 மாதங்கள்? உற்பத்தி அதிகரிக்கப்படும் என ஆனந்த் மஹிந்திரா உறுதி

இதன் மூலம் இந்த வருடத்தின் வெற்றிகரமான அறிமுகங்களில் ஒன்றாக புதிய தலைமுறை தார் எஸ்யூவி உருவெடுத்துள்ளது. இதற்கிடையே குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் மஹிந்திரா தார் எஸ்யூவி 4 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றுள்ள தகவல் இன்று (நவம்பர் 25) வெளியாகியுள்ளது. பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் என இரண்டு பிரிவினருக்குமான பாதுகாப்பிலும், மஹிந்திரா தார் எஸ்யூவி 4 நட்சத்திர ரேட்டிங்கை பெற்றுள்ளது.

தார் எஸ்யூவியின் காத்திருப்பு காலம் 9 மாதங்கள்? உற்பத்தி அதிகரிக்கப்படும் என ஆனந்த் மஹிந்திரா உறுதி

இதற்கு முன்பாக மஹிந்திரா நிறுவனத்தின் மற்றொரு தயாரிப்பான எக்ஸ்யூவி300, குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் முழுமையாக 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இது இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி கார் ஆகும்.

Most Read Articles

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Is New-Gen Mahindra Thar SUV waiting period now 9 months?-Reports. Read in Tamil
Story first published: Wednesday, November 25, 2020, 17:31 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X