இசுஸு பிஎஸ்6 மாடல்கள் அறிமுகம் விபரம் வெளியானது!

இசுஸு பிஎஸ்-6 மாடல்கள் எப்போது விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளன என்பது குறித்த விபரம் வெளியாகி இருக்கிறது. இதுபற்றிய கூடுதல் தகவல்களை தொடர்ந்து காணலாம்.

இசுஸு பிஎஸ்6 மாடல்கள் அறிமுகம் விபரம் வெளியானது!

கடந்த ஏப்ரல் 1 முதல் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான எஞ்சினுடன் வாகனங்களை விற்பனை செய்வது கட்டாயமாக்கப்பட்டது. பெரும்பாலான நிறுவனங்கள் பிஎஸ்-6 தரத்திற்கு இணையான வாகனங்களை அறிமுகம் செய்துவிட்டன. அதேநேரத்தில், விற்பனையில் பின்தங்கிய வாகன உற்பத்தி நிறுவனங்கள் தங்களது பிஎஸ்6 மாடல்களை ஒவ்வொன்றாக சந்தைக்கு கொண்டு வந்து கொண்டிருக்கின்றன.

இசுஸு பிஎஸ்6 மாடல்கள் அறிமுகம் விபரம் வெளியானது!

இந்த நிலையில், ஜப்பானை சேர்ந்த இசுஸு நிறுவனம் இதுவரை ஒரு பிஎஸ்-6 மாடலைகூட இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரவில்லை. இதற்கு கொரோனாா பிரச்னையே முக்கிய காரணமாக அமைந்துவிட்டது. இந்திய வாகன சந்தை மிக மோசமான நிலையில் இருந்ததாதல், தனது பிஎஸ்-6 வாகனங்களின் அறிமுகத்தை இசுஸு நிறுவனம் தள்ளிப்போட்டு வந்தது.

இசுஸு பிஎஸ்6 மாடல்கள் அறிமுகம் விபரம் வெளியானது!

இந்த நிலையில், தற்போது வாகன சந்தை மெல்ல எழுச்சிப் பெற்று வருவதால், தனது பிஎஸ்-6 வாகன மாடல்களை அறிமுகம் செய்வதற்கான ஆயத்தப் பணிகளில் இசுஸு ஈடுபட்டுள்ளது. அடுத்த மாதம் இசுஸு பிஎஸ்-6 மாடல்கள் இந்தியாவில் விற்பனைக்கு கெண்டு வரப்பட உள்ளதாக டீம் பிஎச்பி தளத்தின் செய்தி தெரிவிக்கிறது.

இசுஸு பிஎஸ்6 மாடல்கள் அறிமுகம் விபரம் வெளியானது!

அடுத்த மாதம் பிற்பாதியில் இசுஸு பிஎஸ்6 மாடல்களின் டெலிவிரிப் பணிகளும் துவங்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இதனிடையே, சில இசுஸு டீலர்களில் இருப்பில் உள்ள பிஎஸ்4 வாகனங்கள் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன.

இசுஸு பிஎஸ்6 மாடல்கள் அறிமுகம் விபரம் வெளியானது!

அதாவது, இந்த வாகனங்கள் டீலரின் பெயரில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுவிட்டன. தற்போது இந்த வாகனங்கள் பயன்படுத்தாத நிலையில், வாடிக்கையாளர்கள் சில சலுகைகளுடன் வாங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இசுஸு பிஎஸ்6 மாடல்கள் அறிமுகம் விபரம் வெளியானது!

அதாவது, ரூ.1.50 லட்சம் வரை தள்ளுபடியுடன் பிஎஸ்-6 வாகனங்களை புதிய வாடிக்கையாளரின் பெயரில் இசுஸு டீலர்கள் மாற்றித் தருவதாகவும் தெரிய வந்துள்ளது. இந்த வாகனங்களுக்கு மூன்று ஆண்டுகள் அல்லது 1 லட்சம் கிலோமீட்டர் வரையிலான ஆண்டு பராமரிப்புத் திட்டம் உள்ளிட்டவையும் வழங்கப்படுவதாக தெரிய வந்துள்ளது.

இசுஸு பிஎஸ்6 மாடல்கள் அறிமுகம் விபரம் வெளியானது!

இசுஸு நிறுவனம் இந்தியாவில் டி மேக்ஸ் பிக்கப் டிரக், வி க்ராஸ் தனிநபர் பயன்பாட்டு பிக்கப் டிரக், எம்யூ-எக்ஸ் எஸ்யூவி ஆகியவற்றை விற்பனை செய்து வருகிறது. இதில், வி க்ராஸ் பிக்கப் டிரக் மாடலானது ஆஃப்ரோடு பிரியர்களின் கனவு வாகனமாக மாறி இருக்கிறது. எம்யூ-எக்ஸ் எஸ்யூவி டொயோட்டா ஃபார்ச்சூனர் உள்ளிட்ட மாடல்களுக்கு இணையான சந்தையில் நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது.

Most Read Articles

மேலும்... #இசுஸு #isuzu
English summary
Japanese-based automakers, Isuzu Motors is yet to update its entire vehicle line-up to meet BS6 emission standards. None of the SUVs and pick-up trucks sold before is updated to new pollution regulations.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X