பிஎஸ்-6 எஞ்சினுடன் புதிய இசுஸு டி மேக்ஸ், எஸ் கேப் பிக்கப் டிரக் மாடல்கள் அறிமுகம்!

பிஎஸ்-6 எஞ்சின் மற்றும் கூடுதல் சிறப்பம்சங்களுடன் இசுஸு டி மேக்ஸ், எஸ் கேப் பிக்கப் டிரக் மாடல்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த புதிய மாடல்களின் முக்கிய அம்சங்கள், விலை உள்ளிட்ட தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

பிஎஸ்-6 எஞ்சினுடன் புதிய இசுஸு டி மேக்ஸ், எஸ் கேப் பிக்கப் டிரக் மாடல்கள் அறிமுகம்!

இந்திய பிக்கப் டிரக் மார்க்கெட்டில் இசுஸு நிறுவனத்தின் டி மேக்ஸ் மற்றும் எஸ் கேப் மாடல்களுக்கு அதிக வரவேற்பு இருந்து வருகிறது. இந்த நிலையில், பிஎஸ்-6 விதிகளுக்கு ஏற்ற எஞ்சின் மற்றும் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் இந்த பிக்கப் டிரக் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.

பிஎஸ்-6 எஞ்சினுடன் புதிய இசுஸு டி மேக்ஸ், எஸ் கேப் பிக்கப் டிரக் மாடல்கள் அறிமுகம்!

இதில், டி மேக்ஸ் பிக்கப் டிரக் மாடலானது 1,240 கிலோ எடை சுமக்கும் திறன் கொண்ட ஸ்டாண்டர்டு என்ற வேரியண்ட்டிலும், 1,710 கிலோ எடை சுமக்கும் திறன் கொண்ட சூப்பர் ஸ்ட்ராங் என்ற மாடலிலும் வந்துள்ளது. பழைய மாடலைவிட வடிவமைப்பில் சிறிய மாறுதல்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட கேபின் மற்றும் பிஎஸ்6 எஞ்சினுடன் வந்துள்ளது.

பிஎஸ்-6 எஞ்சினுடன் புதிய இசுஸு டி மேக்ஸ், எஸ் கேப் பிக்கப் டிரக் மாடல்கள் அறிமுகம்!

புதிய ஹெட்லைட் க்ளஸ்ட்டர்கள், க்ரில் அமைப்பு, வலிமையான பானட், பம்பர் உள்ளிட்டவை இந்த மாடலுக்கு அதிக வசீகரத்தை கொடுக்கிறது. இந்த புதிய மாடலில் டியூவல் டோன் எனப்படும் என இரட்டை வண்ண பாகங்களுடன் வந்துள்ளது. மேலும், பியோனோ பிளாக் என்ற விசேஷ கருப்பு வண்ண பாகங்களும் இதன் மதிப்பை உயர்த்துகிறது.

பிஎஸ்-6 எஞ்சினுடன் புதிய இசுஸு டி மேக்ஸ், எஸ் கேப் பிக்கப் டிரக் மாடல்கள் அறிமுகம்!

இந்த பிக்கப் டிரக்கில் பல்வேறு புதிய வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. அதன்படி, இதன் மல்டி இன்ஃபர்மேஷன் டிஸ்ப்ளே மூலமாக இருக்கும் எரிபொருள் அளவு, எரிபொருள் சிக்கனம் குறித்த தகவல் ஆகியவற்றை பெற முடியும். இந்த பிக்கப் டிரக்கில் கியர் ஷிஃப்ட் இன்டிகேட்டர் மிக முக்கிய வசதியாக இருக்கும்.

பிஎஸ்-6 எஞ்சினுடன் புதிய இசுஸு டி மேக்ஸ், எஸ் கேப் பிக்கப் டிரக் மாடல்கள் அறிமுகம்!

அதேபோன்று, இருக்கைகள் மிகவும் சவுகரியமாக இருக்கும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஓட்டுனர் இருக்கையை அட்ஜெஸ்ட் செய்து கொள்ளும் வசதியும், சக பயணி அமரும் இருக்கையை முன்பின் நகர்த்திக் கொள்ளும் வசதியும் உள்ளது.

பிஎஸ்-6 எஞ்சினுடன் புதிய இசுஸு டி மேக்ஸ், எஸ் கேப் பிக்கப் டிரக் மாடல்கள் அறிமுகம்!

இந்த பிக்கப் டிரக்கில் தானியங்கி முறையில் அட்ஜெஸ்ட் செய்யும் சீட் பெல்ட்டுகள், விபத்தின்போது மோதல் தாக்கத்தை உள்வாங்கி பயணிகளுக்கு பாதிப்பை குறைக்கும் க்ரம்பிள் ஸோன் கட்டமைப்பு, ஓட்டுனர் இருக்கையை அட்ஜெஸ்ட் செய்யும் வசதிகள் உள்ளன.

பிஎஸ்-6 எஞ்சினுடன் புதிய இசுஸு டி மேக்ஸ், எஸ் கேப் பிக்கப் டிரக் மாடல்கள் அறிமுகம்!

இசுஸு எஸ் கேப் பிக்கப் டிரக் மாடலும் பல்வேறு மாற்றங்களுடன் வந்துள்ளது. இதில், இரண்டு வரிசை இருக்கை அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. டிசைனிலும் மிகவும் வசீகரமாக மாறி இருக்கிறது.

பிஎஸ்-6 எஞ்சினுடன் புதிய இசுஸு டி மேக்ஸ், எஸ் கேப் பிக்கப் டிரக் மாடல்கள் அறிமுகம்!

இசுஸு டி மேக்ஸ் மற்றும் எஸ் கேப் பிக்கப் டிரக்குகளின் பிஎஸ்-6 மாடலில் 2.5 லிட்டர் டர்போ டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 78 பிஎச்பி பவரையும், 176 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இந்த பிக்கப் டிரக்குகள் 220 மிமீ க்ரவுண்ட் க்ளியரன்ஸ் கொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்-6 எஞ்சினுடன் புதிய இசுஸு டி மேக்ஸ், எஸ் கேப் பிக்கப் டிரக் மாடல்கள் அறிமுகம்!

புதிய இசுஸு டி மேக்ஸ் பிஎஸ்6 மாடலின் சேஸி வேரியண்ட்டிற்கு ரூ.7,84,239 விலையும், டி மேக்ஸ் ஸ்டான்டர்டு வேரியண்ட்டிற்கு ரூ.8.28,911 விலையும், சூப்பர் ஸ்ட்ராங் வேரியண்ட்டிற்கு ரூ.8.38,929 எக்ஸ்ஷோரூம் விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, இசுஸு எஸ் கேப் மாடலின் ஸ்டான்டர்டு வேரியண்ட்டிற்கு ரூ.9,82,150 விலையும், எஸ் கேப் ஹை ரைடு வேரியண்ட்டிற்கு ரூ.10,07,139 எக்ஸ்ஷோரூம் விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பிஎஸ்-6 எஞ்சினுடன் புதிய இசுஸு டி மேக்ஸ், எஸ் கேப் பிக்கப் டிரக் மாடல்கள் அறிமுகம்!

இந்த மாடல்களுக்கு ஆன்லைன் மற்றும் டீலர்களில் இன்று முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம். விரைவில் டெலிவிரி கொடுக்கும் பணிகள் துவங்கப்படும்

Most Read Articles
English summary
Isuzu has launched D Max and S Cab pick up truck models with BS6 complaint engine in India.
Story first published: Wednesday, October 14, 2020, 13:13 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X