விற்பனைக்கு வர தயாராகுகிறது இசுஸு டி-மேக்ஸ் பிஎஸ்6 ட்ரக்... டீசர் வீடியோ வெளியீடு...

இசுஸு இந்தியா நிறுவனம் அதன் முதல் பிஎஸ்6 வாகனத்தின் இந்திய அறிமுகத்தை டீசர் வீடியோ ஒன்றின் மூலமாக உறுதிப்படுத்தியுள்ளது. இந்நிறுவனத்தின் முதல் பிஎஸ்6 வாகனமான டி-மேக்ஸ் கமர்ஷியல் பிக்அப்-ஐ பற்றி இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.

விற்பனைக்கு வர தயாராகுகிறது இசுஸு டி-மேக்ஸ் பிஎஸ்6 ட்ரக்... டீசர் வீடியோ வெளியீடு...

இந்தியன் கமர்ஷியல் வாகன பிரிவில் இசுஸு டி-மேக்ஸ் கமர்ஷியல் லைன்-அப் மிக பிரபலமான ஒன்றாக உள்ளது. குறிப்பாக கடந்த ஒரு வருடங்களாக இசுஸு நிறுவனத்தின் லைன்-அப்பில் உள்ள பல்வேறு மாடல்கள் கமர்ஷியல் வாகன பிரிவில் பிராண்டின் தரத்தை உயர்த்தி வருகின்றன.

இந்த நிலையில் இசுஸு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தில் டீசர் படத்துடன் புதிய டீசர் வீடியோ ஒன்றின் மூலமாகவும் பிஎஸ்6 தரத்திற்கு அப்கிரேட் செய்யப்பட்ட டி-மேக்ஸ் கமர்ஷியல் பிக்அப் ட்ரக்கை நம்மால் பார்க்க முடிகிறது.

விற்பனைக்கு வர தயாராகுகிறது இசுஸு டி-மேக்ஸ் பிஎஸ்6 ட்ரக்... டீசர் வீடியோ வெளியீடு...

சற்று திருத்தியமைக்கப்பட்டுள்ள இந்த பிஎஸ்6 பிக்அப் வாகனத்தின் மொத்த எடை 1,710 கிலோவாகும். இத்தகைய கூடுதல் மாற்றங்களினால் புதிய டி-மேக்ஸ் பிக்அப் ட்ரக்கிற்கு ‘சூப்பர் ஸ்ட்ராங்' என பெயரிடப்பட்டுள்ளது. ஆனால் மாற்றங்கள் எதுவும் அவ்வளவு பெரியதாக இல்லை.

விற்பனைக்கு வர தயாராகுகிறது இசுஸு டி-மேக்ஸ் பிஎஸ்6 ட்ரக்... டீசர் வீடியோ வெளியீடு...

முன்புறத்தில் வழங்கப்படும் ஹெட்லேம்ப்கள் மற்றும் உட்புற கேபினின் டிசைன் மட்டும்தான் சற்று மாற்றியமைக்கப்பட்டுள்ளன. பிஎஸ்4 வெர்சனில் இந்த பிக்-அப் வாகனத்தில் 2.5 லிட்டர் டர்போ-டீசல் என்ஜின் வழங்கப்பட்டு வந்தது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 3600 ஆர்பிஎம்-ல் 134 பிஎச்பி பவரையும், 1800- 2800 ஆர்பிஎம்-ல் 320 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

விற்பனைக்கு வர தயாராகுகிறது இசுஸு டி-மேக்ஸ் பிஎஸ்6 ட்ரக்... டீசர் வீடியோ வெளியீடு...

இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு வந்தது. இதே என்ஜின் தான் பிஎஸ்6 தரத்தில் வழங்கப்படுமா என்பது குறித்த தகவல் இல்லை. ஆனால் இசுஸு டி-மேக்ஸ் கமர்ஷியல் பிக்-அப் வாகனமானது முன்பு சில காஸ்மெட்டிக் தேர்வுகளுடன் சிங்கிள் மற்றும் டபுள் கேப் வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

விற்பனைக்கு வர தயாராகுகிறது இசுஸு டி-மேக்ஸ் பிஎஸ்6 ட்ரக்... டீசர் வீடியோ வெளியீடு...

அவை அப்படியே அதன் பிஎஸ்6 வெர்சனிலும் தொடர வாய்ப்புள்ளது. கடந்த மாதங்களில் வெளியாகி இருந்த செய்திகளினால் இந்த பிஎஸ்6 இசுஸு மாடல் இந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து டீலர்ஷிப்களுக்கு அஞுப்பி வைக்கப்பட்டுவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அக்டோபரே வந்த நிலையிலும் தயாரித்து நிறுவனத்திடம் இருந்து இதன் அறிமுக தேதி குறித்த எந்த அறிவிப்பும் இதுவரை வரவில்லை.

விற்பனைக்கு வர தயாராகுகிறது இசுஸு டி-மேக்ஸ் பிஎஸ்6 ட்ரக்... டீசர் வீடியோ வெளியீடு...

இசுஸு நிறுவனம் இந்திய சந்தையில் பிக்-அப் மற்றும் எஸ்யூவி மாடல்களை லைன்-அப்பில் கொண்டுள்ளது. இவையே கடந்த சில மாதங்களாக நிறுவனத்தை பிரபலமடைய செய்து வருகின்றன. இதனால் பண்டிகை காலத்தை குறிவைத்து இசுஸு அதன் பிஎஸ்6 வாகனங்களை அறிமுகப்படுத்தலாம்.

Most Read Articles

மேலும்... #இசுஸு #isuzu
English summary
Isuzu D-Max BS6 Teased
Story first published: Saturday, October 10, 2020, 9:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X