இசூஸு டீலர்களில் மை-டிவிஎஸ் சர்வீஸ் மையம்... அனைத்து பிராண்டு கார்களுக்கும் சர்வீஸ்!

இசுஸு நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் மையங்களில், பிற கார்களுக்கு சர்வீஸ் சேவை வழங்கும் திட்டத்தை டிவிஎஸ் ஆட்டோமொபைல் சொலுயூசன்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.

இசூஸு டீலர்களில் மை-டிவிஎஸ் சர்வீஸ் மையம்... அனைத்து பிராண்டு கார்களுக்கும் சர்வீஸ்!

ஜப்பானை சேர்ந்த இசுஸு நிறுவனம் இந்தியாவின் யுட்டிலிட்டி வகை கார் மாடல்கள் விற்பனையில் தனி வாடிக்கையாளர் வட்டத்தை பெற்றிருக்கிறது. குறிப்பாக, இசுஸு வி க்ராஸ் பிரிமீயம் பிக்கப் டிரக் மாடலுக்கு ஆஃப்ரோடு சாகச பிரியர்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது.

இசூஸு டீலர்களில் மை-டிவிஎஸ் சர்வீஸ் மையம்... அனைத்து பிராண்டு கார்களுக்கும் சர்வீஸ்!

அதேபோன்று, மல்டி பிராண்டு கார் சர்வீஸ் சேவையை வழங்குவதில் டிவிஎஸ் ஆட்டோமொபைல் சொலுயூசன்ஸ் நிறுவனம் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. MyTVS என்ற பெயரில் தனது மல்டி பிராண்டு கார் பராமரிப்பு மற்றும் பழுதுநீக்கும் மையங்களை நடத்தி வருகிறது.

இசூஸு டீலர்களில் மை-டிவிஎஸ் சர்வீஸ் மையம்... அனைத்து பிராண்டு கார்களுக்கும் சர்வீஸ்!

இந்த நிலையில், கார் சர்வீஸ் மையங்கள் அமைப்பதற்கான முதலீட்டை குறைத்து வருவாயை பெருக்கும் விதத்தில், இசுஸு நிறுவனமும், டிவிஎஸ் ஆட்டோமொபைல் சொலுயூசன்ஸ் நிறுவனமும் ஒப்பந்தம் செய்துள்ளன. இதன்படி, நாடு முழுவதும் உள்ள இசுஸு நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் மையங்களில், மைடிவிஎஸ் நிறுவனத்தின் ஒர்க்ஷாப்பும் செயல்படும்.

இசூஸு டீலர்களில் மை-டிவிஎஸ் சர்வீஸ் மையம்... அனைத்து பிராண்டு கார்களுக்கும் சர்வீஸ்!

எனினும், இசுஸு நிறுவனத்தின் வாகனங்களுக்கான பராமரிப்பு மற்றும் பழுதுநீக்கும் பணிகள் பிரத்யேகமாக ஒதுக்கப்பட்ட பகுதியிலும், மைடிவிஎஸ் நிறுவனத்தின் பணிகள் தனித்தனி இடத்திலும் நடைபெறும்.

இசூஸு டீலர்களில் மை-டிவிஎஸ் சர்வீஸ் மையம்... அனைத்து பிராண்டு கார்களுக்கும் சர்வீஸ்!

அதேநேரத்தில், கார்களுக்கான சில பராமரிப்பு மற்றும் பழுது நீக்கும் பணிகளை பொதுவாக பங்கிட்டு செய்வதற்கும் இரு நிறுவனங்களும் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன. மைடிவிஎஸ் ஒர்க்ஷாப்பில் கார்களுக்கு விரைவான கழுவி சுத்தப்படுத்திக் கொடுக்கும் பணிகள், பொது பராமரிப்பு, விபத்தில் ஏற்படும் சேதங்களை சரிசெய்யும் பணிகள் நடைபெறும்.

இசூஸு டீலர்களில் மை-டிவிஎஸ் சர்வீஸ் மையம்... அனைத்து பிராண்டு கார்களுக்கும் சர்வீஸ்!

இந்த புதிய ஒப்பந்தம் மூலமாக இசுஸு டீலர்களின் சர்வீஸ் மையங்களின் வருவாய் அதிகரிக்க பயன்படும். டிவிஎஸ் ஆட்டோமொபைல் சொலுயூசன்ஸ் நிறுவனத்திற்கு குறைவான முதலீட்டில், அதிக இடங்களில் தனது சேவையை விரிவாக்கும் வாய்ப்பை பெற முடியும். இது இரு நிறுவனங்களுக்கும் பொருளாார ரீதியில் சிறப்பானதாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது.

இசூஸு டீலர்களில் மை-டிவிஎஸ் சர்வீஸ் மையம்... அனைத்து பிராண்டு கார்களுக்கும் சர்வீஸ்!

இந்த கூட்டணியின் முதல் மல்டி பிராண்டு சர்வீஸ் மையம் ஆமதாபாத் நகரில் உள்ள டார்க் இசுஸு சர்வீஸ் மையத்தில் திறக்கப்பட்டு இருக்கிறது. இதனைத்தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள இசுஸு நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் மையங்களிலும் மைடிவிஎஸ் சர்வீஸ் மையமும் திறக்கப்படும்.

இசூஸு டீலர்களில் மை-டிவிஎஸ் சர்வீஸ் மையம்... அனைத்து பிராண்டு கார்களுக்கும் சர்வீஸ்!

பொதுவாக, அங்கீகரிக்கப்பட்ட வாகன டீலர்களில் பிற நிறுவனங்களின் கார் உள்ளிட்ட வாகனங்களுக்கான சர்வீஸ் செய்யும் பணிகள் அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால், இந்த மரபை உடைக்கும் விதத்தில், இந்த புதிய கூட்டணி செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனாவால் வருவாய் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த கூட்டணி நிச்சயம் பொருளாதார ரீதியில் தத்தளிக்கும் பிற நிறுவனங்களின் கவனத்தை ஈர்க்கும் என நம்பலாம்.

Most Read Articles

மேலும்... #இசுஸு #isuzu
English summary
Isuzu Motors has partnered with TVS Automobile Solutions (TASL) to allow its dealer partners in India to become franchisees of the multi-brand vehicle services chain, MyTVS, of the latter.
Story first published: Thursday, August 13, 2020, 12:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X