இசுஸு வி க்ராஸ் பிஎஸ்-6 மாடலின் பிரத்யேக ஸ்பை படங்கள்!

இசுஸு வி க்ராஸ் பிஎஸ்-6 மாடல் பெங்களூரில் வைத்து சாலை சோதனைகள் செய்யப்பட்டு இருக்கிறது. அப்போது எடுக்கப்பட்ட எமது பிரத்யேக படங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

 இசுஸு வி க்ராஸ் பிஎஸ்-6 மாடலின் பிரத்யேக ஸ்பை படங்கள்!

மேலை நாடுகளில் தனிநபர் பயன்பாட்டு வகையிலான பிக்கப் டிரக் வாகனங்கள் வெகு பிரபலமாக உள்ளன. அந்த கலாச்சாரத்தை இந்தியாவில் துவங்கி வைத்த பெருமை இசுஸு வி க்ராஸ் பிக்கப் டிரக்குக்கு உண்டு. ஆஃப்ரோடு எஸ்யூவி மாடல்களிலிருந்து வேறுபட்டு தனித்துவமான தேர்வாக இருப்பதால், ஆஃப்ரோடு சாகச பிரியர்களுக்கு இது மிகச் சிறந்த தேர்வாக மாறி இருக்கிறது.

 இசுஸு வி க்ராஸ் பிஎஸ்-6 மாடலின் பிரத்யேக ஸ்பை படங்கள்!

பிரம்மாண்டமான தோற்றம், பிரிமீயமான கேபின், செயல்திறன் மிக்க எஞ்சின், பிரிமீயம் எஸ்யூவி மாடல்களைவிட விலை குறைவு போன்ற காரணங்களால், இந்த பிரிமீயம் வகை பிக்கப் டிரக்கிற்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்த நிலையில், பிஎஸ்-6 தரத்திற்கு இணையாக மேம்படுத்தப்பட்ட எஞ்சின் தேர்வுகளுடன் விரைவில் இசுஸு வி க்ராஸ் பிக்கப் டிரக் வர இருப்பது தெரிய வந்துள்ளது.

பிஎஸ்-6 எஞ்சின் பொருத்தப்பட்ட இசுஸு வி க்ராஸ் பிக்கப் டிரக் பெங்களூரின் புறநகர் பகுதிகளில் வைத்து சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது. மறைப்பு எதுவும் இல்லாத நிலையில் சோதனை செய்யப்பட்டுக் கொண்டிருந்த இசுஸு வி க்ராஸ் எமது கேமரா கண்களில் சிக்கியது. அந்த பிரத்யேக படங்கள் மற்றும் வீடியோவை இந்த செய்தியில் வழங்கி இருக்கிறோம்.

 இசுஸு வி க்ராஸ் பிஎஸ்-6 மாடலின் பிரத்யேக ஸ்பை படங்கள்!

வெளிப்புறத்தில் பெரிய மாற்றங்கள் தென்படவில்லை. அதேநேரத்தில், புதிய வடிவமைப்பிலான டெயில் லைட் க்ளஸ்ட்டர்கள் இடம்பெற்றுள்ளன. புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், ரூஃப் ரெயில்கள் ஆகியவை பிஎஸ்-4 மாடலை ஒத்திருக்கிறது. மேம்படுத்தப்பட்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் எதிர்பார்க்கப்படுகிறது.

 இசுஸு வி க்ராஸ் பிஎஸ்-6 மாடலின் பிரத்யேக ஸ்பை படங்கள்!

இசுஸு வி க்ராஸ் பிக்கப் டிரக்கின் பிஎஸ்-4 மாடலில் 1.9 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் 2.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்பட்டன. இதே எஞ்சின்கள் பிஎஸ்-6 தரத்திற்கு இணையாக மேம்படுத்தப்பட்டு வர இருப்பதாக தெரிகிறது. இதன் 1.9 லிட்டர் டீசல் எஞ்சின் 148 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த எஞ்சின் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வில் விலை உயர்ந்த வேரியண்ட்டாக விற்பனை செய்யப்படுகிறது.

 இசுஸு வி க்ராஸ் பிஎஸ்-6 மாடலின் பிரத்யேக ஸ்பை படங்கள்!

மற்றொரு 2.5 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 135 பிஎச்பி பவரையும், 320 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த எஞ்சினுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படுகிறது. விலை குறைவான வேரியண்ட்டுகளில் இந்த எஞ்சின் வழங்கப்படுகிறது. இந்த இரண்டு எஞ்சின்களுமே பிஎஸ்-6 தரத்தில் வர இருப்பதாக தெரிகிறது.

 இசுஸு வி க்ராஸ் பிஎஸ்-6 மாடலின் பிரத்யேக ஸ்பை படங்கள்!

இசுஸு வி க்ராஸ் பிக்கப் டிரக்கில் சென்சார்களுடன் கூடிய பார்க்கிங் கேமரா, க்ளைமேட் கன்ட்ரோல், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், ஹில் டிசென்ட் கன்ட்ரோல், ஏர்பேக்குகள் உள்ளிட்ட பல பாதுகாப்பு வசதிகள் இடம்பெற்றிருக்கும். பண்டிகை காலத்தில் புதிய கார் வாங்க திட்டமிட்டிருப்போருக்கு ஏதுவாக இந்த புதிய மாடல் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

Most Read Articles

மேலும்... #இசுஸு #isuzu
English summary
Isuzu product range is yet to receive the BS6 update from the company. It was expected to arrive much earlier in the year closer to the BS4 deadline in the country. However, the Covid-19 ongoing pandemic has delayed the launch of SUVs in the Indian market.
Story first published: Saturday, August 1, 2020, 12:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X