2020 ஜாகுவார் எஃப்-டைப் ஃபேஸ்லிஃப்ட் இந்திய சந்தைக்கு வந்தது... ஆரம்ப விலையே எவ்வளவு தெரியுமா...?

ஜாகுவார் எஃப்-டைப் மாடலின் ஃபேஸ்லிஃப்ட் வெர்சன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எக்ஸ்ஷோரூமில் ரூ.95.12 லட்சத்தை ஆரம்ப விலையாக பெற்றுள்ள ஜாகுவாரின் இந்த புதிய ஃபேஸ்லிஃப்ட் வெர்சன் காரை பற்றி இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.

2020 ஜாகுவார் எஃப்-டைப் ஃபேஸ்லிஃப்ட் இந்திய சந்தைக்கு வந்தது... ஆரம்ப விலையே எவ்வளவு தெரியுமா...?

இதன் ஆரம்ப விலை ரூ.95.12 லட்சமாக இருந்தாலும் இதன் டாப் வேரியண்ட் ரூ.2.41 கோடி வரையில் விற்பனை செய்யப்படவுள்ளது. கூபே மற்றும் மாற்றத்தக்க வடிவங்களில் சந்தைக்கு வந்துள்ள இந்த ஃபேஸ்லிஃப்ட் கார் மூன்று விதமான என்ஜின் தேர்வுகளுடன் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

2020 ஜாகுவார் எஃப்-டைப் ஃபேஸ்லிஃப்ட் இந்திய சந்தைக்கு வந்தது... ஆரம்ப விலையே எவ்வளவு தெரியுமா...?

இதில் 2.0 லிட்டர் 4-சிலிண்டர் பெட்ரோல் மற்றும் 5.0 லிட்டர் டர்போசாஜ்டு வி8 பெட்ரோல் உள்ளிட்டவை அடங்கும். இதில் வி8 பெட்ரோல் என்ஜின் இரு விதமான ட்யூன் தேர்வுகளில் கிடைக்கும். 2.0 லி பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 5500 ஆர்பிஎம்-ல் 300 பிஎச்பி பவரையும், 1500-4500 ஆர்பிஎம்-ல் 400 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது.

2020 ஜாகுவார் எஃப்-டைப் ஃபேஸ்லிஃப்ட் இந்திய சந்தைக்கு வந்தது... ஆரம்ப விலையே எவ்வளவு தெரியுமா...?

பின் சக்கர ட்ரைவிங்கை வழங்கக்கூடிய இதன் 2.0 லிட்டர் பெட்ரோல் வேரியண்ட்டில் அதிகப்பட்சமாக 250 kmph வேகத்தில் பயணிக்க முடியும். 0-100 வேகத்தை இந்த வேரியண்ட் 5.7 வினாடிகளில் அடைந்துவிடும். மற்றொரு 5.0 லிட்டர் டர்போசார்ஜ்டு வி8 பெட்ரோல் என்ஜின் 450 பிஎச்பி மற்றும் 575 பிஎச்பி என்ற ஆற்றல்களை வெளிப்படுத்தவல்லது.

2020 ஜாகுவார் எஃப்-டைப் ஃபேஸ்லிஃப்ட் இந்திய சந்தைக்கு வந்தது... ஆரம்ப விலையே எவ்வளவு தெரியுமா...?

இதில் 450 பிஎச்பி வேரியண்ட்டில் அதிகப்பட்சமாக 285 kmph வேகத்த்திலும் 0-100 kmph வேகத்தை 4.6 வினாடிகளிலும் அடைய முடியும். அதுவே 575 பிஎச்பி வேரியண்ட்டின் அதிகப்பட்ச வேகம் 300 kmph ஆகும். இது 0-விலிருந்து 100 kmph என்ற வேகத்தை அடைய வெறும் 3.7 வினாடிகளை மட்டுமே எடுத்து கொள்ளும்.

2020 ஜாகுவார் எஃப்-டைப் ஃபேஸ்லிஃப்ட் இந்திய சந்தைக்கு வந்தது... ஆரம்ப விலையே எவ்வளவு தெரியுமா...?

ஸ்டைலிங் பாகங்களை பொறுத்தவரையில் கார் ஃபேஸ்லிஃப்ட் வெர்சனுக்கு மாற்றப்பட்டுள்ளதால் முன்புறத்தில் சில மாற்றங்களை ஏற்றுள்ளது. இந்த வகையில் மெல்லியதான எல்இடி ஹெட்லைட் முன்பை விட கூர்மையாக, பெரிய க்ரில் மற்றும் ஸ்போர்ட்டியான பம்பருடன் உள்ளது.

2020 ஜாகுவார் எஃப்-டைப் ஃபேஸ்லிஃப்ட் இந்திய சந்தைக்கு வந்தது... ஆரம்ப விலையே எவ்வளவு தெரியுமா...?

காரின் பக்கவாட்டில் எந்த மாற்றமும் கொண்டுவரப்படவில்லை என்றாலும், புதிய அலாய் சக்கரங்களுடன் காட்சியளிக்கிறது.

பின்புறத்தில் எல்இடி டெயில்லைட் மட்டும் தான் திருத்தியமைக்கப்பட்டுள்ளது. மற்றப்படி தற்போதைய ஜாகுவார் எஃப்-டைப் மாடலுடன் ஒத்து தான் காணப்படுகிறது. அதேபோல் உட்புறமும் அவ்வளவாக மாற்றங்களை பெறவில்லை.

2020 ஜாகுவார் எஃப்-டைப் ஃபேஸ்லிஃப்ட் இந்திய சந்தைக்கு வந்தது... ஆரம்ப விலையே எவ்வளவு தெரியுமா...?

ஆனால் புதிய கலர் டோன் காருக்கு கூடுதல் லக்சரி தோற்றத்தை வழங்குகிறது. இதனுடன் இதன் உட்புற கேபினில் 12.3 இன்ச் முழு-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஸ்ட்ரூமெண்ட் திரையின் மூலமாக நாவிகேஷன், 3டி மேப்கள் மற்றும் கஸ்டம் திரை கண்ட்ரோல் உள்ளிட்டவற்றை ஒட்டுனர் பெறலாம்.

2020 ஜாகுவார் எஃப்-டைப் ஃபேஸ்லிஃப்ட் இந்திய சந்தைக்கு வந்தது... ஆரம்ப விலையே எவ்வளவு தெரியுமா...?

இதனுடன் ஜாகுவார் லேண்ட் ரோவர் வரிசை கார்களுக்கு வழங்கப்படும் லேட்டஸ்ட் யூனிட்களுடன் அப்டேட்டான இன்போடெயின்மெண்ட் சிஸ்டமும் புதிய எஃப்-டைப் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் உள்ளே உள்ளது. இந்த இன்போடெயின்மெண்ட் சிஸ்டத்தின் உதவியினால் மெர்டியன் சவுண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ இணைப்பு போன்ற வசதிகளுடன் கனெக்டட் கார் தொழிற்நுட்பம் மற்றும் ஜாகுவார் ரிமோட் ஆப் உள்ளிட்டவற்றையும் பெற முடியும்.

2020 ஜாகுவார் எஃப்-டைப் ஃபேஸ்லிஃப்ட் இந்திய சந்தைக்கு வந்தது... ஆரம்ப விலையே எவ்வளவு தெரியுமா...?

பயணிகளின் பாதுகாப்பிற்கு ட்ரைவர் கண்டிஷன் மானிடர், லேன் கீப் அசிஸ்ட் மற்றும் பார்க் அசிஸ்ட் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. 2020 ஜாகுவார் எஃப்-டைப் ஃபேஸ்லிஃப்ட் மாடல் 9 வேரியண்ட்களில் இந்தியாவில் சந்தைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் டெலிவிரி பணிகள் தற்சமயம் அமலில் உள்ள லாக்டவுன் முடிவுக்கு வந்த பின்பு ஆரம்பமாகவுள்ளன.

Most Read Articles
மேலும்... #ஜாகுவார் #jaguar
English summary
Jaguar has introduced facelifted version of the F-Type in India.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X