ஜாகுவார் ஐ பேஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது

ஜாகுவார் இந்தியா நிறுவனத்தின் இணையப் பக்கத்தில் ஐ பேஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி பட்டியலிடப்பட்டுள்ளது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ஜாகுவார் ஐ பேஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது

இங்கிலாந்தை சேர்ந்த ஜாகுவார் சொகுசு கார் தயாரிப்பு நிறுவனம் டாடா மோட்டார்ஸ் அங்கமாக செயல்பட்டு வருகிறது. எதிர்கால வர்த்தகத்திற்கு தோதுவாக டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிதி ஒதுக்கீடு மூலமாக ஜாகுவார் நிறுவனம் எலெக்ட்ரிக் கார் தயாிப்பிலும் தீவிரம் காட்டி வருகிறது.

ஜாகுவார் ஐ பேஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது

அந்த வகையில், ஐ பேஸ் என்ற பெயரில் முதல் எலெக்ட்ரிக் எஸ்யூவி மாடலை கடந்த 2018ம் ஆண்டு மார்ச் மாதம் உலக அளவில் அறிமுகம் செய்ததுடன், மேலை நாடுகளில் விற்பனைக்கு கொண்டு வந்தது. இந்த நிலையில், ஐ பேஸ் எஸ்யூவி இந்தியாவிலும் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று ஜாகுவார் நிறுவனம் கடந்த ஆண்டு தெரிவித்திருந்தது.

ஜாகுவார் ஐ பேஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது

இந்த நிலையில், ஜாகுவார் நிறுவனத்தின் இந்திய இணையதள பக்கத்தில் ஐ பேஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் பட்டியலிடப்பட்டுள்ளது. இதையடுத்து, மிக விரைவில் இந்தியாவில் இந்த புதிய சொகுசு ரக எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு வருவது உறுதியாகி இருக்கிறது.

ஜாகுவார் ஐ பேஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது

ஜாகுவார் ஐ பேஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் டிசைனில் மிகவும் கவரும் வகையில், க்ராஸ்ஓவர் மாடல் போல உருவாக்கப்பட்டு இருக்கிறது. எல்இடி ஹெட்லைட்டுகள், டெயில் லைட்டுகள், டியூவல் டோன் பம்பர், 18 அங்குல அலாய் வீல்களுடன் மிகவும் கவர்ச்சியாக இருக்கிறது.

ஜாகுவார் ஐ பேஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது

இந்த எலெக்ட்ரிக் காரின் இன்டீரியரும் மிகவும் அழகாகவும், பிரிமீயமாகவும் டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த காரில் ஜாகுவார் டச் புரோ டியூவோ என்ற இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. அதாவது, இரண்டு திரை அமைப்புடன் இந்த இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் டிசைன் செய்யப்பட்டு இறுக்கிறது.

ஜாகுவார் ஐ பேஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது

இந்த இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் செயற்கை நுண்ணறிவு திறனில் இயங்கும். கார் எவ்வளவு தூரம் பயணிப்பதற்காக சார்ஜ் உள்ளது, வானிலை, ஓட்டும் முறை, காரில் இருக்கும் பயணிகளின் எண்ணிக்கையை பொறுத்து க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டத்தில் வெப்ப நிலையை மாற்றுவது என பல்வேறு விஷயங்களை தானியங்கி முறையில் கணித்து தெரிவிக்கும்.

ஜாகுவார் ஐ பேஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது

ஜாகுவார் ஐ பேஸ் எலெக்ட்ரிக் காரில் ஆக்சிலுக்கு தலா ஒரு மின் மோட்டார் வீதம் இரண்டு மின் மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த மின் மோட்டார்கள் இணைந்து அதிகபட்சமாக 395 பிஎச்பி பவரையும், 696 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

ஜாகுவார் ஐ பேஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது

இந்த காரில் 90kWh திறன் கொண்ட பேட்டரி பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 470 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும் என்கிறது ஜாகுவார் நிறுவனம்.

ஜாகுவார் ஐ பேஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது

இந்த எலெக்ட்ரிக் கார் 0 - 100 கிமீ வேகத்தை வெறும் 4.8 வினாடிகளில் எட்டிவிடும். இந்த காருக்கு 7kW திறன் கொண்ட ஏசி சார்ஜர் பயன்படுத்தினால் பேட்டரியை 80 சதவீதம் சார்ஜ் ஏற்றுவதற்கு 10 மணிநேரம் பிடிக்குமாம். ஆனால், 50kW டிசி சார்ஜர் பயன்படுத்தினால், ஒரு மணிநேரத்தில் 270 கிமீ தூரம் பயணிப்பதற்கான வாய்ப்பை வழங்குமாம்.

ஜாகுவார் ஐ பேஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது

ஜாகுவார் ஐ பேஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவியானது இங்கிலாந்தில் 64,445 பவுண்ட் (இந்திய மதிப்பில் ரூ.59 லட்சம்) விலையிலும், அமெரிக்காவில் 69,500 டாலர்கள் ( இந்திய மதிப்பில் ரூ.50 லட்சம்) விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

Most Read Articles
மேலும்... #ஜாகுவார் #jaguar
English summary
Jaguar I-Pace luxury electric SUV has Listed on company's Indian website.
Story first published: Tuesday, January 7, 2020, 13:03 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X