ஜாகுவார் ஐ-பேஸ் எலெக்ட்ரிக் காரின் விலை தவிர்த்து அனைத்து விபரங்களும் வெளியீடு!

இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் ஜாகுவார் ஐ-பேஸ் எலெக்ட்ரிக் காரின் வேரியண்ட்டுகள் மற்றும் அதில் இடம்பெறும் வசதிகள் விபரம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

ஜாகுவார் ஐ-பேஸ் எலெக்ட்ரிக் காரின் விலை தவிர்த்து அனைத்து விபரங்களும் வெளியீடு!

இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கான மார்க்கெட் வேமகாக வலுவடைந்து வருகிறது. இதனால், பல முன்னணி நிறுவனங்கள் எலெக்ட்ரிக் கார் மார்க்கெட்டிலும் தனது வர்த்தகத்தை துவங்குவதற்கான ஏற்பாடுகளுடன் தயாராகி வருகின்றன. அந்த வகையில், ஜாகுவார் நிறுவனம் தனது ஐ-பேஸ் எலெக்ட்ரிக் கார் மாடலை இந்தியாவில் களமிறக்க உள்ளது.

ஜாகுவார் ஐ-பேஸ் எலெக்ட்ரிக் காரின் விலை தவிர்த்து அனைத்து விபரங்களும் வெளியீடு!

இந்த சூழலில், வாடிக்கையாளர்கள் இந்த காரின் சிறப்பம்சங்களை தெரிந்து கொள்ள ஏதுவாக, வேரியண்ட்டுகள் மற்றும் அதில் இடம்பெற இருக்கும் வசதிகள் விபரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

ஜாகுவார் ஐ-பேஸ் எலெக்ட்ரிக் காரின் விலை தவிர்த்து அனைத்து விபரங்களும் வெளியீடு!

ஜாகுவார் ஐ பேஸ் எலெக்ட்ரிக் கார் EV400 என்ற மாடலில் மூன்று வேரியண்ட்டுகளில் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த கார் எஸ், எஸ்இ மற்றும் எச்எஸ்இ என மூன்று வேரியண்ட்டுகளில் கிடைக்கும்.

ஜாகுவார் ஐ-பேஸ் எலெக்ட்ரிக் காரின் விலை தவிர்த்து அனைத்து விபரங்களும் வெளியீடு!

I Pace S வேரியண்ட்டில் எல்இடி ஹெட்லைட்டுகள், 8 வே செமி பவர்டு லக்ஸ்டெக் ஸ்போர்ட் சீட்டுகள், 380W மெரிடியன் சவுண்ட் சிஸ்டம், 3டி சர்ரவுண்ட் கேமரா, டிரைவர் கண்டிஷன் மானிட்டர், இன்டர் ஆக்டிவ் டிரைவர் டிஸ்ப்ளே ஆகிய வசதிகளை பெற்றிருக்கும். SE வேரியண்ட்டில் பிரிமீயம் எல்இடி ஹெட்லைட்டுகள், லெதர் ஸ்போர்ட்ஸ் இருக்கைகள் ஆகியவை வழங்கப்பட்டு இருக்கும்.

ஜாகுவார் ஐ-பேஸ் எலெக்ட்ரிக் காரின் விலை தவிர்த்து அனைத்து விபரங்களும் வெளியீடு!

HSE வேரியண்ட்டில் மேட்ரிக்ஸ் எல்இடி ஹெட்லைட்டுகள், 825W மெரிடியன் 3டி சர்ரவுண்ட் சவுண்ட் சிஸ்டம், 3டி சர்ரவுண்ட் கேமரா, ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

ஜாகுவார் ஐ-பேஸ் எலெக்ட்ரிக் காரின் விலை தவிர்த்து அனைத்து விபரங்களும் வெளியீடு!

புதிய ஜாகுவார் ஐ-பேஸ் எலெக்ட்ரிக் காரில் 90kWh பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கும். இரண்டு ஆக்சில்களிலும் தலா ஒரு மின் மோட்டார் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த மின்மோட்டார்கள் இணைந்து அதிகபட்சமாக 394 பிஎச்பி பவரையும், 696 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 0 - 100 கிமீ வேகத்தை 4.8 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 200 கிமீ வேகம் வரை தொடும் வல்லமை கொண்டது.

ஜாகுவார் ஐ-பேஸ் எலெக்ட்ரிக் காரின் விலை தவிர்த்து அனைத்து விபரங்களும் வெளியீடு!

இந்த காரின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 470 கிமீ தூரம் வரை செல்லும் வாய்ப்பை வழங்கும் என தெரிவிக்கப்படுகிறது. அதேநேரத்தில், நடைமுறையில் இந்த பயண தூரம் சற்றே குறைய வாய்ப்புண்டு.

ஜாகுவார் ஐ-பேஸ் எலெக்ட்ரிக் காரின் விலை தவிர்த்து அனைத்து விபரங்களும் வெளியீடு!

புதிய ஜாகுவார் 12 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும். ஃப்யூஜி ஒயிட், கல்டெரா ரெட், சன்டோரினி பிளாக், யூலாங் ஒயிட், இன்டஸ் சில்வர், ஃபைரன்ஸ் ரெட், கேசியம் புளூ, பொராஸ்கோ க்ரே, ஐகர் க்ரே, போர்டோஃபினோ புளூ, ஃபரலான், பியர்ல் பிளாக் மற்றும் அருபா ஆகிய வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும். இந்த கார் 18 அங்குல அல்லது 19 அங்குல அலாய் சக்கரங்களில் கிடைக்கும்.

Most Read Articles

மேலும்... #ஜாகுவார் #jaguar
English summary
Jaguar has revealed variant details of I-Pace electric car ahead of India launch.
Story first published: Monday, October 5, 2020, 11:48 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X