ஜாகுவார் லேண்ட்ரோவர் கார்களை ஆன்லைன் மூலமாக வாங்கலாம்!

ஜாகுவார் மற்றும் லேண்ட்ரோவர் கார்களை ஆன்லைன் மூலமாக புக்கிங் செய்து வாங்குவதற்கான புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

ஜாகுவார் லேண்ட்ரோவர் கார்களை ஆன்லைன் மூலமாக வாங்கலாம்!

டாடா மோட்டார்ஸ் கீழ் செயல்பட்டு வரும் இங்கிலாந்தை சேர்ந்த ஜாகுவார் மற்றும் லேண்ட்ரோவர் நிறுவனங்கள் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வருவதற்கான முயற்சிகளில் இறங்கி உள்ளன. அதன்படி, ஊரடங்கால் வீடுகளில் முடங்கி இருக்கும் வாடிக்கையாளர்கள் எளிதாக கார்களை முன்பதிவு செய்து டெலிவிரி பெறுவதற்கான வாய்ப்புகளை அறிவித்துள்ளன.

ஜாகுவார் லேண்ட்ரோவர் கார்களை ஆன்லைன் மூலமாக வாங்கலாம்!

இதற்காக, தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தை ஜாகுவார் மற்றும் லேண்ட்ரோவர் நிறுவனங்கள் மேம்படுத்தி உள்ளன. இதில், எளிதாக ஆன்லைன் மூலமாக புக்கிங் செய்து காரை பெறுவதற்காக பல வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

MOST READ : பருவமழை காலம் வருதுங்க... உங்க வண்டி பத்திரம்!

ஜாகுவார் லேண்ட்ரோவர் கார்களை ஆன்லைன் மூலமாக வாங்கலாம்!

புதிய ஜாகுவார் மற்றும் லேண்ட்ரோவர் கார்களை புக்கிங் செய்ய விரும்புபவர்கள் jaguar.in மற்றும் landrover.in ஆகிய இணையதளங்களுக்கு சென்று ஆன்லைன் புக்கிங் நடைமுறையை பின்பற்றி எளிதாக டெலிவிரி பெற முடியும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜாகுவார் லேண்ட்ரோவர் கார்களை ஆன்லைன் மூலமாக வாங்கலாம்!

இதுகுறித்து ஜாகுவார் லேண்ட்ரோவர் இந்தியப் பிரிவு தலைவர் ரோஹித் சூரி கூறுகையில்,"எமது வாடிக்கையாளர்களுக்கு எந்த சிரமும் இல்லாமல், வெளிப்படைத்தன்மையுடன் கார்களை வாங்குவதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம்.

MOST READ: மார்க்கெட்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் 5 புதிய பைக்குகளின் அறிமுகங்கள்... உங்களது தேர்வு எது...?

ஜாகுவார் லேண்ட்ரோவர் கார்களை ஆன்லைன் மூலமாக வாங்கலாம்!

தற்போது உள்ள கொரோனா பிரச்னையை மனதில் வைத்து பாதுகாப்பான முறையில் புதிய ஜாகுவார் மற்றும் லேண்ட்ரோவர் கார்களை வாடிக்கையாளர்கள் எளிதாக பெறுவதற்கான நடைமுறைகளை பின்பற்றி வருகிறோம். இது நிச்சயம் வாடிக்கையாளர்களுக்கு அதிக மகிழ்ச்சியை தரும் வசதியாக இருக்கும்," என்று தெரிவித்துள்ளார்.

ஜாகுவார் லேண்ட்ரோவர் கார்களை ஆன்லைன் மூலமாக வாங்கலாம்!

ஜாகுவார் கார் இணையதளத்தில் findmecar என்ற வசதியின் மூலமாகவும், லேண்ட்ரோவர் இந்தியா இணையதளத்தில் findmesuv என்ற பக்கத்திற்கு சென்று புதிய கார்களை புக்கிங் செய்து கொள்ளலாம் என்று ஜாகுவார் லேண்ட்ரோவர் தெரிவித்துள்ளது. அதேபோன்று, சர்வீஸ் செய்யும் நடைமுறையையும் ஆன்லைன் மூலமாக புக்கிங் செய்ய முடியும்.

MOST READ: வெறும் 30 யூனிட்களில் விற்பனைக்கு கொண்டுவரப்படும் ஹார்லி டேவிட்சன் எஃப்எக்ஸ்டிஆர்114 லிமிடேட் எடிசன்

ஜாகுவார் லேண்ட்ரோவர் கார்களை ஆன்லைன் மூலமாக வாங்கலாம்!

பழைய கார்களை எக்ஸ்சேஞ்ச் செய்வது, காரை டோர் டெலிவிரி பெறுவது உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் ஆன்லைன் மூலமாக செய்வதற்கான வாய்ப்பும் உள்ளதாக ஜாகுவார் லேண்ட்ரோவர் தெரிவித்துள்ளது. தற்போது பெரும்பாலான ஜாகுவார் மற்றும் லேண்ட்ரோவர் ஷோரூம்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளதால், டீலரிலிருந்து நேரடியாக விளக்கங்களை பெறுவதற்கான வாய்ப்பும் இருக்கிறது.

Most Read Articles

English summary
Jaguar Land Rover India has announced that the company has enhanced its online platform to ease the car buying and servicing process.
Story first published: Saturday, May 23, 2020, 14:28 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X