பவர்ஃபுல் எலெக்ட்ரிக் சொகுசு கார்களை உருவாக்க ஜாகுவார் லேண்ட்ரோவர் திட்டம்!

அதிசெயல்திறன் மிக்க எலெக்ட்ரிக் சொகுசு கார்களை உருவாக்க ஜாகுவார் லேண்ட்ரோவர் திட்டமிட்டுள்ளது. இதுபற்றிய கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

பவர்ஃபுல் எலெக்ட்ரிக் சொகுசு கார்களை உருவாக்க ஜாகுவார் லேண்ட்ரோவர் திட்டம்!

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அங்கமாக செயல்பட்டு வரும் இங்கிலாந்தை சேர்ந்த ஜாகுவார் மற்றும் லேண்ட்ரோவர் நிறுவனங்கள் மின்சார வாகனத் தயாரிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகின்றன. ஜாகுவார் பிராண்டில் ஏற்கனவே ஐ-பேஸ் என்ற மாடலும் அறிமுகம் செய்யப்பட்டது.

பவர்ஃபுல் எலெக்ட்ரிக் சொகுசு கார்களை உருவாக்க ஜாகுவார் லேண்ட்ரோவர் திட்டம்!

இந்த நிலையில், அதிக செயல்திறன் மிக்க எலெக்ட்ரிக் கார்களை ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தற்போது ஜாகுவார் மற்றும் லேண்ட்ரோவர் நிறுவனங்களின் சொகுசு கார்களின் அதி செயல்திறன்மிக்க மாடல்களானது SVO என்ற பிரிவு ஏற்றுக் கொண்டு உருவாக்கி வருகிறது.

MOST READ : பருவமழை காலம் வருதுங்க... உங்க வண்டி பத்திரம்!

பவர்ஃபுல் எலெக்ட்ரிக் சொகுசு கார்களை உருவாக்க ஜாகுவார் லேண்ட்ரோவர் திட்டம்!

அதன்படி, சாதாரண சொகுசு எலெக்ட்ரிக் கார்களின் அதிசெயல்திறன்மிக்க மாடல்களை சிறப்பு வாகனத் தயாரிப்புப் பிரிவு ( SVO) மூலமாக உருவாக்குவதற்கு ஜாகுவார் லேண்ட்ரோவர் திட்டமிட்டுள்ளது.

பவர்ஃபுல் எலெக்ட்ரிக் சொகுசு கார்களை உருவாக்க ஜாகுவார் லேண்ட்ரோவர் திட்டம்!

இதுதொடர்பாக ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனத்தின் சிறப்பு வாகன தயாரிப்புப் பிரிவின் தலைவர் மைக்கேல் வான் டெர் சான்டே கூறுகையில்," எமது எஸ்விஓ பிரிவின் கீழ் ஜாகுவார் மற்றும் லேண்ட்ரோவர் மாடல்களின் ஹைப்ரிட் மற்றும் எலெக்ட்ரிக் கார்களை உருவாக்க திட்டமிட்டுள்ளோம்.

பவர்ஃபுல் எலெக்ட்ரிக் சொகுசு கார்களை உருவாக்க ஜாகுவார் லேண்ட்ரோவர் திட்டம்!

முதல் மாடலாக ஜாகுவார் ஐ-பேஸ் எலெக்ட்ரிக் காரை அதிசெயல்திறன் மிக்க மாடலாக மாற்றுவதற்கு திட்டமிட்டுள்ளோம்," என்று தெரிவித்துள்ளார். இதனால், கோடீஸ்வரர்கள் மத்தியில் பெரும் ஆவல் எழுந்துள்ளது.

பவர்ஃபுல் எலெக்ட்ரிக் சொகுசு கார்களை உருவாக்க ஜாகுவார் லேண்ட்ரோவர் திட்டம்!

தற்போது ஜாகுவார் எஃப் பேஸ் எஸ்விஆர், ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட் எஸ்விஆர், ரேஞ்ச்ரோவர் வெலர் எஸ்வி ஆட்டோபயோகிராஃபி உள்ளிட்ட மாடல்களுக்கு அதிக வரவேற்பு இருந்து வருகிறது. மேலும், கடந்த சில ஆண்டுகளில் கஸ்டமைஸ் மாடல்களுக்கான வரவேற்பு 20 சதவீதம் அதிகரித்துள்ளது.

பவர்ஃபுல் எலெக்ட்ரிக் சொகுசு கார்களை உருவாக்க ஜாகுவார் லேண்ட்ரோவர் திட்டம்!

இதனை மனதில் வைத்து சிறப்பு வாகனத் தயாரிப்பு பிரிவை விரிவாக்கம் செய்ய ஜாகுவார் லேண்ட்ரோவர் முடிவு செய்துள்ளது. எனவே, அடுத்து வரும் ஆண்டுகளில் எஸ்விஓ பிரிவின் கீழ் பல புதிய ஹைப்ரிட் மற்றும் எலெக்ட்ரிக் கார் மாடல்கள் எதிர்பார்க்கலாம்.

பவர்ஃபுல் எலெக்ட்ரிக் சொகுசு கார்களை உருவாக்க ஜாகுவார் லேண்ட்ரோவர் திட்டம்!

இதற்கு ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனத்தின் அதிசெயல்திறன் மிக்க ஹைப்ரிட் மற்றும் எலெக்ட்ரிக் கார் மாடல்களை உருவாக்குவதற்கு அந்நிறுவனத்தின் புதிய மோடுலர் லான்ஜிடியூடினல் ஆர்க்கிடெக்ச்சர் கட்டமைப்பு கொள்கை உதவிகரமாக இருக்கும் என்று தெரிகிறது.

Most Read Articles
மேலும்... #ஜாகுவார் #jaguar
English summary
Jaguar Land Rover's SVO division is planning to launch high-performance Electric Cars and SUV models in the coming years.
Story first published: Monday, May 25, 2020, 13:42 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X