அதிரடியாக எக்ஸ்இ, எக்ஸ்எஃப் & எஃப்-பேஸ் டீசல் மாடல்களின் விற்பனையை இந்தியாவில் நிறுத்தியது ஜாகுவார்

ஜாகுவார் நிறுவனம் எக்ஸ்இ, எக்ஸ்எஃப் மற்றும் எஃப்-பேஸ் மாடல்களின் டீசல் வேரியண்ட்களின் விற்பனையை இந்தியாவில் நிறுத்தியுள்ளது. இதனால் இந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தில் இருந்து பெயர் நீக்கப்பட்டுள்ள இந்த மூன்று ஜாகுவார் கார்களை பற்றியும் விற்பனை நிறுத்தப்பட்டதற்கான காரணத்தையும் இந்த செய்தியில் பார்போம்.

அதிரடியாக எக்ஸ்இ, எக்ஸ்எஃப் & எஃப்-பேஸ் டீசல் மாடல்களின் விற்பனையை இந்தியாவில் நிறுத்தியது ஜாகுவார்...

ஜாகுவார் நிறுவனம் எக்ஸ்இ, எக்ஸ்எஃப் மற்றும் எஃப்-பேஸ் மாடல்களில் 2.0 லிட்டர் டீசல் என்ஜினை பொருத்தி வந்தது. 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்ட இந்த டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 177 பிஎச்பி பவரையும், 400 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தி வருகிறது.

அதிரடியாக எக்ஸ்இ, எக்ஸ்எஃப் & எஃப்-பேஸ் டீசல் மாடல்களின் விற்பனையை இந்தியாவில் நிறுத்தியது ஜாகுவார்...

இந்த டீசல் என்ஜின் பிஎஸ்6 தரத்திற்கு அப்டேட் செய்யப்படாததால் தான் இந்த மூன்று ஜாகுவார் மாடல்களின் டீசல் வேரியண்ட்களின் விற்பனை இந்தியாவில் நிறுத்தப்பட்டுள்ளது. இவை மட்டுமின்றி இந்நிறுவனத்தின் தனித்துவமான செடான் மாடலான எக்ஸ்ஜே-ன் விற்பனையும் இந்தியாவில் நிறுத்தப்பட்டது.

அதிரடியாக எக்ஸ்இ, எக்ஸ்எஃப் & எஃப்-பேஸ் டீசல் மாடல்களின் விற்பனையை இந்தியாவில் நிறுத்தியது ஜாகுவார்...

ஏனெனில் இந்த செடான் காரில் பொருத்தப்பட்டு வந்த வி6 என்ஜினை இந்திய சந்தைக்கு வழங்குவதை ஜாகுவார் நிறுவனம் நிறுத்தியுள்ளது. டீசல் வேரியண்ட்டை இழந்திருந்தாலும் கடந்த 2019ல் ஃபேஸ்லிஃப்ட் வெர்சனை பெற்ற எக்ஸ்இ மாடல் பெட்ரோல் என்ஜினுடன் விற்பனைக்கு கிடைக்கும்.

அதிரடியாக எக்ஸ்இ, எக்ஸ்எஃப் & எஃப்-பேஸ் டீசல் மாடல்களின் விற்பனையை இந்தியாவில் நிறுத்தியது ஜாகுவார்...

இதன் 2.0 லிட்டர் இங்கேனியம் டர்போ-பெட்ரோல் என்ஜினாது அதிகப்பட்சமாக 247 பிஎச்பி மற்றும் 365 என்எம் டார்க் திறனை காருக்கு வழங்கும் ஆற்றல் கொண்டது. 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷனை கொண்டுள்ள எக்ஸ்இ மாடல் எக்ஸ்ஷோரூமில் ரூ.46.64 - ரூ.48.5 லட்சத்தை விலையாக கொண்டுள்ளது.

அதிரடியாக எக்ஸ்இ, எக்ஸ்எஃப் & எஃப்-பேஸ் டீசல் மாடல்களின் விற்பனையை இந்தியாவில் நிறுத்தியது ஜாகுவார்...

இதன் என்ஜின் தேர்வுகளுடன் தான் எக்ஸ்எஃப் மற்றும் எஃப்-பேஸ் மாடல்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. எக்ஸ்இ மாடலை காட்டிலும் எக்ஸ்எஃப் கார் தோற்றத்தை பெரியதாக கொண்டது மட்டுமில்லாமல், தொழிற்நுட்ப வசதிகளையும் கூடுதலாக கொண்டுள்ளது. இதனால் இதன் விலை எக்ஸ்ஷோரூமில் சற்று அதிகமாக ரூ.55.67 லட்சமாக உள்ளது.

அதிரடியாக எக்ஸ்இ, எக்ஸ்எஃப் & எஃப்-பேஸ் டீசல் மாடல்களின் விற்பனையை இந்தியாவில் நிறுத்தியது ஜாகுவார்...

எஃப்-பேஸ் லக்சரி-எஸ்யூவி மாடலாக இந்தியாவில் சந்தைப்படுத்தப்பட்டு வருகிறது. சிங்கிள் ட்ரிம் தேர்வுடன் விற்பனையில் ஆடி க்யூ5, பிஎம்டபிள்யூ எக்ஸ்3 மற்றும் மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்சி மாடல்களை எதிர்கொண்டுவருகின்ற இந்த லக்சரி எஸ்யூவி மாடலின் ஆரம்ப விலை சந்தையில் ரூ.66.07 லட்சமாக உள்ளது.

அதிரடியாக எக்ஸ்இ, எக்ஸ்எஃப் & எஃப்-பேஸ் டீசல் மாடல்களின் விற்பனையை இந்தியாவில் நிறுத்தியது ஜாகுவார்...

2.0 லிட்டர் டீசல் என்ஜின் மாடல்களின் விற்பனையை இந்தியாவில் ஜாகுவார் நிறுவனம் நிறுத்தியுள்ளதால் இதற்கு மாற்றாக கூடுதல் என்ஜின் தேர்வுகளை வருங்காலத்தில் இந்நிறுவனம் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
மேலும்... #ஜாகுவார் #jaguar
English summary
Jaguar XE, XF, F-Pace diesels discontinued
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X