இந்த காரைதான் ஜேம்ஸ்பாண்ட் அடுத்த படத்தில் ஓட்ட இருக்கிறாரா..? ஆவலை தூண்டும் சிறப்பு தகவல் கசிந்தது!

விரைவில் திரையரங்குகளில் அதிரடி காட்டவிருக்கும் ஜேம்ஸ்பாண்டின் அடுத்த படத்தில் குறிப்பிட்ட காரை பயன்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த கார் எத்தகைய சிறப்பு வாய்ந்தது என்பதை இந்த பதிவில் காணலாம்.

இந்த காரைதான் ஜேம்ஸ்பாண்ட் அடுத்த படத்தில் ஓட்ட இருக்கிறாரா..? ஆவலை தூண்டும் சிறப்பு தகவல் கசிந்தது..!

இந்தியாவில் பல நூறு நடிகர்கள் இருக்கின்றனர். இவர்களுக்கு மொழி வாரியாகவே மட்டுமே ரசிகர்கள் அமைகின்றனர். ஆகையால், அனைத்து நடிகர்களுக்கும் நாடு முழுவதும் ரசிகர்கள் நிலவுவதில்லை. ஆனால், ஒரு சில நடிகர்களுக்கு மட்டும் மொழி, மாநிலம் ஆகிய பேதங்கள் இன்றி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

இந்த காரைதான் ஜேம்ஸ்பாண்ட் அடுத்த படத்தில் ஓட்ட இருக்கிறாரா..? ஆவலை தூண்டும் சிறப்பு தகவல் கசிந்தது..!

ஹாலிவுட் திரைப்பட நடிகர்கள்தான் இந்த அதிர்ஷ்டசாலிகள். இவர்களுக்கு இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் முழுவதும் ரசிகர்கள் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த காரைதான் ஜேம்ஸ்பாண்ட் அடுத்த படத்தில் ஓட்ட இருக்கிறாரா..? ஆவலை தூண்டும் சிறப்பு தகவல் கசிந்தது..!

பெரும்பாலும், ஹாலிவுட் திரைப்படங்கள் ஆக்சன், திரில்லர், அட்வென்சர் நிறைந்த படங்களாகவே இருக்கின்றன. இதன் காரணத்தினாலேயே ஹாலிவுட் திரைப்பட நடிகர்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் காணப்படுகின்றனர். நம் நாட்டில் உள்ள ரஜினி, அமிதாப்பச்சான் போன்ற நடிகர்களுக்கும் உலகம் தழுவிய ரசிகர்கள் இருக்கின்றனர். ஆனால், இவர்களுக்கு காணப்படும் ரசிக பட்டாளங்களை மிஞ்சும் வகையில் ஹாலிவுட் திரைப்பட நடிகர்களுக்கான விசிறிகள் இருக்கின்றனர்.

இந்த காரைதான் ஜேம்ஸ்பாண்ட் அடுத்த படத்தில் ஓட்ட இருக்கிறாரா..? ஆவலை தூண்டும் சிறப்பு தகவல் கசிந்தது..!

குறிப்பிட்ட திரைப்படத்தின் மூலமே ஹாலிவுட் திரைப்பட நடிகர்கள் உலக ஃபேமஸ் ஆகின்றனர். அந்தவகையில், ஜேம்ஸ்பாண்ட் திரைபடத்திற்கு இந்தியாவில் மிக அதிக ரசிகர்கள் இருக்கின்றனர்.

இந்த காரைதான் ஜேம்ஸ்பாண்ட் அடுத்த படத்தில் ஓட்ட இருக்கிறாரா..? ஆவலை தூண்டும் சிறப்பு தகவல் கசிந்தது..!

இந்த படத்தில் வரும் சண்டை காட்சிகள் மற்றும் சேஸிங் காட்சிகள் எல்லாம் ரசிகர்களாக இல்லாதவர்களைக்கூட ரசிகர்களாக்கி விடும். அந்தளவிற்கு சண்டை காட்சியாகட்டும், துப்பாக்கிச் சூடு, சேஸிங் போன்றவை மிகவும் விறுவிறுப்பாக எடுக்கப்பட்டிருக்கும்.

இந்த காரைதான் ஜேம்ஸ்பாண்ட் அடுத்த படத்தில் ஓட்ட இருக்கிறாரா..? ஆவலை தூண்டும் சிறப்பு தகவல் கசிந்தது..!

மேலும், இந்த படத்தில் ஹீரோ மற்றும் வில்லன்களுக்கென பிரத்யேக கார்கள் பயன்படுத்துவது வழக்கம் அந்த கார்கள் சாதாரணமாக நாம் பயன்படுத்தும் கார்களைக் காட்டிலும் அதிகதிறன் மிக்கவையாக இருக்கும். குறிப்பாக, ராக்கெட் லாஞ்ச், மறைந்துபோகும் சக்தி, நீர் மூழ்கி கப்பலாக உருமாறுதல் என பல்வேறு திறன்களைக் கொண்டவையாக அவை காட்சிப்படுத்தப்படுகின்றன.

இந்த காரைதான் ஜேம்ஸ்பாண்ட் அடுத்த படத்தில் ஓட்ட இருக்கிறாரா..? ஆவலை தூண்டும் சிறப்பு தகவல் கசிந்தது..!

அந்தவகையில், விரைவில் வெளிவரவிருக்கும் 'நோ டைம் டு டை' என்ற ஜேம்ஸ் பாண்டின் அடுத்த திரைப்படத்தில் ஆஸ்டன் மார்டின் நிறுவனத்தின் புதிய மாடலான வல்ஹல்லா என்ற அதிதிறன் வாய்ந்த கார் ஹீரோவின் கைகளில் விளையாடவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த கார் எப்படி இருக்கும் என்பதை விளக்கும் வகையிலான வீடியோ ஒன்றை சூப்பகார் பிளாண்டே என்ற யுடியூப் தளம் வெளியிட்டுள்ளது.

இந்த காரைதான் ஜேம்ஸ்பாண்ட் அடுத்த படத்தில் ஓட்ட இருக்கிறாரா..? ஆவலை தூண்டும் சிறப்பு தகவல் கசிந்தது..!

அஸ்டன் மார்டின் நிறுவனத்தின் இந்த சூப்பர் கார் பிரம்மிக்க வைக்கின்ற வகையிலான பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டிருக்கின்றது. இதனை வெளிப்படுத்தும் வகையிலேயே இந்த வீடியோவில் ஹல்வல்லா கார் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

இந்த கார் மிட்-எஞ்ஜின் ஸ்போர்ட்ஸ் காராகும். இதனை அஸ்டன் மார்டின் நிறுவனத்தின் மற்றுமொரு புகழ்வாய்ந்த ஸ்போர்ட்ஸ் காரான வல்கையர் மாடலை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தகாரைக் காட்டிலும் வல்ஹல்லா அதிக சக்தி வாய்ந்த காராக தயார் செய்யப்பட்டுள்ளது.

இந்த காரைதான் ஜேம்ஸ்பாண்ட் அடுத்த படத்தில் ஓட்ட இருக்கிறாரா..? ஆவலை தூண்டும் சிறப்பு தகவல் கசிந்தது..!

மேலும், இந்த காரை பொதுசாலையில் பயன்படுத்துவது மிகவும் சுலபம் என கூறப்படுகின்றது. இந்த கார் ஜேம்ஸ்பாண்ட்-இன் கைகளில் விளையாட இருக்கும் என கூறப்பட்டு வரும் அதேவேலையில் இது உறுதியான தகவல் இல்லை என கூறப்பட்டு வருகின்றது. ஆகையால், இந்த கார் ஜேம்ஸ்பாண்ட் அல்லது அவருடன் நடிக்கும் சக நடிகர் யாரேனும் பயன்படுத்தலாம் என கூறப்படுகின்றது. இது, படம் வெளிவந்த பின்னரே உறுதியாக தெரியவரும்.

இந்த காரைதான் ஜேம்ஸ்பாண்ட் அடுத்த படத்தில் ஓட்ட இருக்கிறாரா..? ஆவலை தூண்டும் சிறப்பு தகவல் கசிந்தது..!

சரி வாருங்கள் வீடியோவில் காரை பற்றி கூறிய சில முக்கிய தகவல்களை பார்க்கலாம். இந்த கார் காற்றை கிழித்துக் கொண்டு செல்ல ஏதுவாக ஸ்கூப் வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, காரின் முன் பக்கத்திற்கு மிகவும் கூர்மையான முகம் தோற்றம் வழங்கப்பட்டுள்ளது. இது, சாலையில் சீறிப்பாய்ந்து செல்ல உதவும். இதுமட்டுமின்றி, இடைகுறைப்பிற்காக ஒரு சில பாகங்களை 3டி பிரிண்டிங்மூலம் தயாரித்து பயன்படுத்தியுள்ளது.

இத்துடன், காரின் பின் பக்கம் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தி வேகத்தை உருவாக்குவதற்காக கார்பன் ஃபைபர் கொடுக்கப்பட்டுள்ளது. இது, பின்பக்கத்தில் இருக்கும் எஞ்ஜினுக்கு அதிக இழுவை திறனை வழங்கும்.

இதேபோன்று, காரின் கவர்ச்சியான தோற்றத்திற்காக கழுகின் இறக்கை அமைப்பைப்போன்ற டூர்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த காருக்கு பின்பக்கத்தை பார்க்கின்ற வகையில் கண்ணாடிகள் வழங்கப்படவில்லை. இதற்கு பதிலாக கேமிராக்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த காரைதான் ஜேம்ஸ்பாண்ட் அடுத்த படத்தில் ஓட்ட இருக்கிறாரா..? ஆவலை தூண்டும் சிறப்பு தகவல் கசிந்தது..!

அது காரின் பக்கவாட்டில் மற்றும் பின்புறத்தில் வரும் வாகனங்களை திரைமூலம் காட்டி கொடுக்கும். இதுமட்டுமின்றி, பல்வேறு தகவல்களையும் காரின் உள்பகுதியில் வழங்கப்பட்டுள்ள திரை ஓட்டுநருக்கு வழங்கும். இதுபோன்ற பல்வேறு சிறப்பம்சங்களின் காரணமாகவே இந்த விரைவில் வெளிவரவிருக்கும் ஜேம்ஸ்பாண்ட் திரைப்படத்தில் பயன்படுத்தியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த காரைதான் ஜேம்ஸ்பாண்ட் அடுத்த படத்தில் ஓட்ட இருக்கிறாரா..? ஆவலை தூண்டும் சிறப்பு தகவல் கசிந்தது..!

அஸ்டன் மார்டின் நிறுவனத்தின் இந்த காரில் ஹைபிரிட் செய்யப்பட்ட ட்வின் டர்போ வி6 எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 1000 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது. இந்த காரை அஸ்டன் மார்ட்டின் நிறுவனம் வெறும் 500 யூனிட்டுகளை மட்டுமே விற்பனைக்காக தயாரித்துள்ளது.

ஆகையால், இந்த கார் குறிப்பிட்ட அளவில் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கும் என்பது உறுதியாகியுள்ளது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
James Bond Is Going To Drive Aston Martin Valhalla On His Next Movie. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X