Just In
- 44 min ago
ஆக்டிவா உடனான போட்டியை சமாளிக்க குறைந்த விலை ஜூபிடர்... டிவிஎஸ் அதிரடி... ஆஹா இவ்ளோ குறைந்த விலையா?
- 2 hrs ago
சீனாவில் தீப்பற்றி எரிந்த டெஸ்லா மாடல் 3... இந்தியாவிற்கு வரவுள்ள எலெக்ட்ரிக் கார் என்பதால் கடும் அதிர்ச்சி...
- 3 hrs ago
முண்டாசு கட்டிய பிஎம்டபிள்யூ... இந்தியாவில் 25 புதிய மாடல்களுடன் தெறிக்கவிட திட்டம்!
- 3 hrs ago
சுசுகி அக்செஸ் 125 ஸ்கூட்டரின் விலை உயர்ந்தன... எவ்வளவு உயர்ந்திருக்கு தெரிஞ்சா நிச்சயம் ஆச்சரியப்படுவீங்க!!
Don't Miss!
- Sports
ரஹானே மட்டும் அந்த முடிவை எடுத்து இருந்தால்.. ஆடிப் போன ஆஸி.. வெளியான ரகசியம்!
- News
பிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் -ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவு
- Finance
பட்ஜெட்டுக்கு முன் எதில் முதலீடு செய்யலாம்.. முதலீட்டாளர்களுக்கு சூப்பர் டிப்ஸ்..!
- Movies
மன்னிச்சு விட்ருங்கன்னு கெஞ்சுறாங்க.. பாலாவை மன்னிக்கணும்னா 3 கண்டிஷன் போடும் ஜோ மைக்கேல்!
- Lifestyle
மொறுமொறுப்பான... ஓட்ஸ் கட்லெட்
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மின்சாரமயமாகிறது உலகம்... 2030ம் ஆண்டு முதல் புதிய பெட்ரோல், டீசல் வாகனங்களின் விற்பனைக்கு அதிரடி தடை?
இங்கிலாந்தை தொடர்ந்து ஜப்பானிலும் 2030ம் ஆண்டு முதல் புதிய பெட்ரோல், டீசல் வாகனங்களின் விற்பனைக்கு தடை விதிக்கப்படலாம் என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐசி இன்ஜின் மூலம் இயங்கும் பெட்ரோல், டீசல் வாகனங்கள் சுற்றுச்சூழலை கடுமையாக மாசுபடுத்துகின்றன. அத்துடன் கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக பெரும் தொகையை செலவிட வேண்டியுள்ளது. எனவே உலகின் பல்வேறு நாடுகளும் தற்போது பெட்ரோல், டீசல் வாகனங்களின் பயன்பாட்டை குறைத்து வருகின்றன.

அதற்கு பதிலாக எலெக்ட்ரிக் மற்றும் ஹைப்ரிட் போன்ற வாகனங்களின் பயன்பாடு ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட உலகின் அனைத்து நாடுகளுமே இந்த விஷயத்தில் ஆர்வமாக உள்ளன. இதில், இங்கிலாந்து அரசு வரும் 2030ம் ஆண்டு முதல், ஐசி இன்ஜினில் இயங்கும் புதிய பெட்ரோல், டீசல் கார்களின் விற்பனை தடை செய்யப்படும் என அதிகாரப்பூர்வமாகவே அறிவித்து விட்டது.
ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

முதலில் 2040ம் ஆண்டு முதல் புதிய பெட்ரோல், டீசல் கார்களின் விற்பனைக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில், பின்னர் அது 2035ம் ஆண்டாக குறைக்கப்பட்டு, இறுதியில் 2030ம் ஆண்டு முதல் தடை என அதிகாரப்பூர்வமாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த வரிசையில் ஜப்பானும் இணையவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

அடுத்த சுமார் 15 ஆண்டுகளில், அனைத்து வாகனங்களும் 100 சதவீதம் முழுமையாக மின்சாரமயமாக வேண்டும் என ஜப்பான் இலக்கு நிர்ணயித்துள்ளது. அத்துடன் 2050ம் ஆண்டுக்குள் கார்பன் உமிழ்வு இல்லாத நாடாக உருவெடுக்கவும் ஜப்பான் திட்டமிட்டுள்ளது. இந்த இலக்குகளை எட்டும் விதமாக வரும் 2030களின் மையப்பகுதியில் இருந்து ஜப்பானில் விற்பனை செய்யப்படும் அனைத்து புதிய வாகனங்களும், எலெக்ட்ரிக் அல்லது ஹைப்ரிட் வாகனங்களாகதான் இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதாவது பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்களின் விற்பனைக்கு தடை விதிக்கப்படலாம். இதற்கான உறுதியான நடவடிக்கைகளை ஜப்பான் எடுக்க தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக ஐசி இன்ஜின் மூலம் இயங்கும் வாகனங்களை, புதிய வாகனங்களின் சந்தையில் இருந்து படிப்படியாக வெளியேற்ற திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. புதிய வாகன சந்தையில், எலெக்ட்ரிக் மற்றும் ஹைப்ரிட் வாகனங்கள் மட்டுமே இருப்பது உண்மையில் குறிப்பிடத்தகுந்த ஒரு மாற்றமாக இருக்கும்.

ஜப்பானை சேர்ந்த டொயோட்டா நிறுவனம் ஹைப்ரிட் தொழில்நுட்பத்தில் தலைசிறந்து விளங்குகிறது. இதற்கு அந்த நிறுவனத்தின் ப்ரையஸ் ஹைப்ரிட் (Toyota Prius) காரை ஒரு உதாரணமாக சொல்ல முடியும். அத்துடன் ஜப்பானை சேர்ந்த மற்ற ஒரு சில நிறுவனங்களும் இந்த செக்மெண்ட்டில், உலகின் மிகச்சிறந்த உற்பத்தியாளர்களாக திகழ்ந்து வருகின்றன.

ஜப்பான் நிறுவனங்கள் உலகளவில் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், ஜப்பானின் உள்நாட்டு சந்தையில் சமீப காலமாக ஹைப்ரிட் மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை அவ்வளவு சிறப்பாக இல்லை. 2018ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, 2019ம் ஆண்டில் ஜப்பானில், ஹைப்ரிட் மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்களின் பதிவு சரிவடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சவாலை கடந்து, ஹைப்ரிட் மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை ஜப்பான் ஊக்குவிக்கவுள்ளது. உலகின் பல்வேறு நாடுகளும் வரும் 2030ம் ஆண்டு முதல் பெட்ரோல், டீசல் வாகனங்களின் விற்பனைக்கு தடை விதிப்பது குறித்து ஆலோசித்து வருவது இங்கே குறிப்பிடத்தக்கது. இந்தியாவிலும் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டு ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மத்திய அரசும், பல்வேறு மாநில அரசுகளும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மானியம் மற்றும் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றன.
Note: Images used are for representational purpose only.