ஜப்பான் நாட்டு போலீசாருக்கு லெக்ஸஸ் எல்சி500 கூபே கார்! குற்றவாளி தப்பிச்சி போறதுக்கு சான்ஸே இல்ல

ஜப்பானிய போலீசார் போக்குவரத்து ரோந்து பணிகளுக்காக லெக்ஸஸ் எல்சி500 காரை தங்களது ரோந்து வாகனங்களுடன் இணைத்து கொண்டுள்ளனர். இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஜப்பான் நாட்டு போலீசாருக்கு லெக்ஸஸ் எல்சி500 கூபே கார்! குற்றவாளி தப்பிச்சி போறதுக்கு சான்ஸே இல்ல

செயல்திறன்மிக்க கார்களை மற்ற நாட்டு போலீசார் பயன்படுத்தி வருவதை கடந்த சில வருடங்களாக அதிகளவில் பார்த்து வருகிறோம். குறிப்பாக துபாய் போலீசார் புகாட்டி வெய்ரோன், அஸ்டன் மார்டின் ஒன்-77, ஆடி ஆர்8, பென்ட்லீ காண்டினெண்டல் ஜிடி, லம்போர்கினி அவெண்டேடார் போன்ற கார்களை பயன்பாட்டிற்கு கொண்டுவந்து ஆச்சிரியப்படுத்தி இருந்தனர்.

ஜப்பான் நாட்டு போலீசாருக்கு லெக்ஸஸ் எல்சி500 கூபே கார்! குற்றவாளி தப்பிச்சி போறதுக்கு சான்ஸே இல்ல

இந்த வகையில் தற்போது ஜப்பான் நாட்டு போலீசார் தங்களது ரோந்து வாகனங்களில் புதியதாக பலரது கனவு வாகனமாக இருக்கும் லெக்ஸஸ் எல்சி500 காரை இணைத்து கொண்டுள்ளனர். இந்த லெக்ஸஸ் கார் சாலை விபத்துகளை குறைக்கவும், தப்பி ஓடும் வாகனங்களைத் தொடரவும் அல்லது நிறுத்தவும் பயன்படுத்தப்படவுள்ளன.

ஜப்பான் நாட்டு போலீசாருக்கு லெக்ஸஸ் எல்சி500 கூபே கார்! குற்றவாளி தப்பிச்சி போறதுக்கு சான்ஸே இல்ல

ஜாப்பான் நாட்டு போலீசாரின் அடையாளமாக கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ள இந்த கூபே காரில் போலீசாரின் பயன்பாட்டிற்காக மேற்கூரையில் ஒளிரும் லைட் பாரும், முன்பக்க க்ரில்லிற்கு உட்புறத்தில் விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன.

ஜப்பான் நாட்டு போலீசாருக்கு லெக்ஸஸ் எல்சி500 கூபே கார்! குற்றவாளி தப்பிச்சி போறதுக்கு சான்ஸே இல்ல

இந்த மாடிஃபை மாற்றங்கள் அனைத்தும் சேர்த்து இந்த லெக்ஸஸ் எல்சி500 காரின் விலை 17.4 மில்லியன் யென் என கூறப்பட்டுள்ளது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு கிட்டத்தட்ட ரூ.1.22 கோடியாகும். ஆனால் இந்த கூபே காரை லெக்ஸஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கசுவோ நகாமுரா, டொச்சிகி மாவட்ட போலீசாருக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.

ஜப்பான் நாட்டு போலீசாருக்கு லெக்ஸஸ் எல்சி500 கூபே கார்! குற்றவாளி தப்பிச்சி போறதுக்கு சான்ஸே இல்ல

போலீசாரின் உபயோகத்திற்காக காரின் என்ஜின் அமைப்பில் எதாவது மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதா என்பது தெரியவில்லை. லெக்ஸஸ் எல்சி500 காரில் 5.0 லிட்டர் NA வி8 பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. 10-ஸ்பீடு நேரடி ஷிஃப்ட் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் உடன் வழங்கப்படும் இந்த பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 471 பிஎச்பி மற்றும் 540 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

ஜப்பான் நாட்டு போலீசாருக்கு லெக்ஸஸ் எல்சி500 கூபே கார்! குற்றவாளி தப்பிச்சி போறதுக்கு சான்ஸே இல்ல

0-வில் இருந்து 60 mph என்ற வேகத்தை வெறும் 4.7 வினாடிகளில் அடைந்துவிடக்கூடிய இந்த லெக்ஸஸ் கார், 100 mph வேகத்தை 10.8 வினாடிகளில் எட்டிவிடும். எல்சி500 காரின் அதிகப்பட்ச வேகம் 168 mph (270kmph) ஆகும். இத்தகைய திறன் கொண்ட வாகனம் ரோந்து பணிகளில் இணைவது உண்மையில் அந்நாட்டு போலீசாருக்கு கூடுதல் பலமே. ஜப்பான் போலீசாரின் ரோந்து வாகனங்களில் பிரபலமான நிஸான் ஜிடி-ஆர் காரும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜப்பான் நாட்டு போலீசாருக்கு லெக்ஸஸ் எல்சி500 கூபே கார்! குற்றவாளி தப்பிச்சி போறதுக்கு சான்ஸே இல்ல

இதுமட்டுமின்றி லெக்ஸஸ் எல்சி ஹைப்ரீட் வாகனமாகவும் (எல்சி 500எச்) விற்பனைக்கு கிடைக்கிறது. இதில் 3.5 லிட்டர், NA வி6 பெட்ரோல் என்ஜின் 132 கிலோவாட்ஸ் எலக்ட்ரிக் மோட்டார் உடன் வழங்கப்படுகிறது. இந்த ஹைப்ரீட் என்ஜின் அமைப்பின் மூலமாக 354 பிஎச்பி மற்றும் 500 என்எம் டார்க் திறனை அதிகப்பட்சமாக பெற முடியும்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Japanese Police Add Lexus LC 500 Coupe To Their Fleet
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X