ஜீப் காம்பஸ் பிஎஸ்6 இரு என்ஜின் தேர்வுகளுடன் அறிமுகம்..! டீசல் வேரியண்ட்டின் விலை இவ்வளவு அதிகமா?

அமெரிக்க ஆட்டோமொபைல் நிறுவனமான ஜீப் நிறுவனம் இந்திய சந்தையில் பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமான புதிய காம்பஸ் எஸ்யூவி மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. ஜீப் நிறுவனத்தின் இந்த புதிய பிஎஸ்6 கார் குறித்து விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

ஜீப் காம்பஸ் பிஎஸ்6 இரு என்ஜின் தேர்வுகளுடன் அறிமுகம்..! டீசல் வேரியண்ட்டின் விலை இவ்வளவு அதிகமா?

இந்த புதிய பிஎஸ்6 காம்பஸ் எஸ்யூவி மாடலில் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் டர்போ டீசல் என்ஜின்கள் தேர்வுகளாக வழங்கப்பட்டுள்ளன. இவற்றின் விலை பற்றிய எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படவில்லை.

ஜீப் காம்பஸ் பிஎஸ்6 இரு என்ஜின் தேர்வுகளுடன் அறிமுகம்..! டீசல் வேரியண்ட்டின் விலை இவ்வளவு அதிகமா?

இந்த நிலையில், இந்த புதிய பிஎஸ்6 மாடலின் பெட்ரோல் வேரியண்ட் முந்தைய பிஎஸ்4 வெர்சனை விட ரூ.25,000 வரையிலும், டீசல் வேரியண்ட் சுமார் ரூ.1.1 லட்சம் வரையிலும் விலை அதிகரிப்பை பெற்றுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

ஜீப் காம்பஸ் பிஎஸ்6 இரு என்ஜின் தேர்வுகளுடன் அறிமுகம்..! டீசல் வேரியண்ட்டின் விலை இவ்வளவு அதிகமா?

இருப்பினும் என்ஜினின் வெளியிடும் ஆற்றல் அளவில், பிஎஸ்6 அபிடேட்டால் எந்த மாற்றத்தையும் கொண்டுவரப்படவில்லை. இதனால் இவை பிஎஸ்4 தரத்தில் காருக்கு வழங்கிய பவரை இந்த பிஎஸ்6 மாடலுக்கும் வழங்கவுள்ளன. இந்த பிஎஸ்6 மாடலின் பெட்ரோல் வேரியண்ட் 161 பிஎச்பி பவர் மற்றும் 250 என்எம் டார்க் திறனையும், டீசல் வேரியண்ட் 172 பிஎச்பி பவர் மற்றும் 350 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

ஜீப் காம்பஸ் பிஎஸ்6 இரு என்ஜின் தேர்வுகளுடன் அறிமுகம்..! டீசல் வேரியண்ட்டின் விலை இவ்வளவு அதிகமா?

இந்த இரு என்ஜின் தேர்வுகளுடனும் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் நிலையாக வழங்கப்பட்டுள்ளது. பெட்ரோல் வேரியண்ட்டிற்கு மட்டும் கூடுதலாக 7-ஸ்பீடு ட்யூல்-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படவுள்ளது. என்ஜினின் வெளிப்படுத்தும் ஆற்றல் அளவுகளில் எந்த மாற்றமும் கொண்டுவரப்படவில்லை என்றாலும், ஏஆர்ஏஐ எரிபொருள் திறனில் அப்டேட்டை எதிர்பார்க்கலாம்.

ஜீப் காம்பஸ் பிஎஸ்6 இரு என்ஜின் தேர்வுகளுடன் அறிமுகம்..! டீசல் வேரியண்ட்டின் விலை இவ்வளவு அதிகமா?

தற்போதைய பிஎஸ்4 காம்பஸ் மாடலின் பெட்ரோல்-மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் வேரியண்ட் ஒரு லிட்டருக்கு 14.3 கிமீ வரையிலும், பெட்ரோல்-ஆட்டோ ட்ரான்ஸ்மிஷன் வேரியண்ட் 14.1 kpl, டீசல்-மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் 4x2 வேரியண்ட் 17.1 kpl மற்றும் டீசல்-ஆ.ட்ரான்ஸ்மிஷன் 4x4 வேரியண்ட் 16.3 kpl வரையிலும் மைல்லேஜ்ஜை வழங்கி வருகின்றன.

ஜீப் காம்பஸ் பிஎஸ்6 இரு என்ஜின் தேர்வுகளுடன் அறிமுகம்..! டீசல் வேரியண்ட்டின் விலை இவ்வளவு அதிகமா?

புதிய காம்பஸ் பிஎஸ்6 மாடலின் அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டார்ட்/ஸ்டாப் பொத்தான் நிலையாக வழங்கப்பட்டுள்ளது. ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் வேரியண்ட்களுக்கு மட்டும் க்ரூஸ் கண்ட்ரோல் கொடுக்கப்பட்டுள்ளது.

ஜீப் காம்பஸ் பிஎஸ்6 இரு என்ஜின் தேர்வுகளுடன் அறிமுகம்..! டீசல் வேரியண்ட்டின் விலை இவ்வளவு அதிகமா?

இவை மட்டுமின்றி இந்த புதிய காம்பஸ் மாடலின் டாப்-வேரியண்ட்டான லிமிட்டட் ப்ளஸ் 4x4 ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷனில், ஆட்டோ ஹெட்லேம்ப், ஆட்டோ-டிம்மிங் ஐஆர்விஎம், 18 இன்ச்சில் அலாய் சக்கரங்கள் மற்றும் மழை தண்ணீர் பட்டதும் தன்னிச்சையாக இயங்கக்கூடிய வைபர்கள் உள்ளிட்டவற்றை ஜீப் நிறுவனம் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.

ஜீப் காம்பஸ் பிஎஸ்6 இரு என்ஜின் தேர்வுகளுடன் அறிமுகம்..! டீசல் வேரியண்ட்டின் விலை இவ்வளவு அதிகமா?

இவற்றுடன் பெரிய அளவிலான 8.4 இன்ச் யூ-கனெக்டட் இன்போடெயின்மெண்ட் திரை, ப்ரீமியம் தோற்றத்திற்காக லெதரால் அலங்கரிக்கப்பட்ட கேபின், 8 விதங்களாக அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஓட்டுனர் இருக்கை, இரட்டை கதவுகளுடன் பனோராமிக் ரூஃப் மற்றும் ஆறு காற்றுப்பைகள் உள்ளிட்டவையும் காம்பஸ் பிஎஸ்6 மாடலின் டாப் வேரியண்ட்டில் வழங்கப்பட்டுள்ளன.

ஜீப் காம்பஸ் பிஎஸ்6 இரு என்ஜின் தேர்வுகளுடன் அறிமுகம்..! டீசல் வேரியண்ட்டின் விலை இவ்வளவு அதிகமா?

அதேநேரம் காம்பஸ் பிஎஸ்6 மாடலின் விலை குறைந்த வேரியண்ட்களில், பின்னால் பார்க்க பயன்படும் கேமிரா மற்றும் டைனாமிக் கைட்லைன் வசதிகளை கொண்ட யூகனெக்டட் திரை 7-இன்ச்சில், 8.4 இன்ச் திரைக்கு மாற்றாக பொருத்தப்பட்டுள்ளது.

ஜீப் காம்பஸ் பிஎஸ்6 இரு என்ஜின் தேர்வுகளுடன் அறிமுகம்..! டீசல் வேரியண்ட்டின் விலை இவ்வளவு அதிகமா?

இதனுடன் 17 இன்ச்சில் அலாய் சக்கரங்கள், ட்யூல்-டோனில் உட்புற கேபின், காரை ஸ்டார்ட் செய்வதற்கு பொத்தான், இபிடியுடன் உள்ள ஏபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம், ட்ராக்‌ஷன் கண்ட்ரோல், எலக்ட்ரானிக் ஸ்டேபிளிட்டி கண்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், எலக்ட்ரிக் பார்க்கிங் ப்ரேக் மற்றும் அனைத்து சக்கரங்களிலும் அதிக அதிர்வெண் கொண்ட சஸ்பென்ஷன் உடன் உள்ள டிஸ்க் ப்ரேக்குகள் போன்றவையும் காம்பஸின் விலை குறைந்த வேரியண்ட்களில் வழங்கப்பட்டு உள்ளன.

ஜீப் காம்பஸ் பிஎஸ்6 இரு என்ஜின் தேர்வுகளுடன் அறிமுகம்..! டீசல் வேரியண்ட்டின் விலை இவ்வளவு அதிகமா?

ஏகப்பட்ட அப்டேட்டான தொழிற்நுட்பங்கள் இந்த புதிய பிஎஸ்6 எஸ்யூவி மாடலில் வழங்கப்பட்டிருந்தாலும், இந்த 2020 மாடலுக்கு நிர்ணயிக்கப்படவுள்ள விலை எதிர்பார்த்ததை விட சற்று அதிகமாகும். குறிப்பாக இந்த மாடலின் டீசல் வேரியண்ட் ரூ.1.1 லட்சம் வரையில் விலை உயர்வை பெற்றிருப்பது, நிச்சயம் வாடிக்கையாளர்கள் யாரும் எதிர்பாராத ஒன்றாகும்.

Most Read Articles
மேலும்... #ஜீப் #jeep
English summary
Jeep Compass Bs6 launched in India price hiked upto Rs.1.1 lakh
Story first published: Monday, February 3, 2020, 19:55 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X