புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் உலகளாவிய அறிமுக தேதி வெளியானது!

மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் 2021 மாடலாக வரும் புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் உலகளாவிய அறிமுக தேதி விபரம் வெளியாகி இருக்கிறது.

புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் உலகளாவிய அறிமுக தேதி வெளியானது!

ஜீப் நிறுவனத்தின் விற்பனையில் மிக முக்கிய மாடலாக காம்பஸ் எஸ்யூவி இருந்து வருகிறது. இந்தியாவிலும் ஜீப் காம்பஸ் எஸ்யூவிக்கு சிறப்பான வரவேற்பு இருந்து வருகிறது. இந்த நிலையில், பல்வேறு கூடுதல் சிறப்பம்சங்கள், வடிவமைப்பு மாற்றங்களுடன் ஜீப் காம்பஸ் எஸ்யூவி ஃபேஸ்லிஃப்ட் மாடலாக மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.

புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் உலகளாவிய அறிமுக தேதி வெளியானது!

இந்த நிலையில், 2021ம் ஆண்டு மாடலாக இந்த புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவி வரும் ஜூன் 4ந் தேதி உலகளாவிய அளவில் அறிமுகம் செய்யப்பட இருப்பது தெரிய வந்துள்ளது. ஜீப் காம்பஸ் எஸ்யூவிக்கு என்று தனி வாடிக்கையாளர் வட்டம் உள்ளது. அவர்கள் மத்தியில் இந்த கார் பெரும் ஆவலை ஏற்படுத்தி உள்ளது.

MOST READ : பருவமழை காலம் வருதுங்க... உங்க வண்டி பத்திரம்!

புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் உலகளாவிய அறிமுக தேதி வெளியானது!

ஏற்கனவே வெளியான ஸ்பை படங்களில் புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவியில் வடிவமைப்பில் சில மாற்றங்கள் நிகழ்ந்திருப்பது தெரிய வந்தது. அதாவது, புதிய ஹெட்லைட்டுகள், க்ரில் அமைப்பு, பம்பர் அமைப்பு, எல்இடி டெயில் லைட்டுகள் இடம்பெற இருக்கின்றன.

புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் உலகளாவிய அறிமுக தேதி வெளியானது!

இந்த காரின் டிசைனில் சில முக்கிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. புதுப்பொலிவுடன் க்ரில் அமைப்பு, ஹெட்லைட்டுகள், பம்பர் வழங்கப்பட உள்ளது. எல்இடி ஹெட்லைட்டுகள் மற்றும் டெயில் லைட்டுகள் இடம்பெறும் என்று தெரிகிறது. பக்கவாட்டு டிசைனில் பெரிய வித்தியாசங்கள் இருக்காது.

புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் உலகளாவிய அறிமுக தேதி வெளியானது!

உட்புறத்தில் முக்கிய அம்சமாக 12.3 அங்குல தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற இருக்கிறது. இதனுடன், ஃபியட் க்றைஸ்லர் குழுமத்தின் யுகனெக்ட் 5 என்ற தொழில்நுட்பமும் வழங்கப்பட உள்ளது. இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் ஸ்மார்ட்ஃபோனை இன்டர்நெட் மூலமாக இணைக்கும் இந்த தொழில்நுட்பம் மூலமாக ஏராளமான தகவல்களையும், வசதிகளையும் வாடிக்கையாளர்கள் பெற முடியும்.

புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் உலகளாவிய அறிமுக தேதி வெளியானது!

இந்த காரில் வழங்கப்பட இருக்கும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் 6ஜி ரேம் வசதியும், 64 ஜிபி ஸ்டோரேஜ் வசதியையும் பெற்றிருக்கும். அமேஸான் அலெக்ஸா, ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும்.

புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் உலகளாவிய அறிமுக தேதி வெளியானது!

வென்டிலேட்டட் இருக்கைகள், முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, பிரிமீயமான சவுண்ட் சிஸ்டம் ஆகியவையும் இந்த காரில் வழங்கப்பட உள்ளது.

புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் உலகளாவிய அறிமுக தேதி வெளியானது!

புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவியில் தற்போது வழங்கப்படும் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் தக்கவைக்கப்படும். மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் வர இருக்கிறது.

புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் உலகளாவிய அறிமுக தேதி வெளியானது!

வரும் ஜூன் 4ந் தேதி உலகளாவிய அளவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் இந்த புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவி இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த துவக்கத்தில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ரூ.16.49 லட்சத்தில் இருந்து கிடைக்கிறது. ஃபேஸ்லிப்ட் மாடல் சற்று கூடுதல் விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்படும்.

Most Read Articles
மேலும்... #ஜீப் #jeep
English summary
Jeep is all set to unveil Compass facelift model during a digital press conference on June 4, 2020.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X