முதன்முறையாக ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் கார் இந்தியாவில் சோதனை...

ஜீப் காம்பஸ் மாடலின் ஃபேஸ்லிஃப்ட் வெர்சன் இந்தியாவில் முதன்முறையாக சோதனை ஓட்டத்தின்போது கண்டறியப்பட்டுள்ளது. கார்தேக்கோ செய்தி தளம் வெளியிட்டுள்ள இதன் ஸ்பை படங்களின் மூலம் வெளிவந்துள்ள தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

முதன்முறையாக ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் கார் இந்தியாவில் சோதனை...

எஃப்சிஏ க்ரூப்பின் ஜீப் காம்பஸ் மாடல் 2016ல் உலகளவில் அறிமுகமானதை தொடர்ந்து 2017ல் இந்தியாவில் காலடி எடுத்து வைத்தது. இந்த நிலையில் விரைவில் அறிமுகமாகவுள்ள இதன் ஃபேஸ்லிஃப்ட் வெர்சன் அப்டேட்டான தொழிற்நுட்பங்களுடன் புதிய வேரியண்ட்களையும் பெற்றுள்ளது.

முதன்முறையாக ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் கார் இந்தியாவில் சோதனை...

தற்போது முதன்முறையாக நம் நாட்டில் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ள இந்த கார் முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் உள்ளது. தற்சமயம் சந்தையில் விற்பனையில் உள்ள காம்பஸ் மாடலுடன் சோதனையில் உள்ள இந்த கார், ஃபேஸ்லிஃப்ட் வெர்சன் என்பதால் மிக முக்கிய மாற்றங்கள் முன்பக்கத்தில் கொண்டுவரப்பட்டிருக்கும்.

முதன்முறையாக ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் கார் இந்தியாவில் சோதனை...

இந்த வகையில் எல்இடி லைட்டிங், டெயில்லேம்ப்கள் மற்றும் பம்பர்கள் உள்ளிட்டவற்றை அப்டேட்டான டிசைனில் எதிர்பார்க்கலாம். ஆனால் ஜீப் ப்ராண்ட்டிற்கே உரிய 7-ஸ்லாட் க்ரில் டிசைனில் எந்த மாற்றமும் இருக்காது.

முதன்முறையாக ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் கார் இந்தியாவில் சோதனை...

அதேநேரம் ஃபேஸ்லிஃப்ட் மாற்றத்தால் காரின் உட்புறத்திலும் மிகவும் குறிப்பிடத்தகுந்த வகையில் அப்டேட்கள் கொண்டுவரப்பட்டிருக்கலாம். ஆனால் காரின் உட்புற ஸ்பை படம் ஒன்று கிடைக்காதது துரதிர்ஷ்டவசமானது.

முதன்முறையாக ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் கார் இந்தியாவில் சோதனை...

இருப்பினும் எஃப்சிஏவின் லேட்டஸ்ட் யுகனெக்ட் 5 சிஸ்டத்தின் உதவியுடன் இயங்கக்கூடிய புதிய 12.3 இன்ச் தொடுத்திரையுடன் ஜீப்பின் லேட்டஸ்ட் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தை நிச்சயம் எதிர்பார்க்கலாம். அதேபோல் மற்ற கண்ட்ரோல் பேனல்களுடன் டேஸ்போர்ட்டின் லேஅவுட்டும் அப்டேட் செய்யப்பட்டிருக்கலாம்.

முதன்முறையாக ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் கார் இந்தியாவில் சோதனை...

இவை தவிர்த்து மற்ற வசதிகளாக ஹெட்-அப் திரை, காற்றோட்டமான முன்புற இருக்கைகள் மற்றும் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரில் பெரிய திரை உள்ளிட்டவை கொடுக்கப்படவுள்ளன. என்ஜின் அமைப்பாக வழக்கமான 2.0 லிட்டர் டீசல் என்ஜின் தான் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதன்முறையாக ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் கார் இந்தியாவில் சோதனை...

தற்போதைய ஜீப் காம்பஸ் மாடலில் அதிகப்பட்சமாக 170 பிஎச்பி மற்றும் 350 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த டீசல் என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் என்ற இரு கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

முதன்முறையாக ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் கார் இந்தியாவில் சோதனை...

இந்த கியர்பாக்ஸ் தேர்வு காம்பஸ் எஸ்யூவி காரின் 4x4 வேரியண்ட்களுக்கும் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த டீசல் என்ஜின் உடன் தற்போதைய காம்பஸ் காரில் 163 பிஎச்பி பவரை வெளிப்படுத்தக்கூடிய 1.4 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் தேர்வும் வழங்கப்பட்டு வருகிறது.

முதன்முறையாக ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் கார் இந்தியாவில் சோதனை...

ஆனால் இதற்கு பதிலாக 2020 காம்பஸ் மாடல் மூலமாக ஐரோப்பிய நாட்டு சந்தையில் அறிமுகமாகவுள்ள 1.3 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் இந்த 2021 ஃபேஸ்லிஃப்ட் காரில் கொடுக்கப்படவுள்ளது. இந்த டர்போ-பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 150 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது

முதன்முறையாக ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் கார் இந்தியாவில் சோதனை...

இந்த புதிய டர்போ பெட்ரோல் என்ஜினிற்கு ட்ரான்ஸ்மிஷன் தேர்வாக 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு ட்யூல்-க்ளட்ச் ஆட்டோ கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்படவுள்ளன. அடுத்த வருடத்தில் முதல் பாதியில் இந்திய சந்தையில் இந்த ஃபேஸ்லிஃப்ட் கார் அறிமுகமாகவுள்ளது.

முதன்முறையாக ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் கார் இந்தியாவில் சோதனை...

தற்போதைய காம்பஸ் மாடலின் விலை சந்தையில் ரூ.16.49 லட்சத்தில் இருந்து ரூ.24.99 லட்சம் வரையில் உள்ளது. ட்ரைல்ஹாவ்க் வெர்சன் கூடுதலாக ரூ.26.8 லட்சத்தில் விற்பனை செய்யப்படுகிறது. இவற்றின் புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடலின் விலைகள் சில பத்தாயிரங்கள் கூடுதலாக இருக்கலாம்.

Most Read Articles
மேலும்... #ஜீப் #jeep
English summary
Jeep Compass Facelift Spied In India For The First Time
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X