கருப்பு அலங்கார அம்சங்களுடன் மிரட்டும் ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் ஸ்பெஷல் எடிசன்!

ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் ஸ்பெஷல் எடிசன் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருக்கிறது. தனித்துவமான பல்வேறு சிறப்புகளுடன் வந்துள்ள இந்த புதிய ஜீப் காம்பஸ் பற்றிய அனைத்து முக்கிய விபரங்களையும் இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் ஸ்பெஷல் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம்

தனி வாடிக்கையாளர் வட்டம்

இந்தியாவின் மிட்சைஸ் எஸ்யூவி மார்க்கெட்டில் மிகச் சிறந்த தேர்வுகளில் முக்கிய மாடலாக ஜீப் காம்பஸ் உள்ளது. ஜீப் நிறுவனத்தின் பாரம்பரிய டிசைனில் கம்பீரமான தோற்றம், செயல்திறன் மிக்க எஞ்சின் தேர்வுகள் இந்த எஸ்யூவிக்கு தனி வாடிக்கையாளர் வட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் ஸ்பெஷல் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம்

சந்தைப் போட்டி

இந்த நிலையில், எம்ஜி ஹெக்டர், டாடா ஹாரியர், ஹூண்டாய் டூஸான், ஃபோக்ஸ்வேகன் டி ராக் உள்ளிட்ட பல மாடல்களின் வருகையால் ஜீப் காம்பஸ் எஸ்யூவிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனை மனதில் வைத்து, வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் மதிப்பை வழங்கும் விதத்தில் புதிய ஸ்பெஷல் எடிசன் மாடலை அறிமுகப்படுத்தி உள்ளது.

ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் ஸ்பெஷல் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம்

லிமிடேட் எடிசன்

ஜீப் காம்பஸ் Night Eagle என்ற பெயரில் இந்த புதிய ஸ்பெஷல் எடிசன் மாடல் குறிப்பிடப்படுகிறது. உலக அளவில் பொதுவான ஸ்பெஷல் எடிசன் மாடலாக பல்வேறு நாடுகளிலும் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் இந்த மாடல் இந்தியாவிலும் வந்துள்ளது. ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் பெட்ரோல், டீசல் மாடல்களில் இந்த ஸ்பெஷல் எடிசன் மாடலை தேர்வு செய்யலாம். குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே லிமிடேட் எடிசனாக விற்பனை செய்யப்படும்.

ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் ஸ்பெஷல் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம்

சிறப்பம்சங்கள்

ஜீப் காம்பஸ் நைட் ஈகிள் எடிசன் மாடலில் வெளிப்புறத்திலும், உட்புறத்திலும் பல்வேறு பாகங்கள் கருப்பு வண்ணத்தில் கொடுக்கப்பட்டு இருப்பதுதான் இதன் சிறப்பு. இதன் க்ரில், பம்பர், ரூஃப் பேனல் ஆகியவை கருப்பு வர்ண பூச்சுடன் வந்துள்ளது. 18 அங்குல அளவிலான அலாய் வீல்களும் கருப்பு வண்ணத்தில் உள்ளது. இதில், ஸ்பெஷல் எடிசன் மாடலுக்கான பேட்ஜ் இதனை சாதாரண மாடலில் இருந்து வேறுபடுத்தும்.

ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் ஸ்பெஷல் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம்

இன்டீரியர் தீம்

உட்புறத்தில் முழுமையான கருப்பு வண்ண இன்டீரியர் தீம் கொடுக்கப்பட்டுள்ளது. டெக்னோ லெதர் இருக்கைகள் இந்த மாடலின் மிக முக்கிய அம்சமாக இருக்கிறது. அத்துடன், க்ளாஸ் பிளாக் எனப்படும் விசேஷ கருப்பு வண்ணத்திலான டேஷ்போர்டு அமைப்பு உட்புறத்தை பிரிமீயமாக காட்டுகிறது. அதேபோன்று, கருப்பு வண்ண அப்ஹோல்ஸ்ட்ரியும் இந்த காரின் தனித்துவத்தை அதிகரிக்கிறது.

ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் ஸ்பெஷல் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம்

வசதிகள்

ஜீப் காம்பஸ் நைட் ஈகிள் எடிசனில் 7.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஆன்ட்ராய்டு ஆட்டோ அல்லது ஆப்பிள் கார் ப்ளே செயலிகளை சப்போர்ட் செய்யும். டியூவல் ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி சிஸ்டம் உள்ளது. புஷ் பட்டன் ஸ்டார்ட், கீ லெஸ் என்ட்ரி, பவர்டு விங் மிரர்கள், முன்புறத்தில் கார்னரிங் விளக்குகள், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா ஆகியவை உள்ளன.

ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் ஸ்பெஷல் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம்

பாதுகாப்பு வசதிகள்

மலைச்சாலைகளில் செல்லும்போது, காரை நிறுத்தி எடுத்தால் பின்னோக்கி நகர்வதை தடுக்கும் ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், இறக்கும்போது கார் நிலை தடுமாறுவதை தவிர்க்க சீரான வேகத்தில் கார் இறங்குவதை ஏபிஎஸ் பிரேக் மூலமாக உறுதி செய்யும் ஹில் டிசென்ட் கன்ட்ரோல், அதிக தரைப்பிடிப்பை தரும் டிராக்ஷன் கன்ட்ரோல், நெடுஞ்சாலையில் ஆக்சிலரேட்டர் கொடுக்காமல் கார் குறிப்பிட்ட வேகத்தில் செல்வதற்கு உதவும் க்ரூஸ் கன்ட்ரோல், கார் கவிழாமல் நிலையாக செல்ல உதவும் எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு அம்சங்களும் இந்த சிறப்பு பதிப்பு மாடலில் இருக்கிறது.

ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் ஸ்பெஷல் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம்

பெட்ரோல் மடால்

ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 160 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 7 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் கியர்பாக்ஸ் உள்ளது. ஃப்ரண்ட் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டதாக இதன் நைட் ஈகிள் சிஸ்டம் ஒரு வேரியண்ட்டில் மட்டும் கிடைக்கும்.

ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் ஸ்பெஷல் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம்

டீசல் மாடல்

ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் டீசல் மாடலில் இருக்கும் 2.0 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 173 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். நைட் ஈகிள் டீசல் மாடல் இரண்டு வேரியண்ட்டுகளில் கிடைக்கும்.

டீசல் மாடலானது 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட ஃப்ரண்ட் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட ஒரு வேரியண்ட்டிலும், 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மற்றும் 4 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட மற்றொரு வேரியண்ட்டிலும் கிடைக்கும். இந்த ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டில் டெர்ரெயின் மோடு செலக்ட் சிஸ்டம் கொண்ட வசதியும் இடம்பெற்றிருக்கிறது.

ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் ஸ்பெஷல் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம்

வண்ணத் தேர்வுகள்

இந்த புதிய நைட் ஈகிள் எடிசன் மாடலானது வோக்கல் ஒயிட், எக்ஸோடிக்கா ரெட், பிரில்லியண்ட் பிளாக் மற்றும் மெக்னீசியோ க்ரே ஆகிய 4 வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும்.

ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் ஸ்பெஷல் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம்

விலை விபரம்

புதிய ஜீப் காம்பஸ் நைட் ஈகிள் எடிசன் பெட்ரோல் ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டிற்கு ரூ.20.14 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டீசல் மேனுவல் கியர்பாக்ஸ் வேரியண்ட்டிற்கு ரூ.20.75 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையும், டீசல் ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டிற்கு ரூ.23.31 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

Most Read Articles
மேலும்... #ஜீப் #jeep
English summary
American SUV maker, Jeep has launched the new Compass Night Eagle Edition model in India and starting at ₹ 20.14 lakh (Ex-Showroom).
Story first published: Thursday, July 30, 2020, 15:01 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X