இந்தியாவில் 3 வருடங்களை நிறைவு செய்தது ஜீப் காம்பஸ்... இத்தனை மாதிரி கார்கள் விற்பனையாகியுள்ளதா..?

ஜீப் காம்பஸ் எஸ்யூவி மாடல் இந்திய சந்தையில் மூன்று வருட விற்பனை பயணத்தை நிறைவு செய்துள்ளது. இதனை கொண்டாடும் வகையில் இந்த எஸ்யூவி மாடலின் புதிய நைட் ஈகிள் எடிசன் கடந்த வாரம் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்தியாவில் 3 வருடங்களை நிறைவு செய்தது ஜீப் காம்பஸ்... இத்தனை மாதிரி கார்கள் விற்பனையாகியுள்ளதா..?

இந்த நிலையில் இந்த ஸ்பெஷல் எடிசன் காம்பஸ் மாடலை வாடிக்கையாளர் ஒருவர் முதல் ஆளாக டெலிவிரி செய்துள்ளார். 2017ல் முதன்முறையாக இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஜீப் காம்பஸ் எஸ்யூவி மாடலின் 44,630 மாதிரி கார்கள் இதுவரை இந்தியாவில் விற்பனையாகி உள்ளன.

இந்தியாவில் 3 வருடங்களை நிறைவு செய்தது ஜீப் காம்பஸ்... இத்தனை மாதிரி கார்கள் விற்பனையாகியுள்ளதா..?

இதில் 13 ஆயிரம் யூனிட்களின் விற்பனை வாகனம் அறிமுகமான முதல் ஆறு மாதங்களுக்கு உள்ளாகவே நடந்துள்ளது. அடுத்த 2018ல், 12 மாதங்களில் இதன் விற்பனை 18 ஆயிரம் என்ற மைல்கல்லை கடந்துவிட்டது. ஆனால் உண்மையை கூற வேண்டுமென்றால் 2018ஆம் ஆண்டு முடியும் தருவாயில் காம்பஸிற்கு கிடைத்துவந்த வரவேற்பு வேகமாக குறைய ஆரம்பித்தது.

இந்தியாவில் 3 வருடங்களை நிறைவு செய்தது ஜீப் காம்பஸ்... இத்தனை மாதிரி கார்கள் விற்பனையாகியுள்ளதா..?

இதன் எதிரொலியாக கடந்த 2019ஆம் ஆண்டில் வெறும் 11 ஆயிர காம்பஸ் கார்கள் மட்டும் தான் விற்பனை செய்யப்பட்டுள்ளன. சரி இந்தாண்டாவது காம்பஸ் மாடலுக்கு நல்ல ஆண்டாக அமைந்ததா என்று பார்த்தால், இந்த 2020ஆம் ஆண்டு உலகில் உள்ள எவர் ஒருவருக்கும் சிறப்பான ஆண்டாக அமைந்திருக்க வாய்ப்பில்லை. ஜீப் ப்ராண்ட் மட்டும் என்ன விதிவிலக்கா..

இந்தியாவில் 3 வருடங்களை நிறைவு செய்தது ஜீப் காம்பஸ்... இத்தனை மாதிரி கார்கள் விற்பனையாகியுள்ளதா..?

2020ஆம் ஆண்டின் இந்த ஏழு மாதங்களில் மொத்தம் 2,269 காம்பஸ் மாதிரிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதில் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் இந்த எஸ்யூவி மாடலின் விற்பனையில் ஜீப் நிறுவனம் சந்தையில் பதிவு செய்த விற்பனை எண்ணிக்கைகளான 701 மற்றும் 666-ஐ கழித்து மற்ற ஐந்து மாதங்களை கணக்கில் எடுத்து பார்த்தால் வெறும் 902 காம்பஸ் கார்கள் மட்டும் தான் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவில் 3 வருடங்களை நிறைவு செய்தது ஜீப் காம்பஸ்... இத்தனை மாதிரி கார்கள் விற்பனையாகியுள்ளதா..?

சரி 3ஆம் வருடத்திற்கான நைட் ஈகிள் எடிசன் காரை பற்றிய விஷயத்திற்கு வருவோம். பெயரை பார்த்தாலே உங்களுக்கு சற்று விளங்கியிருக்கும் இந்த எடிசன் எவ்வாறான தோற்றத்தை கொண்டிருக்கும் என்று. ஆம், முற்றிலும் கருப்பு நிற தீம் உடன் தான் இந்த எடிசன் கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 3 வருடங்களை நிறைவு செய்தது ஜீப் காம்பஸ்... இத்தனை மாதிரி கார்கள் விற்பனையாகியுள்ளதா..?

இந்த தீம் அமைப்பு லாங்கிடியூட் ப்ளஸ் என்ற வேரியண்ட்டிற்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வேரியண்ட், ஈகிள் எடிசனின் தயாரிப்பு நிறுத்தப்பட்டாலும், காம்பஸ் மாடலுக்கு வேரியண்ட் தேர்வுகளுள் ஒன்றாக வழங்கப்படவுள்ளது. இந்த ஸ்பெஷல் எடிசன் கார் ஏற்கனவே டீலர்ஷிப்களுக்கு சென்றைடைந்துவிட்டது.

இந்தியாவில் 3 வருடங்களை நிறைவு செய்தது ஜீப் காம்பஸ்... இத்தனை மாதிரி கார்கள் விற்பனையாகியுள்ளதா..?

இதனால் தான் டீலர்ஷிப் ஷோரூமில் வாடிக்கையாளர் ஒருவர் முதல் ஆளாக காம்பஸ் ஈகிள் எடிசன் காரை ரக்‌ஷிட் பிரசன்னா என்பவர் டெலிவிரி செய்துள்ளார். இதுகுறித்து அவரது சமூக வலைத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ள புகைப்படங்களில் கார் எக்சோடிகா சிவப்பு நிறத்தில் உள்ளது. இந்த நிறம் மட்டுமின்றி வோகல் வொய்ட், ப்ரில்லியண்ட் ப்ளாக் மற்றும் மாங்கனீசு க்ரே உள்ளிட்ட நிறத்தேர்வுகளிலும் இந்த லிமிடேட் எடிசன் கார் கிடைக்கும்.

இந்தியாவில் 3 வருடங்களை நிறைவு செய்தது ஜீப் காம்பஸ்... இத்தனை மாதிரி கார்கள் விற்பனையாகியுள்ளதா..?

வெறும் 250 யூனிட்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டு இந்தியாவில் விற்பனை செய்யப்படவுள்ள இந்த ஸ்பெஷல் எடிசன் காரில் வழக்கமான காம்பஸ் மாடலில் இருந்து வேறுப்படும் விதமாக முன் மற்றும் பின்புறத்தில் கருப்பு நிறத்தில் ஜீப் ப்ராண்ட்டின் முத்திரை மற்றும் 18 இன்ச்சில் கருப்பு நிற சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதேபோல் உட்புறத்தில் டெக்னோ லெதர் இருக்கைகள் மற்றும் மேற்கூரையும் கருப்பு நிறத்தில் வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 3 வருடங்களை நிறைவு செய்தது ஜீப் காம்பஸ்... இத்தனை மாதிரி கார்கள் விற்பனையாகியுள்ளதா..?

அறிமுகமான போதே இந்த காருக்கான முன்பதிவுகளும் துவங்கப்பட்டுவிட்டன. 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் உடன் இந்த ஸ்பெஷல் எடிசன் கார் ரூ.20.14 லட்சத்திலும், 2.0 லிட்டர் டர்போ டீசல் உடன் ரூ.20.75 லட்சம் (4X2 சிஸ்டம்) மற்றும் ரூ.23.31 லட்சம் (4X4 ஆல்-வீல் ட்ரைவ் சிஸ்டம்) என்ற விலைகளிலும் விற்பனை செய்யப்படுகிறது.

Most Read Articles

மேலும்... #ஜீப் #jeep
English summary
Jeep Compass 3rd Anniversary Edition 1st Owner Takes Delivery – Total Sales 44,630
Story first published: Sunday, August 9, 2020, 13:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X