ஏழு-இருக்கை ஜீப் காம்பஸ் எஸ்யூவி மாடலின் இந்திய வருகை உறுதியானது... அறிமுகம் எப்போது...?

இந்திய சந்தையில் பிரபலமான எஸ்யூவி மாடல்களுள் ஒன்றாக உள்ள ஜூப் காம்பஸ் புதியதாக ஏழு-இருக்கை வெர்சனில் வெளியாகவுள்ளதாக நம்பதகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஏழு-இருக்கை ஜீப் காம்பஸ் எஸ்யூவி மாடலின் இந்திய வருகை உறுதியானது... அறிமுகம் எப்போது...?

காம்பஸ் எஸ்யூவி மாடலை ஜூப் நிறுவனம் கடந்த 2017ல் முதன்முதலாக இந்தியாவில் அறிமுகப்படுத்தி இருந்தது. அப்போதிலிருந்து தற்போது வரை ஐந்து-இருக்கை வெர்சனாகவே விற்பனை செய்யப்பட்டுவரும் இந்த கார் சில பாதுகாப்பு அம்சங்களால் அதன் பிரிவில் பிரபலமான மாடல்களுள் ஒன்றாக விளங்குகிறது.

ஏழு-இருக்கை ஜீப் காம்பஸ் எஸ்யூவி மாடலின் இந்திய வருகை உறுதியானது... அறிமுகம் எப்போது...?

இதனால் இதன் ஏழு-இருக்கை வெர்சன் மாடல் இந்திய சந்தைக்காக தயாரிக்கப்படவுள்ளதாக கடந்த ஆண்டில் இருந்தே தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் தற்போது எவோ இந்தியா தளத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவலில் எஃப்சிஏ இந்தியா நிறுவனத்தின் சிஇஒ-வும் இயக்குனருமான பார்த்தா டுட்டா, அடுத்த ஆண்டு துவக்கத்தில் மூன்று புதிய மாடல்கள் இந்திய சந்தைக்கு வரவுள்ளதாக கூறியுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏழு-இருக்கை ஜீப் காம்பஸ் எஸ்யூவி மாடலின் இந்திய வருகை உறுதியானது... அறிமுகம் எப்போது...?

இந்த மூன்று புதிய மாடல்களில் 3-வரிசை (ஏழு-இருக்கை) ஜீப் க்ராண்ட் காம்பஸ் மாடலும் ஒன்று. இந்த புதிய காம்பஸ் மாடல் ஏழு-இருக்கை வெர்சனாக மட்டுமில்லாமல், சப்-4 மீட்டர் எஸ்யூவியாகவும் விளங்கவுள்ளது. இந்த ஜீப் க்ராண்ட் காம்பஸ் மாடல் வழக்கமான காம்பஸ் மாடலை காட்டிலும் நீண்ட வீல்பேஸை கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏழு-இருக்கை ஜீப் காம்பஸ் எஸ்யூவி மாடலின் இந்திய வருகை உறுதியானது... அறிமுகம் எப்போது...?

ஸ்டைலிங் பாகங்களை பொறுத்தவரையில் இந்த எஸ்யூவி மாடல் அடுத்த ஆண்டு துவக்கத்தில் வெளியாகவுள்ள காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட்டின் அடிப்படையில் உருவாகவுள்ளது. இதனால் புதிய ஏழு-இருக்கை காம்பஸ் வெர்சன் திருத்தியமைக்கப்பட்ட க்ரில் மற்றும் அப்டேட்டான ஹெட்லேம்ப்கள் மற்றும் பம்பர்களை கொண்டிருக்கலாம்.

ஏழு-இருக்கை ஜீப் காம்பஸ் எஸ்யூவி மாடலின் இந்திய வருகை உறுதியானது... அறிமுகம் எப்போது...?

இவற்றுடன் பெரிய அளவிலான மூன்றாம் ஜன்னல் மற்றும் S-வடிவிலான ட்ரிம்மை ரூஃப்லைன் உடன் இந்த கார் பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய க்ராண்ட் காம்பஸ் மாடலில் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.

ஏழு-இருக்கை ஜீப் காம்பஸ் எஸ்யூவி மாடலின் இந்திய வருகை உறுதியானது... அறிமுகம் எப்போது...?

அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகமாகவுள்ள இந்த ஏழு-இருக்கை வெர்சன் 2021ஆம் ஆண்டின் பிற்பகுதியில் விற்பனைக்கு வரும் என தெரிகிறது. அறிமுகத்திற்கு பிறகு இந்த புதிய எஸ்யூவி மாடலுக்கு ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ், ஹூண்டாய் டக்ஸன், ஸ்கோடா கோடியாக் மற்றும் டொயோட்டா ஃபார்ச்சூனர் உள்ளிட்ட மாடல்கள் போட்டியாக விளங்கும்.

ஏழு-இருக்கை ஜீப் காம்பஸ் எஸ்யூவி மாடலின் இந்திய வருகை உறுதியானது... அறிமுகம் எப்போது...?

ஏற்கனவே கூறியதுபோல், அதிகப்படியான தொழிற்நுட்ப வசதிகள் மற்றும் உட்புறத்தில் பெரிய அளவிலான வெற்றிடத்தால் ஜீப் காம்பஸ் இந்திய சந்தையில் வெற்றிகரமான விற்பனை மாடலாக உள்ளது. விரைவில் விற்பனைக்கு வரவுள்ள இதன் ஏழு-இருக்கை வெர்சன் கார் அளவில் பெரியதாக மட்டுமில்லாமல் அதற்கேற்றாற் போல் புதிய தொழிற்நுட்ப வசதிகளையும் நிச்சயம் பெற்றிருக்கும்.

Most Read Articles
மேலும்... #ஜீப் #jeep
English summary
Jeep Is Likely To launch A Seven-Seater Version Of The Compass Next Year In India
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X