உலகளவில் பிரபலமான ஜீப் செரோக்கி மாடலுக்கா இந்த நிலைமை..? 91,000 கார்கள் திரும்ப அழைக்கப்படுகின்றன...

ஆட்டோமொபைல் துறையை சேர்ந்த எஃப்சிஏ க்ரூப் உலகளவில் 91,000 ஜீப் செரோக்கி எஸ்யூவி மாடலை திரும்ப அழைக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இதற்கான காரணத்த இந்த செய்தியில் பார்ப்போம்.

உலகளவில் பிரபலமான ஜீப் செரோக்கி மாடலுக்கா இந்த நிலைமை..? 91,000 கார்கள் திரும்ப அழைக்கப்படுகின்றன...

எஃப்சிஏ க்ரூப் இவ்வாறு ஜீப் செரோக்கி மாடல்களை திரும்ப அழைக்கும் நடவடிக்கைக்கு ஒரே காரணம் அவற்றின் ட்ரான்ஸ்மிஷன் அமைப்பில் ஏற்படும் பழுதுகளே ஆகும். இதன் காரணமாக அத்தகைய வாகனங்கள் இயக்கத்தின்போது ஆற்றலை இழக்கிறது.

உலகளவில் பிரபலமான ஜீப் செரோக்கி மாடலுக்கா இந்த நிலைமை..? 91,000 கார்கள் திரும்ப அழைக்கப்படுகின்றன...

அல்லது அவற்றின் பார்க்கிங் செயல்பாடு வேலை செய்யாமல் போகிறது. இந்த கோளாறால் வாகனம் பெரிய விபத்திற்குள்ளாகவும் வாய்ப்புண்டு. இதனால் தான் சொரோக்கி மாடல்களை திரும்ப அழைப்பதாக எஃப்சிஏ க்ரூப் கூறியுள்ளது.

உலகளவில் பிரபலமான ஜீப் செரோக்கி மாடலுக்கா இந்த நிலைமை..? 91,000 கார்கள் திரும்ப அழைக்கப்படுகின்றன...

அதேநேரம் இந்த லேட்டஸ்ட் ட்ரான்ஸ்மிஷன் பழுதிற்கும், முந்தைய ட்ரான்ஸ்மிஷன் டிசைனின் குறைப்பாட்டிற்கு எந்த வித சம்மந்தமும் கிடையாது எனவும் தயாரிப்பு நிறுவனம் தெளிவுப்படுத்தியுள்ளது. எஃப்சிஏ க்ரூப்பின் முந்தைய ட்ரான்ஸ்மிஷன் டிசைனினால் 2012-2015 காலக்கட்டத்தில் மட்டும் 266 விபத்துகளும் 68 பேர்களுக்கு காயமும் டாட்ஜ் சார்ஜர்ஸ், ஜீப் க்ராண்ட் செரோக்கி மற்றும் க்றைஸ்லர் 300 கார்களில் ஏற்பட்டுள்ளது.

உலகளவில் பிரபலமான ஜீப் செரோக்கி மாடலுக்கா இந்த நிலைமை..? 91,000 கார்கள் திரும்ப அழைக்கப்படுகின்றன...

68 நபர்களுக்கு ஏற்பட்ட காயத்தில், ஸ்டார் ட்ரெக் புகழ் நடிகர் அன்டன் யெல்சினுக்கு 2015 க்ராண்ட் செரோக்கி காரில் ஏற்பட்ட அபாயகரமான விபத்தும் அடங்கும். எஃப்சிஏ க்ரூப்பின் இந்த திரும்ப அழைக்கும் நடவடிக்கையில் 2014-2017 காலத்தில் தயாரிக்கப்பட்ட ஜீப் செரோக்கி கார்களை வைத்திருப்போர் மட்டுமே அடங்குவர்.

உலகளவில் பிரபலமான ஜீப் செரோக்கி மாடலுக்கா இந்த நிலைமை..? 91,000 கார்கள் திரும்ப அழைக்கப்படுகின்றன...

அவர்களில், தங்களது கார்களில் அடிக்கடி ட்ரான்ஸ்மிஷன் அமைப்பில் பழுது ஏற்படுவதாக நினைப்போர் இமெயில் மூலமாக தங்களை தொடர்பு கொள்ளலாம் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. அதேபோல் 2-ஸ்பீடு ஆற்றல் பரிமாற்ற யூனிட்களை கொண்ட செரோக்கி வேரியண்ட்கள் தான் திரும்ப அழைக்கப்பட்டுள்ளன.

உலகளவில் பிரபலமான ஜீப் செரோக்கி மாடலுக்கா இந்த நிலைமை..? 91,000 கார்கள் திரும்ப அழைக்கப்படுகின்றன...

இதன்படி பார்க்கும் எஃப்சிஏ க்ரூப் அறிவித்துள்ள காலக்கட்டத்தில் விற்பனையான மொத்த செரோக்கி கார்களில் வெறும் 1 சதவீதம் மட்டுமே திரும்ப அழைக்கும் நடவடிக்கைக்கு உட்படுகின்றன. இந்த 1% கார்களை திரும்ப அழைக்கும் திட்டத்தையும் அமெரிக்காவில் உள்ள தனது கூட்டணி நிறுவனங்களின் கருத்துகளை கேட்ட பின்பே எஃப்சிஏ க்ரூப் கையில் எடுத்துள்ளது.

உலகளவில் பிரபலமான ஜீப் செரோக்கி மாடலுக்கா இந்த நிலைமை..? 91,000 கார்கள் திரும்ப அழைக்கப்படுகின்றன...

இவ்வாறு திரும்ப அழைக்கப்படும் கார்களில், முன் சக்கரங்களுக்கு ஆற்றல் செல்வது தடைப்பட்டு போனால் அதற்கு பதிலாக பின் சக்கர ட்ரைவ் மூலமாக வாகனத்தை இயக்கும் வகையில் மென்பொருள் பொருத்தப்படவுள்ளது. அதேபோல் பார்க் மோடில் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டால் பார்க்கிங் ப்ரேக்கை பொருத்த தயாரிப்பு நிறுவனம் முடிவெடுத்துள்ளது.

உலகளவில் பிரபலமான ஜீப் செரோக்கி மாடலுக்கா இந்த நிலைமை..? 91,000 கார்கள் திரும்ப அழைக்கப்படுகின்றன...

திரும்ப அழைக்கப்படும் செரோக்கி கார்களில் 67,248 யூனிட்கள் அமெரிக்காவை சேர்ந்தவையாகவும், 13,659 யூனிட்கள் கனடாவை சேர்ந்தவையாகவும், 716 யூனிட்கள் மெக்ஸிகோவை சேர்ந்தவையாகவும், 9,940 யூனிட்கள் மற்ற நாடுகளை சேர்ந்தவையாகவும் உள்ளன. இந்தியாவில் ஜீப் செரோக்கி எஸ்யூவி மாடல் விற்பனை செய்யப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
மேலும்... #ஜீப் #jeep
English summary
Jeep recalls cherokee 95000 units worldwide found with defect in transmission.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X