பிரம்மிக்க வைக்கும் தோற்றத்தில் 2021 ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் கார்!! முன்னோட்ட படங்கள் வெளியீடு

2020 குவாங்சோ சர்வதேச மோட்டார் கண்காட்சியில் காட்சிப்படுத்தபடுவதற்கு முன்னதாக ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் காரின் முன்னோட்ட படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.

பிரம்மிக்க வைக்கும் தோற்றத்தில் 2021 ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் கார்!! முன்னோட்ட படங்கள் வெளியீடு

ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் கார் இந்தியாவில் அடுத்த 2021ஆம் ஆண்டில் வெளியிடப்படவுள்ளது. இதற்கிடையில் தற்போது வெளியாகியுள்ள படங்களின் மூலமாக இந்த ஃபேஸ்லிஃப்ட் காரை பற்றிய சில விபரங்களை அறிய முடிகிறது.

பிரம்மிக்க வைக்கும் தோற்றத்தில் 2021 ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் கார்!! முன்னோட்ட படங்கள் வெளியீடு

முன்பக்கத்தில் பெரிய ஏர் டேம் உடன் இரு முனைகளிலும் ஃபாக் விளக்குகளுக்கான குழிகள் கொண்ட புதிய பம்பர் வழங்கப்பட்டுள்ளது. ஹெட்லைட்கள் 2021 காம்பஸின் அனைத்து வேரியண்ட்களிலும் எல்இடி தரத்தில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரம்மிக்க வைக்கும் தோற்றத்தில் 2021 ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் கார்!! முன்னோட்ட படங்கள் வெளியீடு

முன்பக்க க்ரில் அமைப்பில் தேன்கூடு வடிவிலான உள்ளீடுகள் கொடுக்கப்பட்டுள்ளன. காரின் பக்கவாட்டு பக்கமோ அல்லது பின்பக்கமோ இந்த படங்களில் காட்டப்படவில்லை. நமக்கு தெரிந்தவரை அந்த பகுதிகளிலும் காம்பஸ் அப்கிரேட்டை பெற்றிருக்கும்.

பிரம்மிக்க வைக்கும் தோற்றத்தில் 2021 ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் கார்!! முன்னோட்ட படங்கள் வெளியீடு

இந்த அப்கிரேட்களின்படி புதிய அலாய் சக்கரங்களையும் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் கார் பெறும் என கூறப்படுகிறது. உட்புறத்தில் இந்த 2021 மாடல் ரீடிசைனிலான டேஸ்போர்டை பெற்று வரவுள்ளது. இந்த படங்களில் புதிய தொடுத்திரை மற்றும் புதிய ஏசி துளைகள் இந்த காரில் வழங்கப்பட்டிருப்பது காட்டப்பட்டுள்ளது.

பிரம்மிக்க வைக்கும் தோற்றத்தில் 2021 ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் கார்!! முன்னோட்ட படங்கள் வெளியீடு

புதிய தொடுத்திரை 10.1 இன்ச்சில் ஜீப்பின் லேட்டஸ்ட் யுகனெக்ட் 5 இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தை கொண்டிருக்கும். ப்ரீமியம் தோற்றத்திற்காக டேஸ்போர்டு லெதரால் இரட்டை தையல்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. எப்படியிருந்தாலும், தற்போதைய காம்பஸ் எஸ்யூவியை காட்டிலும் அதன் இந்த ஃபேஸ்லிஃப்ட் வெர்சன் உட்புறத்தில் அட்வான்ஸாகவே இருக்கும்.

பிரம்மிக்க வைக்கும் தோற்றத்தில் 2021 ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் கார்!! முன்னோட்ட படங்கள் வெளியீடு

ஆனால் என்ஜின் அமைப்பில் மாற்ற இருக்க வாய்ப்பில்லை. தற்போதைய 2.0 லிட்டர் டீசல் மற்றும் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினை தான் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் காரும் பெற்றுவரவுள்ளது. இதில் டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 173 பிஎச்பி பவரையும், டர்போ-பெட்ரோல் என்ஜின் 163 பிஎச்பி பவரையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

பிரம்மிக்க வைக்கும் தோற்றத்தில் 2021 ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் கார்!! முன்னோட்ட படங்கள் வெளியீடு

உலகளவிலான வாடிக்கையாளர்களுக்கான புதிய காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் கார்கள் இந்தியாவில் மஹராஷ்டிரா மாநிலத்தில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. ஹூண்டாய் டக்ஸன் மற்றும் ஸ்கோடா கரோக்கிற்கு போட்டியாக 2021 ஜீப் காம்பஸ் அடுத்த வருடத்தில் இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது.

Most Read Articles
மேலும்... #ஜீப் #jeep
English summary
Jeep Compass facelift previewed ahead of unveil
Story first published: Friday, November 20, 2020, 11:18 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X