Just In
- 2 hrs ago
ஒருபக்கம் விலை அதிகரிப்பு, மறுபக்கம் சலுகை!! மோட்டார்சைக்கிள் விற்பனையில் கவாஸாகியின் அடுத்தடுத்த அறிவிப்புகள்
- 3 hrs ago
மக்களை தைரியமாக எலெக்ட்ரிக் கார் வாங்க வைக்க அதிரடி... கோவையை தொடர்ந்து மற்றொரு நகரிலும் தரமான சம்பவம்...
- 5 hrs ago
வாகனத்தில் தனியாக செல்லும்போது மாஸ்க் அணிவது கட்டாயமா, இல்லையா? - மத்திய அரசு விளக்கம்
- 15 hrs ago
சூப்பர்... மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பான கார் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா?
Don't Miss!
- News
விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் ஜன.26-ல் விவசாயிகளின் 1 லட்சம் டிராக்டர் பேரணி
- Movies
இது எப்ப? நடிகர் சோனு சூட் தையல் கடை.. இங்கு இலவசமாக துணி தைத்து கொடுக்கப்படும்!
- Sports
வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூரை பாராட்டி ட்வீட்டிய கேப்டன்... மராத்தியில் பாராட்டு
- Finance
40% வரை ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி.. அமேசானின் சூப்பர் சலுகைகள்.. கவனிக்க வேண்டிய ஆஃபர் மழை..!
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Lifestyle
வார ராசிபலன் 17.01.2021 முதல் 23.01.2021 வரை – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ப்ளக்-இன் ஹைப்ரீட் என்ஜின் உடன் வ்ராங்க்லர்... புதியதாக கொண்டுவரும் ஜீப்...
காம்பஸ் 4எக்ஸ்இ மற்றும் ரெனிகேட் 4எக்ஸ்இ மாடல்களை தொடர்ந்து வ்ராங்க்லரின் புதிய ப்ளக்-இன் ஹைப்ரீட் வேரியண்ட்டை ஜீப் அறிமுகப்படுத்தவுள்ளது. இதற்கிடையில் இந்த 2021 ஹைப்ரீட் காரை பற்றிய சில முக்கியமான விபரங்கள் வெளிவந்துள்ளன. அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.

வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது விற்பனை மாடல்களில் மாசு உமிழ்வை குறைக்கும் விதமாக எலக்ட்ரிக் தொழிற்நுட்பங்களின் பயன்பாட்டை அதிகரித்து வருகின்றன. இதில் ஜீப் பிராண்ட்டின் செயல்பாடுகள் மற்ற நிறுவனங்களுக்கு முன் உதாரணமாக உள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

ஏனெனில் சில வாரங்களுக்கு முன்பு தான் காம்பஸ் 4எக்ஸ்இ மற்றும் ரெனிகேட் 4எக்ஸ்இ என்ற இரு ப்ளக்-இன் ஹைப்ரீட் கார்களை அறிமுகப்படுத்தி இருந்தது. இந்த நிலையில் இவற்றை தொடர்ந்து 2021ஆம் ஆண்டிற்காக இந்நிறுவனத்தில் இருந்து வ்ராங்க்லர் 4எக்ஸ்இ விரைவில் வெளிவரவுள்ளது.

இதற்கிடையில் தற்போது வெளிவந்துள்ள இந்த 2021 ப்ளக்-இன் ஹைப்ரீட் காரை பற்றி தகவல்களில், இந்த காரில் வழக்கமான வ்ராங்க்லரில் இருந்து சில கவனிக்கத்தக்க மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்புறத்தில் கயிறு கட்டி இழுக்க உதவியாக இருக்கும் கொக்கி, மேற்கூரை, மற்றும் காரை சுற்றிலும் வழங்கப்பட்டுள்ள முத்திரை உள்ளிட்டவற்றில் நீல நிறம் ஹைலைட்களாக கொடுக்கப்பட்டிருப்பதை வெளியாகியுள்ள இந்த ஹைப்ரீட் காரின் படத்தை பார்க்கும்போது அறிய முடிகிறது.

மேலும் இதேபோல் உட்புறத்திலும் நீல நிற ஹைலைட்களை பார்க்க முடிகிறது. இயக்க ஆற்றலை வழங்குவதற்கு 2021 ஜீப் வ்ராங்க்லர் 4எக்ஸ்இ காரில் அதிகப்பட்சமாக 270 பிஎச்பி மற்றும் 400 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய 2.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த பெட்ரோல் என்ஜின் உடன் இணைக்கப்பட்டுள்ள எலக்ட்ரிக் மோட்டார் ஆனது 44 பிஎச்பி மற்றும் 53 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியது. இவை இரண்டின் மூலமாக 134 பிஎச்பி மற்றும் 245 என்எம் டார்க் திறனை பெற முடியும். இந்த என்ஜின் அமைப்பு, 8-ஸ்பீடு ட்ரான்ஸ்மிஷன் உடன் வருகிறது.

வ்ராங்க்லர் 4எக்ஸ்இ காரில் பொருத்தப்படுகின்ற பேட்டரி தொகுப்பில் 400 வோல்ட், 17 kWh லித்தியம்-இரும்பு யூனிட் உள்ளிட்டவை அடங்குகின்றன. இவை அனைத்தும் காரின் இரண்டாம் இருக்கை வரிசைக்கு அடியில் பொருத்தப்பட்டிருக்கும்.

மேலும் இந்த பேட்டரியை பின் இருக்கைகளில் அமர்பவர்கள் நேரடியாக அணுகும் வகையிலும், அவற்றை புரட்டி போடும் வகையிலும் பின் இருக்கை அமைப்பை ஜீப் திருத்தியமைத்துள்ளது. பேட்டரி எப்போதும் ஒரே விதமான வெப்பநிலையில் இருப்பதற்காக கூலிங் மற்றும் ஹீட்டிங் என இரு விதமான அமைப்புகளும் உள்ளன.

இத்தகைய எலக்ட்ரிக் தொழிற்நுட்பங்கள் அனைத்தும் நீர்புகா வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் உறுதியளிக்கிறது. மேலும் ஆச்சிரியமளிக்கும் வகையில் வ்ராங்க்லரின் இந்த புதிய ப்ளக்-இன் ஹைப்ரீட் வேரியண்ட்டும் இந்த மாடலின் மற்ற வேரியண்ட்களை போல் 30 இன்ச் ஆழம் கொண்ட நீர் நிலைகளில் இயங்கும் திறனை பெற்றுள்ளது.

ஹைப்ரீட், எலக்ட்ரிக் மற்றும் இசேவ் என்ற மூன்று விதமான ட்ரைவிங் மோட்களுடன் வ்ராங்க்லர் 4எக்ஸ்இ கார் விற்பனைக்கு வருகிறது. இதில் எலக்ட்ரிக் மோடில் வாகனத்தை ஸ்டார்ட் செய்யும் ஹைப்ரீட் மோட், பேட்டரியின் சார்ஜ் குறைந்தால் என்ஜினை இயக்க ஆரம்பித்துவிடும்.

அதுவே எலக்ட்ரிக் சார்ஜில் வாகனத்தை இயக்க முன்னுரிமை அளிக்கும் எலக்ட்ரிக் மோட், பேட்டரி கிட்டத்தட்ட குறைந்துபோகும் வரை அல்லது கூடுதல் சக்தி தேவைப்படும்வரை, உள் எரிப்புக்கு மாற காத்திருக்கிறது. கடைசி இசேவ், புதைபடிவ எரிபொருட்களில் ஓட்டுவதற்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் பேட்டரி சார்ஜை பாதுகாக்கும்.

4எக்ஸ்இ, சஹாரா 4எக்ஸ்இ மற்றும் ரூபிகான் 4எக்ஸ்இ என்ற மூன்று விதமான வேரியண்ட்களில் சந்தைப்படுத்தப்படவுள்ள புதிய வ்ராங்க்லர் ப்ளக்-இன் வேரியண்ட்டின் இந்த மூன்று வேரியண்ட்களிலும் 4-சக்கர ட்ரைவ் மற்றும் குறைந்த-விகித ட்ரான்ஸ்ஃபர் கேஸ் கிடைக்கும்.

இந்தியா உள்பட ஜீப்பின் இந்த புதிய தயாரிப்பு உலகம் முழுவதிலும் விற்பனை செய்யப்படவுள்ளது. இருப்பினும் இந்தியாவில் இந்த கார் சிபியூ முறையில் தான் சந்தைப்படுத்தப்படவுள்ளது. அடுத்த வார துவக்கத்தில் எதிர்பார்க்கப்படும் இதன் அறிமுகத்தின்போது இதன் எக்ஸ்ஷோரூம் விலை அறிவிக்கப்படலாம்.