Just In
- 1 hr ago
ஆக்டிவா உடனான போட்டியை சமாளிக்க குறைந்த விலை ஜூபிடர்... டிவிஎஸ் அதிரடி... ஆஹா இவ்ளோ குறைந்த விலையா?
- 2 hrs ago
சீனாவில் தீப்பற்றி எரிந்த டெஸ்லா மாடல் 3... இந்தியாவிற்கு வரவுள்ள எலெக்ட்ரிக் கார் என்பதால் கடும் அதிர்ச்சி...
- 3 hrs ago
முண்டாசு கட்டிய பிஎம்டபிள்யூ... இந்தியாவில் 25 புதிய மாடல்களுடன் தெறிக்கவிட திட்டம்!
- 3 hrs ago
சுசுகி அக்செஸ் 125 ஸ்கூட்டரின் விலை உயர்ந்தன... எவ்வளவு உயர்ந்திருக்கு தெரிஞ்சா நிச்சயம் ஆச்சரியப்படுவீங்க!!
Don't Miss!
- News
சசிகலாவுக்கு நுரையீரல் தொற்று... ஐ.சி.யூ.வில் தொடர்ந்து சிகிச்சை -விக்டோரியா மருத்துவமனை
- Sports
இனிமே இவரை டீமை விட்டு ஒதுக்க முடியாது.. என்ன செய்யப் போகிறார் கேப்டன் கோலி?
- Finance
பட்ஜெட்டுக்கு முன் எதில் முதலீடு செய்யலாம்.. முதலீட்டாளர்களுக்கு சூப்பர் டிப்ஸ்..!
- Movies
மன்னிச்சு விட்ருங்கன்னு கெஞ்சுறாங்க.. பாலாவை மன்னிக்கணும்னா 3 கண்டிஷன் போடும் ஜோ மைக்கேல்!
- Lifestyle
மொறுமொறுப்பான... ஓட்ஸ் கட்லெட்
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அடுத்த வருடம் வருகிறது ரீசார்ஜ் செய்ய ஜீப் வ்ராங்லர்!! அசல் அமெரிக்க தயாரிப்பு..
ரீசார்ஜ் செய்யக்கூடிய ஜீப் வ்ராங்லர் அடுத்த 2021ஆம் ஆண்டில் சர்வதேச சந்தைகளில் அறிமுகமாகவுள்ளது. இந்த ஹைப்ரீட் மாடல் கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஜீப் வ்ராங்லர் பலவிதமான நிலப்பரப்பு சவால்களை திமிர்பிடித்த அளவோடு எளிதில் கையாள்வதில் பெயர் பெற்றது. இது 2021-இன் தொடக்கத்தில் ப்ளக்-இன் ரீசார்ஜ் செய்யக்கூடிய வெர்சனில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

ரீசார்ஜபிள் வ்ராங்லர் 4xe கார் தயாராக உள்ளதாகவும் அமெரிக்க சாலைகளுக்கு விரைந்து வருவதாகவும் 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கொண்டு வரப்படும் என்றும் ஜீப் உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும் இது 'இந்த உலகத்திற்கு வெளியே' இருக்கும் என்று உறுதியளித்த ஜீப் தாங்கள் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான போட்டியில் எந்த அளவில் முன்னேற விரும்புகிறோம் என்பதை வெளிகாட்டும் விதத்தில் இந்த எஸ்யூவியில் பொருத்தப்படும் பேட்டரி சக்தி இருக்கும் என்று கூறியுள்ளது.

ரீசார்ஜ் செய்யக்கூடிய வ்ராங்லர் தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்பட துவங்கப்பட்டு விட்டதாக இந்த 2020ஆம் ஆண்டின் துவக்கத்தில் தயாரிப்பு நிறுவனம் கூறியிருந்தது. அதனை தொடர்ந்து ஜீப்பின் ஹைப்ரீட் மற்றும் முழு-எலக்ட்ரிக் மாடல்களை காட்டிலும் பல நிலைகள் முன்னணியில் இருக்கும் வ்ராங்லர் 4xe அடுத்த 2021 வருட முதல் பாதியில் அறிமுகமாகவுள்ளது.

ஜீப்பின் இந்த புதிய ஹைப்ரீட் எஸ்யூவி மாடல் வெறும் எலக்ட்ரிக் ஆற்றலில் மட்டுமே 40 கிமீ தூரத்திற்கு இயங்கும். இதன் எலக்ட்ரிக் மோட்டார் உடன் 2-லிட்டர் டர்போசார்ஜ்டு என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும்.
இதன் பேட்டரியை சார்ஜ் செய்ய என்ஜினால் இயக்கப்படும் ஒரு ஜெனரேட்டரை தேர்வு செய்யலாம். ஆனால் இது எரிபொருள் சிக்கனத்தை பாதிக்கும். இங்கு தான் ப்ளக்-இன் தேர்வு பயன்படும். இதுதான் வ்ராங்லர் பேட்டரியை பெறுவதற்கு தடையாக இருந்தது.

ஜீப் வ்ராங்லர் எஸ்யூவி உலகெங்கிலும் உள்ள பல சந்தைகளில் உறுதியான நற்பெயரைப் பெற்றுள்ளது. இந்த எஸ்யூவி மூலம் தயாரிப்பு நிறுவனம் தனது அனைத்து திறன்களையும் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள இவ்வாறான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.