கவலை வேண்டாம்... வாடிக்கையாளர்களுக்கு ஆறுதல் தந்த ஜாகுவார் லேண்ட்ரோவர்!

கொரோனாவால் நெருக்கடியான இந்த தருணத்தில், இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஆறுதல் தரும் செய்தியை ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனம் வழங்கி இருக்கிறது.

கவலை வேண்டாம்... வாடிக்கையாளர்களுக்கு ஆறுதல் தந்த ஜாகுவார் லேண்ட்ரோவர்!

கொரோனா பிரச்னையால் கார் நிறுவனங்கள் பெரும் நெருக்கடிக்கு ஆளாகி உள்ளன. அதேசமயம் வாடிக்கையாளர்களுக்கு சில முக்கிய அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில், ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனம் இந்திய வாடிக்கையாளர்களுக்கு சில முக்கிய தகவல்களை வழங்கி இருக்கிறது.

கவலை வேண்டாம்... வாடிக்கையாளர்களுக்கு ஆறுதல் தந்த ஜாகுவார் லேண்ட்ரோவர்!

இதன்படி, ஜாகுவார் மற்றும் லேண்ட்ரோவர் நிறுவனத்தின் அனைத்து கார்களுக்கும் சர்வீஸ் செய்யும் கால இடைவெளி இரண்டு மாதங்கள் அல்லது 3,200 கிமீ தூரம் நீட்டிக்கப்படுகிறது.

MOST READ: மீண்டும் தயாரிப்பு பணிகளை துவங்க ஆயத்தமாகும் ஹோண்டா & யமஹா..

கவலை வேண்டாம்... வாடிக்கையாளர்களுக்கு ஆறுதல் தந்த ஜாகுவார் லேண்ட்ரோவர்!

அதேபோன்று, ஊரடங்கு காலத்தில் பழுது நீக்க இயலாமல், ஊரடங்கு காலத்தில் வாரண்டி காலம் முடிவடைந்திருந்தால், அந்த வாடிக்கையாளர்களுக்கு காரை பழுதுநீக்குவதற்கு இரண்டு மாதங்கள் கூடுதல் அவகாசம் வழங்கப்படும்.

கவலை வேண்டாம்... வாடிக்கையாளர்களுக்கு ஆறுதல் தந்த ஜாகுவார் லேண்ட்ரோவர்!

மேலும், கடந்த மார்ச் மாதம் 23ந் தேதி முதல் ஊரடங்கு காலத்தில் கூடுதல் வாரண்டி திட்டம் காலாவதியானாலும், வாடிக்கையாளர்கள் ஊரடங்கு வாபஸ் பெறும் நாளில் இருந்து 30 நாட்கள் அல்லது 1,000 கிமீ தூரம் வரை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.

MOST READ: கொரோனாவிற்கு எதிராக போராடும் மலிவு விலை மாஸ்க்.. எத்தனை முறை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்!

கவலை வேண்டாம்... வாடிக்கையாளர்களுக்கு ஆறுதல் தந்த ஜாகுவார் லேண்ட்ரோவர்!

வாடிக்கையாளர்களுக்கு ஏதேனும் அவசர உதவி தேவைப்பட்டால் ஜாகுவார் வாடிக்கையாளர்கள் 1800 258 6655 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும், லேண்ட்ரோவர் வாடிக்கையாளர்கள் 1800 258 6644 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு அவசர உதவியை பெற முடியும்.

கவலை வேண்டாம்... வாடிக்கையாளர்களுக்கு ஆறுதல் தந்த ஜாகுவார் லேண்ட்ரோவர்!

கொரோனாவால் ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடி காலத்தில் வாடிக்கையாளர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில், இந்த அறிவிப்புகளை ஜாகுவார் லேண்ட்ரோவர் வெளியிட்டுள்ளது. கூடுதல் விபரங்கள் தேவைப்படுவோர், மேற்கண்ட கட்டணில்லா தொலைபேசி எண்கள் அல்லது டீலரை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

Most Read Articles

மேலும்... #ஜாகுவார் #jaguar
English summary
Jaguar Land Rover has announced an extension to the warranty period and service schedule for all customer cars due to the nationwide lockdown.
Story first published: Wednesday, April 29, 2020, 20:20 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X