8 கோடி ரூபாய் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட்... நம்ப முடியாத குறைந்த விலையில் வாங்கிய தொழிலதிபர்...

எட்டு கோடி ரூபாய் மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் செடான் ரக காரை ராஜஸ்தானைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் மிக மிக குறைந்த விலையில் வாங்கியிருக்கின்றார். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

ரூ. 8 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட்... மிக மலிவான விலையில் வாங்கிய ராஜஸ்தான் தொழிலதிபர்... எப்படி தெரியுமா?

தலைப்பைப் பார்த்த அனைவரும் ஒரு நிமிஷம் வியந்திருப்பீங்க. மேலும், எப்படி ரூ. 8 கோடி மதிப்பிலான ரோல்ஸ் ராய்ஸ் காரை வெறும் இரண்டு கோடி ரூபாய் செலவில் வாங்க முடியும்? என்ற கேள்வியும் உங்களுக்குள் எழும்பியிருக்கும். ஆம், இது நிஜம்தான், ஏலத்தில் இதுமாதிரியான சம்பவங்கள் மிகவும் சாதரணமானது.

ரூ. 8 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட்... மிக மலிவான விலையில் வாங்கிய ராஜஸ்தான் தொழிலதிபர்... எப்படி தெரியுமா?

ரூ. 8 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரை ஏலத்தின் மூலமாகவே இரண்டு கோடி ரூபாய்க்கு தொழிலதிபர் ஒருவர் வாங்கியிருக்கின்றார்.

இந்த கார் பிரபல மோசடி மன்னன் நீரவ் மோடிக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தகுந்தது. இவர் பஞ்சப் நேஷ்னல் வங்கி மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் முக்கிய குற்றவாளிகளில் ஒருவர் ஆவார்.

MOST READ: பருவமழை காலம் வருதுங்க... உங்க வண்டி பத்திரம்!

ரூ. 8 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட்... மிக மலிவான விலையில் வாங்கிய ராஜஸ்தான் தொழிலதிபர்... எப்படி தெரியுமா?

இந்தியாவில் வைர கற்கள் வியாபாரத்தைச் செய்து வந்த இவர், போலியான ஆவணங்களைக் கொண்டு ஆயிரம் கோடி ரூபாய்களை பஞ்சாப் நேஷனல் வங்கியில் இருந்து கடனாகப் பெற்றதாகக் கூறப்படுகின்றது.

இதனைத் திருப்பிச் செலுத்தாத காரணத்தினாலயே இந்திய அமலாக்கத்துறை இவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து, கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டது.

ரூ. 8 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட்... மிக மலிவான விலையில் வாங்கிய ராஜஸ்தான் தொழிலதிபர்... எப்படி தெரியுமா?

இதற்காக, சர்வதேச நாடுகளின் உதவியையும் அது நாடியது. ஆனால், நீரவ் மோடிக்கு இருந்த செல்வாக்குகளின் காரணமாக ஒவ்வொரு முறையும் தப்பித்த வண்ணமே இருந்தார். ஆனால், தற்போது லண்டன் போலீசாரிடம் சிக்கிக் கொண்டு, வான்ட்ஸ்வொர்த் சிறையில் தண்டனையை அனுபவித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரூ. 8 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட்... மிக மலிவான விலையில் வாங்கிய ராஜஸ்தான் தொழிலதிபர்... எப்படி தெரியுமா?

இந்த நிலையில்தான் இந்திய அமலாக்கத்துறை நீரவ் மோடியின் சொத்துக்கள் சிலவற்றை ஏலத்தின் மூலம் விற்று வங்கிக்கான இழப்பை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது.

அந்தவகையில், முன்னதாக நடைபெற்ற ஏலங்களின்மூலம் ஒரு சில ஆடம்பர சொகுசு கார்களை அது ஏற்கனவே விற்பனைச் செய்து விட்டது.

ரூ. 8 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட்... மிக மலிவான விலையில் வாங்கிய ராஜஸ்தான் தொழிலதிபர்... எப்படி தெரியுமா?

இதைத்தொடர்ந்து, எஞ்சியிருக்கும் கார்களையும் விற்பனைச் செய்யும் முயற்சியில் அமலாக்கத்துறை ஈடுபட்டு வருகின்றது. இந்த முயற்சியின் அடிப்படையிலேயே நீரவ் மோடிக்கு சொந்தமான அதிக விலைக் கொண்ட ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் கார் தற்போது ஏலம் விடப்பட்டுள்ளது.

ரூ. 8 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட்... மிக மலிவான விலையில் வாங்கிய ராஜஸ்தான் தொழிலதிபர்... எப்படி தெரியுமா?

ஆனால், இந்த ஏலத்தில் அமலாக்கத்துறை எதிர்பார்த்த தொகை கிடைக்கவில்லை என்று கூறப்படுகின்றது. முன்னதாக, இதேபோன்று எதிர்பார்த்ததைக் காட்டிலும் மிகக் குறைந்த விலைக்கு ஏலம் போனதால் ஒரு சில கார்களை அது ஏலத்தில் இருந்து நீக்கியிருந்தது குறிப்பிடத்தகுந்தது.

அவ்வாறு, விற்கப்படாமல் நீண்ட நாட்களாக இருந்த ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் கார்தான் தற்போது ஏலத்தில் விடப்பட்டுள்ளது.

ரூ. 8 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட்... மிக மலிவான விலையில் வாங்கிய ராஜஸ்தான் தொழிலதிபர்... எப்படி தெரியுமா?

அக்காருக்கு ரூ. 1.50 கோடி என்ற ஆரம்ப விலை நிர்ணயிக்கப்பட்டு ஏலம் அறிவிக்கப்பட்டது. இதில் பங்கேற்ற ராஜஸ்தானைச் சேர்ந்த தொழிலதிபர் மனோஜ் ஷர்மா, ரூ. 2.15 கோடிக்கு ஏலம் கேட்டு அக்காரை பெற்றார்.

இவர், ஜோத்பூரில் கைவினைப் பொருட்கள் சார்ந்த தொழிலை மேற்கொண்டு வருகின்றார். இவர்தான் இனி நீரவ் மோடியின் லக்சூரி செடான் ரக காரில் வலம் வர இருக்கின்றார்.

ரூ. 8 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட்... மிக மலிவான விலையில் வாங்கிய ராஜஸ்தான் தொழிலதிபர்... எப்படி தெரியுமா?

உலகின் அதிக விலைக் கொண்ட கார்களில் ஒன்றாக காட்சியளிக்கும் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் செடான், இந்தியச் சந்தையில் ரூ. 8 கோடிக்கும் அதிகமான விலையில் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது. இது ஆன்-ரோடு விலையாகும். இதைதான் மனோஜ் ஷர்மா மிகக் குறைந்த விலைக்கு அமலாக்கத்துறையிடம் இருந்து பெற்றிருக்கின்றார்.

ரூ. 8 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட்... மிக மலிவான விலையில் வாங்கிய ராஜஸ்தான் தொழிலதிபர்... எப்படி தெரியுமா?

இந்த ஏலம் மார்ச் மாதத்திலேயே நடந்து முடிந்துவிட்டது. ஆனால், தேசியளவிலான ஊரடங்கு உத்தரவின் காரணமாக சமீபத்திலேயே அமலாக்கத்துறை அக்காரை மனோஜ் ஷர்மாவிடம் ஒப்படைத்திருக்கின்றது. இவர், ராஜஸ்தான் மாநிலத்தைச் சார்ந்தவர் என்பதால், நீரவ் மோடியின் கார் அம்மாநில பதிவெண்ணிற்கு மாற்றப்படுமா? என்பதுகுறித்த தகவல் கிடைக்கவில்லை.

ரூ. 8 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட்... மிக மலிவான விலையில் வாங்கிய ராஜஸ்தான் தொழிலதிபர்... எப்படி தெரியுமா?

ஆனால், அக்கார் தற்போது மஹாராஷ்டிரா மாநிலத்தின், பேன்சியான பதிவெண்ணைக் கொண்டிருக்கின்றது. எனவே, இந்த எண்களைக் கொண்டே அவர் பயன்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நீரவ் மோடிக்கு சொந்தமாக 13 கார்கள் இருந்தன. அதில், போர்ஷே பனமேரா, மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்-கிளாஸ் உள்ளிட்ட பல்வறு சொகுசு கார்கள் அடங்கும்.

ரூ. 8 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட்... மிக மலிவான விலையில் வாங்கிய ராஜஸ்தான் தொழிலதிபர்... எப்படி தெரியுமா?

இதில் பல விற்பனைச் செய்யப்பட்டு விட்டன. அனைத்தும் அமலாக்கத்துறை எதிர்பாராத குறைந்தளவு தொகைக்கே ஏலத்தில் எடுக்கப்பட்டிருக்கின்றன. இதனால், அத்துறை அதிகாரிகள் சற்றே குழம்பி நிற்கின்றனர்.

தற்போது ஏலம் விடப்பட்டிருக்கும் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் கார் 2010ம் ஆண்டு மாடல் ஆகும்.

வருடங்கள் பலவற்றை அக்கார் கடந்திருந்தாலும் தற்போதுவரை 25 ஆயிரம் கிமீ வரை மட்டுமே பயணித்துள்ளது. இதை முறையாக பராமரித்தால் ஆயுட்காலம் வரை நீடித்து உழைக்கும். எனவே, மனோஜ் ஷர்மா ஓர் லக்கியான நபராகவே காட்சியளிக்கின்றார்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Jodhpur Craftsman Gets Rs. 8 Crore Worthable Rolls Royce For 2 Crore Rupees. Read In Tamil.
Story first published: Tuesday, May 26, 2020, 14:57 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X