சும்மா நிறுத்தி வைத்திருந்த காரை கொத்தாக தூக்கிய போலீஸ்..! வெள்ளத்தில் உதவிய காருக்கே இந்த நிலையா?..

கேரள பெரு வெள்ளத்தின்போது பலருக்கு உதவியை காரை அம்மாநில மோட்டார் வாகனத்துறை போலீஸார் பறிமுதல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

சும்மா நிறுத்தி வைத்திருந்த பிரமாண்ட காரை கொத்தாக தூக்கிய போலீஸ்! வெள்ளத்தில் உதவிய காருக்கே இந்த நிலமையா?

மிகவும் அட்டகாசமான தோற்றம் கொண்ட மற்றும் இந்தியாவின் மிக பிரபலமான இசுஸு டி மேக்ஸ் வி-கிராஸ் காரை கேரளா மோட்டார் வாகனத்துறையினர் பறிமுதல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்துடன் உச்சபட்ச அபராதத்தையும் அக்காரின் உரிமையாளருக்கு மோட்டார் வாகனத் துறை அதிகாரிகள் வழங்கியிருப்பதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

சும்மா நிறுத்தி வைத்திருந்த பிரமாண்ட காரை கொத்தாக தூக்கிய போலீஸ்! வெள்ளத்தில் உதவிய காருக்கே இந்த நிலமையா?

அண்மைக் காலங்களாக வாகனங்கள் சார்ந்த குற்றச் சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. குறிப்பாக, போக்குவரத்து விதிமீறல்கள் நாடு முழுவதும் தலை விரித்தாடி வருகின்றது. இதற்கு தீர்வு காணும் விதமாக பல்வேறு புதிய விதிகள் இயற்றப்பட்டப்போதிலும், விதிமீறல்களின் எண்ணிக்கை சற்றும் குறையாமல் அரங்கேறிய வண்ணமே இருக்கின்றது.

சும்மா நிறுத்தி வைத்திருந்த பிரமாண்ட காரை கொத்தாக தூக்கிய போலீஸ்! வெள்ளத்தில் உதவிய காருக்கே இந்த நிலமையா?

இதனைக் களையெடுக்கும் விதமாக கேரள மோட்டார் வாகனத்துறை ஓர் தனித்துவமான யுக்தியைக் கையாளத் தொடங்கியுள்ளது. இதற்காக சமூக வலைதளமான முகப்புத்தக பக்கத்தில் ஓர் தனி கணக்கை அது தொடங்கியுள்ளது. இதன் மூலம் சமூக ஊடகங்களில் வைரலாகும் விதிமீறல் வீடியோக்களைக் கண்டறிந்து அதன்மீது அதிரடி நடவடிக்கையை அது எடுத்து வருகின்றது.

சும்மா நிறுத்தி வைத்திருந்த பிரமாண்ட காரை கொத்தாக தூக்கிய போலீஸ்! வெள்ளத்தில் உதவிய காருக்கே இந்த நிலமையா?

இதுமட்டுமின்றி, முகப்புத்தக பக்கத்தின் மூலம் புகார்களையும் அது பெற்று வருகின்றது. அவ்வாறு பெறப்படும் புகார்கள் மீதும் அவர்கள் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். அதாவது, தனி நபர் தன் கண் முன்னே போக்குவரத்து விதிமீறல் அரங்கேறுமானால், அதுகுறித்த தகவலை ஆதாரப்பூர்வமாக முகப்புத்தகத்தில் குறுஞ்செய்தி வாயிலாக தெரிவித்தால் மட்டுமே போதும்.

சும்மா நிறுத்தி வைத்திருந்த பிரமாண்ட காரை கொத்தாக தூக்கிய போலீஸ்! வெள்ளத்தில் உதவிய காருக்கே இந்த நிலமையா?

பின்னர் அப்புகாரை வைத்து ஆக வேண்டிய வேலையை மோட்டார் வாகனத்துறையினர் பார்த்துக் கொள்வர். இதன்மூலம் ஒவ்வொரு தனி நபரும் தற்போது போக்குவரத்து கண்கானிப்பாளராக மாறியிருக்கின்றனர். ஆம், விதிமீறல் சம்பவம்குறித்த தகவலை ஒவ்வொரு நபரும் முகப்புத்தகத்தின் மெசஞ்ஜர் வாயிலாக புகாராக தெரிவித்து வருகின்றனர்.

சும்மா நிறுத்தி வைத்திருந்த பிரமாண்ட காரை கொத்தாக தூக்கிய போலீஸ்! வெள்ளத்தில் உதவிய காருக்கே இந்த நிலமையா?

இதற்கு உடனடி பதிலளிப்பதோடு மட்டுமில்லாமல், குற்றம்சாட்ட அந்த வாகனம் மற்றும் அதன் உரிமையாளர்கள் மீதும் அதிரடி நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படுகின்றது. இதன் அடிப்படையிலேயே இந்தியாவின் புகழ்வாய்ந்த இசுஸு வி-கிராஸ் காருக்கு கேரளா மோட்டார் வாகனத்துறையினர் உச்சபட்ச அபராதத்தை வழங்கியிருக்கின்றனர்.

சும்மா நிறுத்தி வைத்திருந்த பிரமாண்ட காரை கொத்தாக தூக்கிய போலீஸ்! வெள்ளத்தில் உதவிய காருக்கே இந்த நிலமையா?

இந்த வாகனம் கடுமையான மாடிஃபிகேஷனுக்கு ஆளாக்கப்பட்டிருப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையிலேயே இந்த அதிரடி நடவடிக்கையைப் போலீஸார் எடுத்திருக்கின்றனர். இக்காரின் உரிமையாளர் அபின் ஆபிரகாம் என கண்டறியப்பட்டுள்ளது. இவருக்கே அதிகபட்ச அபராதமாக ரூ. 48 ஆயிரத்திற்கான செல்லாண் வழங்கப்பட்டிருக்கின்றது.

சும்மா நிறுத்தி வைத்திருந்த பிரமாண்ட காரை கொத்தாக தூக்கிய போலீஸ்! வெள்ளத்தில் உதவிய காருக்கே இந்த நிலமையா?

அத்துடன், இசுஸு வி-கிராஸ் காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. முதலில், புகார் அளித்தவரிடம் இக்கார் மீது எங்களால் நடவடிக்கை எடுக்க முடியாது. இது, தற்போது கேரள மாநிலத்தின் எல்லைப் பகுதியில் இல்லையென்று போலீஸார் கூறியுள்ளனர். ஆனால் விடா முயற்சியுடன், கார் மறைவாக நிறுத்தப்பட்டிருந்த கராஜ் மற்றும் அதன் முகவரி பற்றிய அனைத்து தகவலையும் புகார்தாரர் பகிர்ந்ததை அடுத்து போலீஸார் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்திருக்கின்றனர்.

சும்மா நிறுத்தி வைத்திருந்த பிரமாண்ட காரை கொத்தாக தூக்கிய போலீஸ்! வெள்ளத்தில் உதவிய காருக்கே இந்த நிலமையா?

அதேசமயம், இந்தியாவில் வாகனங்களை தாரளமாக மாடிஃபை செய்துகொள்ளலாம் என விதிகள் கூறுகின்றன. ஆனால், அவை சாலையில் பயன்படுத்தக்கூடாது. அவ்வாறு, அது சாலையில் பயன்படுத்தப்பட்டால் மட்டுமே அதற்கு அபராதம் போன்றவற்றை போலீஸாரால் விதிக்க முடியும். சம்பவத்தில் இசுஸு வி கிராஸ் காரை அதிகாரிகள் கராஜில் இருந்தே பறிமுதல் செய்திருக்கின்றனர்.

சும்மா நிறுத்தி வைத்திருந்த பிரமாண்ட காரை கொத்தாக தூக்கிய போலீஸ்! வெள்ளத்தில் உதவிய காருக்கே இந்த நிலமையா?

இது எப்படி சாத்தியம், இக்கார்தான் சாலையில் செல்லவில்லையே. ஏன், போலீஸார் அதற்கு அபராதம் விதித்தனர்?, இந்த கேள்வி நம்மில் பலருக்கு எழும்பியிருக்கும். இந்த கார் கடந்த காலங்களில் சாலையில் சுற்றி திரிவது போன்ற வீடியோ போலீஸார் வசம் சிக்கியிருக்கின்றது. இதன் அடிப்படையிலேயே கார் உரிமையாளருக்கு உச்சபட்சமாக ரூ. 48 ஆயிரத்திற்கான அபராதம் வழங்கப்பட்டிருக்கின்றது.

சும்மா நிறுத்தி வைத்திருந்த பிரமாண்ட காரை கொத்தாக தூக்கிய போலீஸ்! வெள்ளத்தில் உதவிய காருக்கே இந்த நிலமையா?

முந்தைய காலங்களில், கேரள பெருவெள்ளத்தின்போது இக்கார் மீட்பு பணியில்கூட ஈடுபடுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தகுந்தது. இந்தியாவில் பயன்பாட்டில் இருக்கும் மிகவும் பிரபலமான பிக்-ஆப் டிரக்குகளில் இசுஸு வி கிராஸும் ஒன்று. இதனாலயே இக்கார் அபராதம் பெற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதுமட்டுமின்றி பெருவெள்ளத்தின்போது மக்களைக் காப்பாற்றிய காருக்கு இப்படியொரு நிலையா என்ற வருத்தமும் எழும்பியுள்ளது. இக்கார் மாடிஃபிகஷன் மூலம் 6 அடி வரை கூடுதல் உயரத்தைக் பெற்றிருக்கின்றது. குறிப்பிட்டு கூற வேண்டுமானால் மினி மான்ஸ்டர் டிரக் போன்று மாறியிருக்கின்றது.

சும்மா நிறுத்தி வைத்திருந்த பிரமாண்ட காரை கொத்தாக தூக்கிய போலீஸ்! வெள்ளத்தில் உதவிய காருக்கே இந்த நிலமையா?

இதுமட்டுமின்றி கூடுதலாக ஆஃப்டர் மார்க்கெட் பொருட்களும் அக்காரில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. டயர், பம்பர், புல்பார் என பல அம்சங்கள் சந்தைக்கு பிறகானவையாக காட்சியளிக்கின்றன. இவற்றிற்காகவே கேரள மோட்டார் வாகனத்துறையினர் இசுஸு வி கிராஸ் மீது அதிரடி நடவடிக்கை மேற்கொண்டிருக்கின்றனர்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Kerala MVD Issued Fine To Illegal Modified Isuzu V-Max. Read In Tamil.
Story first published: Friday, August 14, 2020, 17:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X