Just In
- 1 hr ago
வாகனத்தில் தனியாக செல்லும்போது மாஸ்க் அணிவது கட்டாயமா, இல்லையா? - மத்திய அரசு விளக்கம்
- 12 hrs ago
சூப்பர்... மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பான கார் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா?
- 13 hrs ago
ப்பா... பைக்குகள் என்ன இப்படி இருக்கு!! உலகளவில் அறிமுகமான 2021 மோட்டோ குஸ்ஸி வி9 ரோமர் & வி9 பாப்பர்
- 14 hrs ago
செம கம் பேக்... புதிய தலைமுறை மாடல் வருகைக்கு பின் தூள் கிளப்பும் ஹூண்டாய் கிரெட்டா கார் விற்பனை...
Don't Miss!
- Movies
அடடா.. ஆரி இத்தனை கோடி வாக்குகள் வித்தியாசத்தில் உள்ளாரா.. பிக்பாஸ் வரலாற்றிலேயே முதல் முறையாம்!
- News
சென்னை உட்பட 8 நகரங்களில் இருந்து 'படேல் சிலை' கேவாடியாவுக்கு சிறப்பு ரயில்கள்-மோடி தொடங்கி வைத்தார்
- Sports
கடும் மோதல்.. ஒரு கோல் கூட அடிக்காத மும்பை சிட்டி - ஹைதராபாத்!
- Finance
அதிரடி ஆஃபர்.. ரூ.877 ரூபாயில் விமானத்தில் போகலாம்.. இண்டிகோவின் சரவெடி சலுகை..!
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Lifestyle
வார ராசிபலன் 17.01.2021 முதல் 23.01.2021 வரை – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அடேங்கப்பா... இந்தியாவின் 6வது மிகப்பெரிய கார் ஏற்றுமதி நிறுவனமாக உருவெடுத்தது கியா...
இந்தியாவின் 6வது மிகப்பெரிய கார் ஏற்றுமதி நிறுவனமாக கியா மோட்டார்ஸ் உருவெடுத்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கடந்த 2019ம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக இந்திய சந்தையில் கியா நிறுவனம், தற்போது இந்தியாவின் 6வது மிகப்பெரிய கார் ஏற்றுமதியாளராக உருவெடுத்துள்ளது. இந்தியாவில் இருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கு, 29,819 கார்களை ஏற்றுமதி செய்துள்ளதாக கியா மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதில், கியா செல்டோஸ் கார்களின் எண்ணிக்கை 20,293. எஞ்சிய அனைத்தும் கியா சொனெட் கார் ஆகும்.

கியா நிறுவனம் தற்போதைய நிலையில் செல்டோஸ், சொனெட் மற்றும் கார்னிவல் என மூன்று கார்களை மட்டுமே விற்பனை செய்து வருகிறது. இதில், செல்டோஸ் மற்றும் சொனெட் கார்களை உலகின் பல்வேறு நாடுகளுக்கு கியா மோட்டார்ஸ் ஏற்றுமதி செய்கிறது. ஆந்திர பிரதேச மாநிலம அனந்த்பூர் பகுதியில் கியா நிறுவனத்தின் தொழிற்சாலை அமைந்துள்ளது.
ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

இதன் உற்பத்தி திறன் பிரம்மாண்டமானது. இங்கு ஒரு ஆண்டுக்கு 3 லட்சம் கார்களை உற்பத்தி செய்ய முடியும். ஆனால் இந்த உற்பத்தி திறனை கியா நிறுவனம் இன்னும் முழுமையாக பயன்படுத்தவில்லை. எனினும் அடுத்த ஆண்டில் இந்த தொழிற்சாலையின் முழு உற்பத்தி திறன் எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கியா நிறுவனம் இந்திய சந்தைக்கு வந்தபோது, ஒவ்வொரு 6 மாதத்திற்கும் ஒரு புதிய தயாரிப்பு களமிறக்கப்படும் என அறிவித்தது இங்கே குறிப்பிடத்தக்கது. அனந்த்ப்பூர் தொழிற்சாலையில் கியா நிறுவனம் அதிகபட்ச உற்பத்தி திறனை பயன்படுத்தும் சமயத்தில், ஏற்றுமதி செய்யப்படும் கார்களின் எண்ணிக்கை கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹூண்டாய் மற்றும் மாருதி சுஸுகி ஆகிய நிறுவனங்களுக்கு பிறகு, இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய கார் ஏற்றுமதி நிறுவனமாக உருவெடுப்பதற்கான வாய்ப்புகள் கியா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு உள்ளன. இதற்கிடையே கியா நிறுவனம் சொனெட் காம்பேக்ட் எஸ்யூவி காரின் உற்பத்தியை அதிகரிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கியா சொனெட் காருக்கு சந்தையில் அதிக தேவை இருப்பதால், காத்திருப்பு காலம் அதிகமாக உள்ளது. இந்தியாவின் நம்பர்-1 கார் ஏற்றுமதி நிறுவனம் என்ற பெருமையை ஹூண்டாய் தக்க வைத்து கொண்டுள்ளது. கடந்த ஏப்ரல்-அக்டோபர் காலகட்டத்தில், ஹூண்டாய் நிறுவனம் 44,271 கார்களை ஏற்றுமதி செய்துள்ளது.

அதே சமயம் 41,011 கார்கள் ஏற்றுமதி என்ற எண்ணிக்கையுடன் மாருதி சுஸுகி நிறுவனம் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஃபோர்டு நிறுவனம் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. இதுதவிர ஃபோக்ஸ்வேகன் மற்றும் ஜென்ரல் மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்களும், அதிக கார்களை ஏற்றுமதி செய்த நிறுவனங்களின் பட்டியலில் கியாவிற்கு முன்னதாக உள்ளன. ஆனால் வரும் மாதங்களில் இது மாறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கியா நிறுவனம் செல்டோஸ் எஸ்யூவியை உலகில் 40க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. அதே சமயம் புதிதாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள கியா சொனெட் காம்பேக்ட் எஸ்யூவி, 70க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி என்ற நிலையை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கியா சொனெட் கார் கடந்த செப்டம்பர் மாதம்தான் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.