அறிமுகமான 3 மாதங்களிலேயே விற்பனையில் புதிய மைல்கல்லை தொட்ட கியா கார்னிவல்...

கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சமீபத்திய அறிமுகமான கார்னிவல் எம்பிவி மாடல் விற்பனையில் 3,000 யூனிட்கள் மைல்கல்லை கடந்து சாதனை படைத்துள்ளது. இதில் என்ன சிறப்பு என்று நினைக்கிறீர்களா... இந்த கார் அறிமுகமான மூன்று மாதங்களிலேயே இந்த மைல்கல்லை அடைந்துள்ளது.

அறிமுகமான 3 மாதங்களிலேயே விற்பனையில் புதிய மைல்கல்லை தொட்ட கியா கார்னிவல்...

2020 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தியிருந்த கியா மோட்டார்ஸ் நிறுவனம் இதன் விலையை எக்ஸ்ஷோரூமில் ரூ.24.95 லட்சமாக நிர்ணயித்துள்ளது. இந்த எம்பிவி கார் தான் இந்நிறுவனத்தின் செல்டோஸிற்கு பிறகான இரண்டாவது இந்திய அறிமுக மாடலாகும்.

அறிமுகமான 3 மாதங்களிலேயே விற்பனையில் புதிய மைல்கல்லை தொட்ட கியா கார்னிவல்...

கியா நிறுவனம் வழங்கியிருந்த ப்ரீமியம் மற்றும் விலையுயர்ந்த தோற்றத்திலான கேபினால் அறிமுகமான சமயத்தில் சந்தையில் மிகுந்த வரவேற்பை இந்த கார் பெற்றது. பிப்ரவரி மாத அறிமுகத்தில் இருந்து தற்போது வரை 3000 கார்னிவல் மாடலை கியா நிறுவனம் விற்றுள்ளது.

அறிமுகமான 3 மாதங்களிலேயே விற்பனையில் புதிய மைல்கல்லை தொட்ட கியா கார்னிவல்...

இதில் 1,117 யூனிட்கள் கடந்த மார்ச் மாத விற்பனை எண்ணிக்கையாகும். மூன்று மாதத்தில், அதுவும் தற்போது நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்ற ஊரடங்கு உத்தரவிற்கு மத்தியில் இந்த கார் இந்த மைல்கல்லை அடைந்திருப்பது இந்த காருக்கு சந்தையில் உள்ள வரவேற்பை காட்டுக்கிறது.

அறிமுகமான 3 மாதங்களிலேயே விற்பனையில் புதிய மைல்கல்லை தொட்ட கியா கார்னிவல்...

கியா மோட்டார்ஸ் நிறுவனம் இந்த எம்பிவி மாடலின் ஆரம்ப விலையை ரூ.24.95 லட்சமாகவும் (ப்ரீமியம் ட்ரிம்), அதிகப்பட்ச விலையாக ரூ.33.95 லட்சமாகவும் (லிமௌசைன்) நிர்ணயித்துள்ளது. மூன்று வரிசைகளில் ஒன்பது நபர்கள் அமரக்கூடிய வகையிலான இருக்கை அமைப்பை கொண்டுள்ள இந்த எம்பிவி கார் 7 மற்றும் 8 இருக்கை தேர்வுகளிலும் விற்பனை செய்யப்படுகிறது.

அறிமுகமான 3 மாதங்களிலேயே விற்பனையில் புதிய மைல்கல்லை தொட்ட கியா கார்னிவல்...

கார்னிவல் எம்பிவி மாடலின் டாப் லிமௌசைன் வேரியண்ட், அதிகப்பட்ச சவுகரியத்துடன் முழுவதும் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய இருக்கைகளை சிறப்பம்சமாக பெற்றுள்ளது. இந்த காரில் அதிகப்படியான தொழிட்நுட்ப வசதிகளை ஏற்படுத்தி கொடுத்துள்ள கியா நிறுவனம் உட்புறத்தில் கேபினை நன்கு கால்கள் நீட்டி அமரும் வகையில் அளவில் பெரியதாக வடிவமைத்துள்ளது.

அறிமுகமான 3 மாதங்களிலேயே விற்பனையில் புதிய மைல்கல்லை தொட்ட கியா கார்னிவல்...

எலக்ட்ரிக் மூலமாக கட்டுப்படுத்தக்கூடிய பின்புற கதவுகளை கொண்டுள்ள இந்த கார் பவர் ஃபோல்டிங் ஒஆர்விஎம்கள், எல்இடி ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள் மற்றும் எல்இடி டெயில் லேம்ப்கள் உள்ளிட்டவற்றையும் பெற்றுள்ளது. அதேநேரம் இந்த காரின் டாப் வேரியண்ட்டில் கியா நிறுவனத்தின் புலி மூக்கு வடிவிலான க்ரில் மற்றும் 18 இன்ச் அலாய் சக்கரங்கள் போன்ற ஸ்டைலான பாகங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகமான 3 மாதங்களிலேயே விற்பனையில் புதிய மைல்கல்லை தொட்ட கியா கார்னிவல்...

காரின் உட்புறம் லக்சரி-எம்பிவி மாடலுக்கு உண்டான 10-வழி பவர் அட்ஜெஸ்டபிள் ஓட்டுனர் இருக்கை, ட்யூல் சன்ரூஃப், 3-ஜோன் க்ளைமேட் கண்ட்ரோல், வயர்லெஸ் சார்ஜிங், கியாவின் யுவிஒ கனெக்டட்-கார் தொழிற்நுட்பம் மற்றும் ஸ்மார்ட் காற்று சுத்திகரிப்பான் உள்ளிட்ட பாகங்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அறிமுகமான 3 மாதங்களிலேயே விற்பனையில் புதிய மைல்கல்லை தொட்ட கியா கார்னிவல்...

கியா நிறுவனம் இந்த எம்பிவி மாடலில் 2.2 லிட்டர் 4-சிலிண்டர் டர்போ-டீசல் என்ஜினை பொருத்தியுள்ளது. அதிகப்பட்சமாக 197 பிஎச்பி பவரையும், 440 என்எம் டார்க் திறனையும் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டார்க்-கன்வெர்டர் கியர்பாக்ஸ் உடன் காருக்கு வழங்குகிறது.

அறிமுகமான 3 மாதங்களிலேயே விற்பனையில் புதிய மைல்கல்லை தொட்ட கியா கார்னிவல்...

பாகங்களாக இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு ஆந்திராவில் உள்ள இந்நிறுவனத்தின் தொழிற்சாலையில் அசெம்பிள் செய்யப்பட்டு கார்னிவல் எம்பிவி கார் சந்தைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த காருக்கு இந்திய சந்தையில் எந்த மாடலுடனும் நேரடி விற்பனை மோதல் இல்லை. டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவுடன் மட்டும் சில பிரிவுகளில் போட்டியிட்டு வருகிறது.

அறிமுகமான 3 மாதங்களிலேயே விற்பனையில் புதிய மைல்கல்லை தொட்ட கியா கார்னிவல்...

இந்திய சந்தையில் தற்சமயம் எஸ்யூவி மற்றும் எம்பிவி ரக மாடல்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதால் கார்னிவல் ப்ரீமியம்-லக்சரி எம்பிவி மாடல் எதிர்பார்த்ததை விட மிக விரைவாகவே இந்த மைல்கல்லை அடைந்துள்ளது. இந்த மாடலின் முக்கிய அம்சங்களாக வாடிக்கையாளர்கள் பார்ப்பது இதன் ட்யூல் சன்ரூஃப் மற்றும் ஒன்பது நபர்கள் அமரக்கூடிய வகையிலான இருக்கை அமைப்பும் தான்.

Most Read Articles
English summary
Kia Carnival Sales Cross 3,000 Units: Milestone Achieved In Three Months Of Launch
Story first published: Saturday, April 11, 2020, 15:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X