ஆட்டோ எக்ஸ்போ 2020: காரா? உல்லாச கப்பலா? சந்தேகத்தை ஏற்படுத்திய கியா கார்னிவல் இந்தியாவில் அறிமுகம்

காரா..? அல்லது உல்லாச கப்பலா..? என பார்வையாளர்களுக்கு சந்தேகத்தை வழங்கிய கியா நிறுவனத்தின் கார்னிவல் எம்பிவி ரக கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் கூடுதல் சிறப்பு தகவலை இந்த பதிவில் காணலாம்.

ஆட்டோ எக்ஸ்போ 2020: காரா..? உல்லாச கப்பலா..? என சந்தேகத்தை ஏற்படுத்திய கியா கார்னிவல் இந்தியாவில் அறிமுகம்...

இணையத்தை வீடியாவாலும், புகைப்படத்தாலும் ஆளுகைச் செய்துகொண்டிருந்த கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார்னிவல் எம்பிவி கார் ஒரு வழியாக இந்தியாவில் அறிமுகமாகி இருக்கின்றது. இதனால், இதன் வருகையை மிகவும் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருந்த எம்பிவி ரக வாகன ரசிகர்கள் தற்போது குஷியில் திகைத்திருக்கின்றனர்.

ஆட்டோ எக்ஸ்போ 2020: காரா..? உல்லாச கப்பலா..? என சந்தேகத்தை ஏற்படுத்திய கியா கார்னிவல் இந்தியாவில் அறிமுகம்...

இந்த காரின் ஆரம்பநிலை வேரியண்டிற்கு ரூ. 24.95 லட்சம் என்ற விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, இதன் டாப் எண்ட் வேரியண்டிற்கு அதிகபட்சமாக ரூ. 33.95 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆட்டோ எக்ஸ்போ 2020: காரா..? உல்லாச கப்பலா..? என சந்தேகத்தை ஏற்படுத்திய கியா கார்னிவல் இந்தியாவில் அறிமுகம்...

இந்த பிரிமியம் தரத்திலான எம்பிவி காரானது டொயோட்டா நிறுவனத்தின் இன்னோவா க்ரிஸ்டா காரைக் காட்டிலும் அதிக வசதிகள் கொண்ட காராக காட்சியளிக்கின்றது. ஆகையால், இன்னோவா க்ரிஸ்டாவுக்கு மேலான இடத்தில் இது அமர்ந்திருக்கின்றது.

இந்த கார் இந்தியாவிற்கு சிகேடி வழியாக இறக்குமதி செய்யப்படுகின்றது. இந்த காரை இரண்டாவது மாடலாக இந்தியாவில் கியா அறிமுகம் செய்திருக்கின்றது.

ஆட்டோ எக்ஸ்போ 2020: காரா..? உல்லாச கப்பலா..? என சந்தேகத்தை ஏற்படுத்திய கியா கார்னிவல் இந்தியாவில் அறிமுகம்...

கியா நிறுவனம் இந்தியாவில் கால் தடம் பதித்து சில மாதங்களே ஆகின்றன. இது, செல்டோஸ் என்ற எஸ்யூவி ரக காரைக் கொண்டு களமிறங்கியது. இதையடுத்தே இந்த பிரிமியம் தரத்திலான எம்பிவி-யை அது களமிறக்கியுள்ளது. இந்த காருக்கான புக்கிங் தற்போது நடைபெற்று வரும்நிலையில், விரைவில் டெலிவரி தொடங்கப்பட இருக்கின்றது.

இந்த காரின் இன்டீரியர் மற்றும் எக்ஸ்டீரியர் தோற்றம் மிகவும் பிரம்மிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

ஆட்டோ எக்ஸ்போ 2020: காரா..? உல்லாச கப்பலா..? என சந்தேகத்தை ஏற்படுத்திய கியா கார்னிவல் இந்தியாவில் அறிமுகம்...

குறிப்பாக, இந்த கார் ஏழு, எட்டு மற்றும் 9 ஆகிய இருக்கை வசதிகள்கொண்ட காராக அறிமுகமாகி இருக்கின்றது. இந்த தேர்வை மூன்று விதமான வேரியண்டுகள் மூலம் அது வழங்க இருக்கின்றது. அவை பிரிமியம், பிரஸ்டீஜ் மற்றும் லிமோசைன் ஆகியவை ஆகும்.

இதில், பிரிமியம் ட்ரிம்மில் ஏழு மற்றும் எட்டு இருக்கை தேர்வும், பிரஸ்டீஜ் ட்ரிம்மில் ஏழு மற்றும் ஒன்பது இருக்கை தேர்வும் வழங்கப்பட உள்ளது.

ஆட்டோ எக்ஸ்போ 2020: காரா..? உல்லாச கப்பலா..? என சந்தேகத்தை ஏற்படுத்திய கியா கார்னிவல் இந்தியாவில் அறிமுகம்...

இதேபோன்று, டாப் ஸ்பெக் மாடலாக இருக்கும் லிமோசைன் வேரியண்டில் ஏழு இருக்கை தேர்வு மட்டுமே வழங்கப்பட உள்ளது. ஏனென்றால், இந்த கார் முழுக்க முழுக்க சொகுசு வசதிகளைக் கவனத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ஆகையால், இதன் மத்திய இருக்கை வரிசையானது இரு கேப்டன் இருக்கை அமைப்பைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, லெக்ரூம் போன்ற இடவசதி மிகவும் தாரளமாக ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆட்டோ எக்ஸ்போ 2020: காரா..? உல்லாச கப்பலா..? என சந்தேகத்தை ஏற்படுத்திய கியா கார்னிவல் இந்தியாவில் அறிமுகம்...

இதுமட்டுமின்றி, பயணிகள் சுலபமாக ஏறி இறங்குகின்ற வகையில் ஸ்லைடிங் கதவுகள் எலக்ட்ரானிக் முறை மூலம் திறந்து மூடுகின்ற வகையில் நிறுவப்பட்டுள்ளது.

இத்துடன், கூடுதல் தொழில்நுட்ப வசதியாக 10.1 இன்சிலான டிவி திரை, லேப்டாப் மற்றும் செல்போன் சார்ஜிங் பாயிண்ட் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

ஆட்டோ எக்ஸ்போ 2020: காரா..? உல்லாச கப்பலா..? என சந்தேகத்தை ஏற்படுத்திய கியா கார்னிவல் இந்தியாவில் அறிமுகம்...

இதுதவிர கியா கார்னிவல் காரில் மேலம் பல பிரிமியம் வசதிகள் காணப்படுகின்றன. குறிப்பாக எலக்ட்ரானிக் மூலம் கட்டுபடுத்தும் ட்யூவல் சன்ரூஃப், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ திறன் கொண்ட தொடுதிரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஒரே டச் மூலம் கட்டுபடுத்தக்கூடிய கதவுகள், ட்யூவன் ஷோன் க்ளைமேட் கன்ட்ரோல் மற்றும் யூவிஓ கன்னெக்ட் வசதி உள்ளிட்டவை மிக சிறந்த வசதிகளாக காட்சியளிக்கின்றன.

ஆட்டோ எக்ஸ்போ 2020: காரா..? உல்லாச கப்பலா..? என சந்தேகத்தை ஏற்படுத்திய கியா கார்னிவல் இந்தியாவில் அறிமுகம்...

இத்துடன், காரின் வெளிப்புறத் தோற்றத்தில் கூடுதல் கவர்ச்சியை வழங்குவதற்காக டே டைம் எல்இடி மின் விளக்கு, எல்இடி ஹெட்லேம்ப் மற்றும் பனி விளக்கு, வால்பகுதி விளக்கு உள்ளிட்டவை கொடுக்கப்பட்டுள்ளன.

ஆட்டோ எக்ஸ்போ 2020: காரா..? உல்லாச கப்பலா..? என சந்தேகத்தை ஏற்படுத்திய கியா கார்னிவல் இந்தியாவில் அறிமுகம்...

கியா கார்னிவல் காரில் 2.2 லிட்டர் விஜிடி டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது, பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானதாகும். இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 197 பிஎச்பி பவர் மற்றும் 440 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறனைக் கொண்டவையாகும்.

இந்த எஞ்ஜின் 8 ஸ்பீடு ஸ்போர்ட்மேட்டிக் டிரான்மிஷனில் இயங்குகின்றது. இது காரின் அனைத்து வீல்களுக்கும் திறனை வழங்கும்.

ஆட்டோ எக்ஸ்போ 2020: காரா..? உல்லாச கப்பலா..? என சந்தேகத்தை ஏற்படுத்திய கியா கார்னிவல் இந்தியாவில் அறிமுகம்...

இவ்வாறு, பல்வேறு சிறப்பம்சங்களை உள்ளடக்கியதாக கியா கார்னிவல் இந்தியாவில் களமிறங்கியிருக்கின்றது. இது தற்போது இந்தியாவில் விற்பனையில் இருக்கும் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா மற்றும் டொயோட்டா பார்ச்சூனர், ஃபோர்டு என்டீயோவர் மற்றும் இசுசூ எம்யூ-எக்ஸ் ஆகிய கார்களுக்கு கடுமையான போட்டியை வழங்க இருக்கின்றது.

Most Read Articles
English summary
Kia Carnival Launched In India At Rs. 24.95 Lakh. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X