கியா கார்னிவல் காரில் இடம்பெற்றிருக்கும் முக்கிய அம்சங்கள்

கியா கார்னிவல் எம்பிவி கார் வாடிக்கையாளர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. போட்டியாளர்களைவிட இந்த காரில் கூடுதல் சிறப்பம்சங்களை வழங்கி வாடிக்கையாளர்களை கவரும் முனைப்பில் கியா உள்ளது.

கியா கார்னிவல் காரில் இடம்பெற்றிருக்கும் முக்கிய அம்சங்கள்

பிரிமீயம் மாடல்

எம்பிவி ரகத்தில் வலுவான போட்டியாளராக இருந்து வரும் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் மார்க்கெட்டை உடைப்பது எளிதான காரியம் அல்ல. எனினும், நேரடியாக மோதாமல், அதிக பிரிமீயம் அம்சங்களுடன் இன்னோவா க்ரிஸ்ட்டா விற்பனையில் இருந்து சற்று பிரித்து எடுப்பதற்கான திட்டத்துடன் கார்னிவல் காரை புதிய ரகத்தில் நிலைநிறுத்த உள்ளது கியா மோட்டார்ஸ். அந்த வகையில், கியா கார்னிவல் காரில் இடம்பெற்றிருக்கும், கூடுதல் சிறப்பம்சங்களை இந்த காரில் பார்க்கலாம்.

கியா கார்னிவல் காரில் இடம்பெற்றிருக்கும் முக்கிய அம்சங்கள்

வயர்லெஸ் சார்ஜர்

கியா கார்னிவல் காரில் வயர்லெஸ் சார்ஜர் வசதி இடம்பெற்றிருக்கிறது. இதன்மூலமாக, காரில் பயணிப்பவர்கள் எளிதாக சார்ஜ் ஏற்றுவதற்கான வசதியை அளிக்கும். அத்துடன், கியா கார்னிவல் காரில் லேப்டாப் சார்ஜரும் உள்ளது மிக முக்கிய அம்சமாக கூறலாம்.

கியா கார்னிவல் காரில் இடம்பெற்றிருக்கும் முக்கிய அம்சங்கள்

இருக்கை அமைப்பு

கியா கார்னிவல் காரில் 7 சீட்டர், 8 சீடடர் மற்றும் 9 சீட்டர் மாடல்களில் வழங்கப்பட இருக்கின்றன. இந்த காரின் 9 சீட்டர் மாடலானது 4 வரிசை இருக்கை அமைப்புடன் வர இருக்கிறது. மேலும், இன்னோவா க்ரிஸ்ட்டா காரை ஒப்பிடும்போது, இது மிக அதிக இடவசதியை வழங்கும் எம்பிவி கார் மாடலாக இருக்கும். இன்னோவா க்ரிஸ்ட்டா கார் 8 பேர் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும்.

கியா கார்னிவல் காரில் இடம்பெற்றிருக்கும் முக்கிய அம்சங்கள்

விஐபி இருக்கை

கியா கார்னிவல் காரின் டாப் வேரியண்ட்டாக வழங்கப்பட இருக்கும் லிமோசின் வேரியண்ட்டில் இரண்டாவது வரிசையில் இரண்டு விஐபி இருக்கைகள் வழங்கப்பட இருக்கின்றன. இந்த இருக்கைகளில் கால்களுக்கு லெக்ரெஸ்ட் வசதியுடன் வருவது வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. இந்த வேரியண்ட்டுக்குத்தான் அதிக முன்பதிவு பெறப்பட்டுள்ளதாக கியா தெரிவித்துள்ளது.

கியா கார்னிவல் காரில் இடம்பெற்றிருக்கும் முக்கிய அம்சங்கள்

யுவோ கனெக்ட்டிவிட்டி சிஸ்டம்

புதிய கியா கார்னிவல் காரில் யுவோ என்ற புதிய கனெக்ட்டிவிட்டி தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளது. இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை ஸ்மார்ட்ஃபோனுடன் இந்த யுவோ செயலி மூலமாக இணைத்துக் கொண்டால் 37 வகையான கட்டுப்பாட்டு மற்றும் தகவல்களை பெறும் வாய்ப்பை உரிமையாளர்கள் பெற முடியும்.

கியா கார்னிவல் காரில் இடம்பெற்றிருக்கும் முக்கிய அம்சங்கள்

பவர்ஃபுல் எஞ்சின்

கியா கார்னிவல் காரில் 2.2 லிட்டர் டர்போ டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 197 பிஎச்பி பவரையும், 440 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. மறுபுறத்தில் இன்னோவா க்ரிஸ்ட்டா காரில் 146 பிஎச்பி பவரையு், 343 என்எம் டார்க் திறனையும் வழங்கும் 2.4 லிட்டர் டீசல் எஞ்சின் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கிறது.

கியா கார்னிவல் காரில் இடம்பெற்றிருக்கும் முக்கிய அம்சங்கள்

மைலேஜ்

கியா கார்னிவல் கார் 13.9 கிமீ மைலேஜ் வழங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. நடைமுறையில் முழுமையான பாரத்துடன் செல்லும்போது லிட்டருக்கு 8 கிமீ முதல் 11 கிமீ வரை மைலேஜ் வழங்கும் என்று நம்பலாம்.

கியா கார்னிவல் காரில் இடம்பெற்றிருக்கும் முக்கிய அம்சங்கள்

பூட்ரூம்

கியா கார்னிவல் காரில் 426 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட்ரூம் இடவசதி அளிக்கப்படுகிறது. ஆனால், இன்னோவா க்ரிஸ்ட்டா காரில் 300 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட்ரூம் இடவசதி உள்ளது. இதுவும் நிச்சயம் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் விஷயமாக கூறலாம்.

கியா கார்னிவல் காரில் இடம்பெற்றிருக்கும் முக்கிய அம்சங்கள்

வண்ணத் தேர்வுகள்

கியா கார்னிவல் கார் வெள்ளை, சில்வர் மற்றும் கருப்பு வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும். அதேபோன்று, வசதிகளை பொறுத்து மூன்று விதமான வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது.

கியா கார்னிவல் காரில் இடம்பெற்றிருக்கும் முக்கிய அம்சங்கள்

இதர அம்சங்கள்

இந்த காரில் 3 ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், ஸ்மார்ட் ஏர் பியூரிஃபயர், எலெக்ட்ரிக் சன்ரூஃப், ஸ்லைடிங் முறையில் திறந்து மூடும் கதவுகள் அமைப்பு உள்ளிட்ட ஏராளமான சிறப்பு வசதிகள் உள்ளன. இதுவே வாடிக்கையாளர்களை பெரிதும் கவரும் விஷயமாக இருக்கும்.

கியா கார்னிவல் காரில் இடம்பெற்றிருக்கும் முக்கிய அம்சங்கள்

எதிர்பார்க்கும் விலை

டொயோட்டா இன்னோாவா க்ரிஸ்ட்டா கார் ரூ.15.36 லட்சம் முதல் ரூ.24.06 லட்சம் வரையிலான விலையில் கிடைக்கிறது. ஆனால், கியா கார்னிவல் கார் ரூ.25 லட்சம் முதல் ரூ.30 லட்சம் இடையிலான விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. அதிக விலை வித்தியாசம் இருக்கும் வாய்ப்புள்ளது. எனவே, இது புதிய ரகத்திலான மாடலாக நிலைநிறுத்தப்படும்.

Most Read Articles

English summary
Here are 8 Interesting features in Kia Carnival MPV car that you must know.
Story first published: Wednesday, January 29, 2020, 11:07 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X