கியா கார்னிவல் வேரியண்ட்டுகள் விபரம் வெளியானது!

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள கியா கார்னிவல் எம்பிவி காரின் வேரியண்ட்டுகள் விபரம் வெளியாகி இருக்கிறது. இந்த காரை வாங்க திட்டமிட்டுள்ளோருக்கு இந்த தகவல் உதவிகரமாக இருக்கும்.

கியா கார்னிவல் வேரியண்ட்டுகள் விபரம் வெளியானது!

கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் செல்டோஸ் எஸ்யூவி பெரும் வெற்றியை ருசித்துள்ள நிலையில், இரண்டாவது மாடலாக கார்னிவல் எம்பிவி காரை அறிமுகப்படுத்த உள்ளது. அடுத்த மாத துவக்கத்தில் நடைபெற இருக்கும் ஆட்டோ எக்ஸ்போவில் இந்த புதிய கியா கார்னிவல் எம்பிவி கார் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது.

கியா கார்னிவல் வேரியண்ட்டுகள் விபரம் வெளியானது!

இந்த கார் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவி காருக்கு சரிநிகரான மாடலாக இருக்கும் என்பதால், வாடிக்கையாளர் மத்தியில் பேராவல் நிலவுகிறது. இந்த நிலையில், இந்த காரில் வழங்கப்பட இருக்கும் வேரியண்ட்டுகளின் விபரம் வெளியாகி இருக்கிறது.

கியா கார்னிவல் வேரியண்ட்டுகள் விபரம் வெளியானது!

குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பட்ஜெட்டை பொறுத்து இந்த காரை வாங்க விரும்புவோருக்கு தோதுவாக, புதிய கியா கார்னிவல் எம்பிவி கார் இருக்கைகளின் எண்ணிக்கையை பொறுத்து இந்த வேரியண்ட்டுகள் வழங்கப்பட இருப்பது தெரிய வந்துள்ளது.

கியா கார்னிவல் வேரியண்ட்டுகள் விபரம் வெளியானது!

விலை குறைவான மாடல் 9 இருக்கைகள் கொண்ட மாடலாக இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. நடுத்தர விலை கொண்ட வேரியண்ட்டானது 8 இருக்கைகள் கொண்டதாக இருக்கும்.

கியா கார்னிவல் வேரியண்ட்டுகள் விபரம் வெளியானது!

இந்த காரின் 7 இருக்கைகள் கொண்ட மாடலானது விலை உயர்ந்த இரண்டு வேரியண்ட்டுகளில் கிடைக்கும். இந்த வேரியண்ட்டுகளின் விலை ரூ.30 லட்சம் என்ற விலையை எட்டுவதாக இருக்கும்.

கியா கார்னிவல் வேரியண்ட்டுகள் விபரம் வெளியானது!

டாப் வேரியண்ட்டில் மட்டுமே நப்பா லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி, பின் இருக்கை பயணிகளுக்கான டிவி திரைகள், 18 அங்குல அலாய் வீல்கள், இரண்டு சன்ரூஃப் அமைப்பு, கீ லெஸ் என்ட்ரி உள்ளிட்ட வசதிகளை பெற்றிருக்கும்.

கியா கார்னிவல் வேரியண்ட்டுகள் விபரம் வெளியானது!

தவிரவும், 3 ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி சிஸ்டம், 8.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், கியா கார் கனெக்ட்டிவிட்டி தொழில்நுட்பமும் கொடுக்கப்படும்.

கியா கார்னிவல் வேரியண்ட்டுகள் விபரம் வெளியானது!

கியா கார்னிவல் காரில் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 201 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் வாய்ந்ததாக இருக்கும். ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கும்.

கியா கார்னிவல் வேரியண்ட்டுகள் விபரம் வெளியானது!

கியா கார்னிவல் எம்பிவி காருக்கு டீலர்களில் ரகசியமாக பெயர் முன்பதிவு நடக்கிறது. ரூ.1 லட்சம் வரை செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது.

கியா கார்னிவல் வேரியண்ட்டுகள் விபரம் வெளியானது!

ரூ.25 லட்சம் முதல் ரூ.30 லட்சம் விலையில் புதிய கியா கார்னிவல் எம்பிவி கார் எதிர்பார்க்கப்படுகிறது. டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரைவிட சற்றே விலை உயர்ந்த பிரிமீயம் ரக எம்பிவி மாடலாக நிலைநிறுத்தப்படும் என்று தெரிகிறது.

Via- ACI

Most Read Articles
English summary
According to report, KIA Carnival MPV will be available in a total of four variants based on seating configuration in India.
Story first published: Saturday, January 11, 2020, 16:31 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X