Just In
- 24 min ago
ஆக்டிவா உடனான போட்டியை சமாளிக்க குறைந்த விலை ஜூபிடர்... டிவிஎஸ் அதிரடி... ஆஹா இவ்ளோ குறைந்த விலையா?
- 1 hr ago
சீனாவில் தீப்பற்றி எரிந்த டெஸ்லா மாடல் 3... இந்தியாவிற்கு வரவுள்ள எலெக்ட்ரிக் கார் என்பதால் கடும் அதிர்ச்சி...
- 2 hrs ago
முண்டாசு கட்டிய பிஎம்டபிள்யூ... இந்தியாவில் 25 புதிய மாடல்களுடன் தெறிக்கவிட திட்டம்!
- 2 hrs ago
சுசுகி அக்செஸ் 125 ஸ்கூட்டரின் விலை உயர்ந்தன... எவ்வளவு உயர்ந்திருக்கு தெரிஞ்சா நிச்சயம் ஆச்சரியப்படுவீங்க!!
Don't Miss!
- News
பிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் -ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவு
- Sports
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகள்... 50% ரசிகர்களை அனுமதிக்க திட்டம் போடும் பிசிசிஐ!
- Movies
மன்னிச்சு விட்ருங்கன்னு கெஞ்சுறாங்க.. பாலாவை மன்னிக்கணும்னா 3 கண்டிஷன் போடும் ஜோ மைக்கேல்!
- Finance
சென்செக்ஸ் 1000 முதல் 50,000 வரை.. 30 வருட பயணம்.. இதோ ஒரு பார்வை..!
- Lifestyle
மொறுமொறுப்பான... ஓட்ஸ் கட்லெட்
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ரயிலில் பயணித்த ஆயிரக் கணக்கான புத்தம் புது கார்கள்... மத்திய அமைச்சர் வெளியிட்ட புகைப்படம்...
மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் கியா நிறுவனத்தின் புத்தம் புதிய கார்கள் அணி வகுத்து பயணிப்பதைப் போன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து வெளியாகியிருக்கும் கூடுதல் தகவல்களை இந்த பதிவில் காணலாம்.

நாம் பயணிக்க பயன்படுத்தப்படும் வாகனங்கள் ரயில் பயணத்தை மேற்கொள்வது போன்ற புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அந்த வாகனங்கள் அனைத்தும் கியா நிறுவனத்தின் புத்தம் புதிய கார்கள் ஆகும். அவை, நாட்டின் பிற மாநில விற்பனையாளர்களுக்குக் கார்களைக் கொண்டு சேர்க்கும் விதமாக சேர்க்கும் விதமாக கியா நிறுவனம், அதன் உற்பத்தி ஆலையில் இருந்து ஏற்றுமதி செய்த வாகனங்கள் ஆகும்.

கியா நிறுவனத்தின் உற்பத்தி ஆலை, ஆந்திர மாநிலத்தின் அனந்த்பூரில் உள்ள பெனுகொண்டா எனும் பகுதியில் அமைந்திருக்கின்றது. இங்கிருந்தே ரயில் பெட்டிகள் வாயிலாக 5 ஆயிரத்திற்கும் அதிகமான புதிய கார்கள் நாட்டின் பிற மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன.

இதுகுறித்த புகைப்படத்தையே மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், அவரது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கியா நிறுவனம், இந்தியாவில் கால் தடம் பதித்து ஒரு வருடங்களே ஆகின்றது. ஆனால், அதற்குள்ளாக நாட்டின் முன்னணி வாகன நிற்வனங்களில் ஒன்றாக அது மாறியிருக்கின்றது.

இதற்கு கியாவின் செல்டோஸ் எனும் எஸ்யூவி ரக கார் மட்டுமே காரணம் ஆகும். இந்த காரையே இந்தியாவிற்கான முதல் காராக கியா அறிமுகப்படுத்தியது. இந்த கார் அறிமுகம் செய்யப்பட்டு ஓராண்டு ஆகியதை ஒட்டி தற்போது அக்காரின் ஒரு வருட கொண்டாட்ட (Kia Seltos Anniversary Edition) மாடலை கியா இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த கார் மிக விரைவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றது. இதற்கான வேலையிலேயே கியா நிறுவனம் தற்போது தீவிரம் காட்டி வருகின்றது. அதேவேலையில், ஏற்கனவே விற்பனையில் இருக்கும் வாகனங்களை உரிய விற்பனையாளர்களிடத்தில் கொண்டு சேர்க்கும் பணியிலும் அது ஈடுபட்டு வருகின்றது.

அந்தவகையில், ரயில் வழித் தடம் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட கார்களின் புகைப்படமே இப்போது இணையத்தில் வெளியாகியிருக்கின்றது. அந்த புகைப்படத்தில், கியா சொனெட் மற்றும் செல்டோஸ் எஸ்யூவி கார்கள் இருப்பதை நம்மால் காண முடிகின்றது.

பொதுவாக, வாகனங்களை அனுப்பி வைக்க கன்டெய்னர் லாரிகளே பெருமளவில் பயன்படுத்தப்படும். சமீப காலமாக உயர்ந்து வரும் பெட்ரோல்-டீசல் விலை, சுங்க கட்டணம் ஆகியவை இந்த நிலைக்கு முற்றி புள்ளி வைக்கத் தொடங்கியுள்ளது. இதன் ஆரம்பமாகவே வாகன உற்பத்தியாளர்கள் சிலர் ரயில் வழித் தடத்தைத் தேர்வு செய்ய ஆரம்பித்துள்ளனர்.

மேலும், எதிர்பார்த்ததைக் காட்டிலும் வெகு விரைவில் வாகனங்கள் உரிய இடத்தில் கொண்டு சேர்க்கப்பட வேண்டும் என்பதற்காகவும் இந்த யுக்தியை தயாரிப்பாளர்கள் கையாளத் தொடங்கியிருக்கின்றனர். இதுமட்டுமின்றி, டிரக்குகளில் அனுப்பி வைப்பதைக் காட்டிலும் ரயில் வழித் தடத்தைப் பயன்படுத்துவதன் மூலம் மிகக் குறைந்த செலவே ஏற்படுவதாக கூறப்படுகின்றது.

எனவேதான், வாகன உற்பத்தியாளர்கள் டிரக்குகளுக்கு மாற்றாக ரயில் வழித்தடத்தைப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். மேலும், இதனை ஊக்குவிக்கும் விதமாக ரயில்வேத்துறை சில சிறப்பு சலுகைகளை வழங்க ஆரம்பித்துள்ளது. நாட்டின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான மாருதி சுசுகி-யும்கூட ரயில் வழித் தடத்தைப் பயன்படுத்தியே நாட்டின் பிற பகுதிகளுக்கு கார்களை விநியோகம் செய்து வருகின்றது.

இந்நிலையிலேயே கியா நிறுவனமும் இதே பாணியைக் கையாளத் தொடங்கியிருக்கின்றது. கியாவின் இந்த தேவைக்காக இந்திய ரயில்வேத்துறை சில சிறப்பு மாற்றங்களை ரயில் சரக்கு பெட்டிகளில் செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதாவது, ரயில் சரக்கு பெட்டிக்குள் கார்கள் சுலபமாக சென்று வரும் வகையில் மேற்கூரையை சற்று கூடுதல் இடைவெளியுடன் மாற்றப்பட்டுள்ளது. அவ்வாறு, மாற்றப்பட்ட 50 ரேக்குகள் கன்டெய்னர்களிலேயே கியா சொனெட் மற்றும் செல்டோஸ் கார்களின் 5 ஆயிரம் யூனிட்டுகள் அனுப்பி வைக்கப்பட்டன. இதனால், முந்தைய காலத்தைக் காட்டிலும் தற்போது ரயிலில் வாகனங்கள் ஏற்றிச் செல்லும் நிகழ்வு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.