போற போக்க பாத்தா கியா எங்கயோ போயிரும் போல இருக்கே... திகைத்து போய் நிற்கும் போட்டி நிறுவனங்கள்...

கொரோனா வைரஸ், ஊரடங்கு பிரச்னைகளுக்கு மத்தியிலும், கியா நிறுவனம் கடந்த ஜூன் மாதம் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது.

போற போக்க பாத்தா கியா எங்கயோ போயிரும் போல இருக்கே... திகைத்து போய் நிற்கும் போட்டி நிறுவனங்கள்...

தென் கொரியாவை சேர்ந்த கியா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த 2019ம் ஆண்டில், இந்திய மார்க்கெட்டில் காலடி எடுத்து வைத்தது. இந்தியாவிற்கு வந்த உடனேயே வாடிக்கையாளர்கள் மத்தியில், கியா மோட்டார்ஸ் நிறுவனம் வேகமாக பிரபலமாகி விட்டது. இந்தியாவில் கியா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்த முதல் தயாரிப்பு செல்டோஸ்.

போற போக்க பாத்தா கியா எங்கயோ போயிரும் போல இருக்கே... திகைத்து போய் நிற்கும் போட்டி நிறுவனங்கள்...

கியா நிறுவனத்திற்கு இது மிகவும் முக்கியமான காராகும். செல்டோஸ் காருக்கு அடுத்தபடியாக லக்ஸரி எம்பிவி ரக காரான கார்னிவலை, கியா நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ திருவிழாவில், கார்னிவல் காரை கியா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

போற போக்க பாத்தா கியா எங்கயோ போயிரும் போல இருக்கே... திகைத்து போய் நிற்கும் போட்டி நிறுவனங்கள்...

இந்தியாவில் தற்போது ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளதால், பெரும்பாலான கார் நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலைகளில் மீண்டும் உற்பத்தியை தொடங்கியுள்ளன. அத்துடன் தங்கள் டீலர்ஷிப்கள் வாயிலாக கார் விற்பனையையும் மீண்டும் ஆரம்பித்துள்ளனர். மக்களும் நீண்ட இடைவெளிக்கு பின் கார்களை வாங்க தொடங்கியுள்ளனர்.

போற போக்க பாத்தா கியா எங்கயோ போயிரும் போல இருக்கே... திகைத்து போய் நிற்கும் போட்டி நிறுவனங்கள்...

இந்த சூழலில் கடந்த ஜூன் மாதத்திற்கான கியா நிறுவனத்தின் சேல்ஸ் ரிப்போர்ட் தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி கடந்த ஜூன் மாதத்தில் 7,200க்கும் மேற்பட்ட கார்களை கியா நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இது செல்டோஸ் மற்றும் கார்னிவல் ஆகிய இரண்டு கார்களின் கூட்டு எண்ணிக்கையாகும்.

போற போக்க பாத்தா கியா எங்கயோ போயிரும் போல இருக்கே... திகைத்து போய் நிற்கும் போட்டி நிறுவனங்கள்...

இதன் மூலம் விற்பனை எண்ணிக்கை அடிப்படையில், கடந்த மாதம் 5வது இடத்தை கியா நிறுவனம் பிடித்துள்ளது. முதல் நான்கு இடங்களை மாருதி சுஸுகி, ஹூண்டாய், டாடா மற்றும் மஹிந்திரா ஆகிய நிறுவனங்கள் பிடித்துள்ளன. கியா நிறுவனம் கடந்த மாதம் ஒட்டுமொத்தமாக 7,275 கார்களை விற்பனை செய்துள்ளது.

போற போக்க பாத்தா கியா எங்கயோ போயிரும் போல இருக்கே... திகைத்து போய் நிற்கும் போட்டி நிறுவனங்கள்...

இதில், 7,114 செல்டோஸ் எஸ்யூவி கார்களும், 161 கார்னிவல் லக்ஸரி எம்பிவி கார்களும் அடக்கம். இந்த இரண்டு கார்களுமே இந்தியாவில் மிகவும் பிரபலமாகி விட்டன என்றாலும், கியா செல்டோஸ் கார் மெகா ஹிட் அடித்துள்ளது. ஒவ்வொரு மாதமும் மிகவும் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை கியா செல்டோஸ் பதிவு செய்து வருகிறது.

போற போக்க பாத்தா கியா எங்கயோ போயிரும் போல இருக்கே... திகைத்து போய் நிற்கும் போட்டி நிறுவனங்கள்...

கம்பீரமான தோற்றம், அட்டகாசமான வசதிகள் மற்றும் மிகவும் சவாலான விலை ஆகிய காரணங்களால்தான் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் கியா செல்டோஸ் இந்த அளவிற்கு பிரபலமாகியுள்ளது. 2 பெட்ரோல் மற்றும் 1 டீசல் என மொத்தம் 3 இன்ஜின் ஆப்ஷன்களுடன் கியா செல்டோஸ் கார் கிடைக்கிறது.

போற போக்க பாத்தா கியா எங்கயோ போயிரும் போல இருக்கே... திகைத்து போய் நிற்கும் போட்டி நிறுவனங்கள்...

இதில், 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின், மேனுவல் அல்லது சிவிடி கியர் பாக்ஸ் ஆப்ஷனுடன் கிடைக்கிறது. அதே சமயம் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின், மேனுவல் அல்லது டார்க் கன்வெர்டர் ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது. இதுதவிர 1.4 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனும் கியா செல்டோஸ் காரில் உள்ளது.

போற போக்க பாத்தா கியா எங்கயோ போயிரும் போல இருக்கே... திகைத்து போய் நிற்கும் போட்டி நிறுவனங்கள்...

7 ஸ்பீடு டிசிடி அல்லது மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷனுடன் இந்த இன்ஜின் கிடைக்கிறது. வேரியண்ட்களை பொறுத்து, செல்டோஸ் காரில், எலெக்ட்ரிக் சன் ரூஃப், வென்டிலேட்டட் இருக்கைகள், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, மின்னணு முறையில் அட்ஜெஸ்ட் செய்து கொள்ள கூடிய டிரைவர் இருக்கைகள், டச் ஸ்க்ரீன் சிஸ்டம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை கியா நிறுவனம் வழங்குகிறது.

போற போக்க பாத்தா கியா எங்கயோ போயிரும் போல இருக்கே... திகைத்து போய் நிற்கும் போட்டி நிறுவனங்கள்...

மறுபக்கம் கியா கார்னிவல் காரும் இந்தியர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இதன் இன்டீரியரில் தாராளமான இட வசதி வழங்கப்படுகிறது. இந்த காரின் பிரம்மாண்டமான தோற்றமும், இதில் வழங்கப்படும் அட்டகாசமான வசதிகளும், தாராளமான இட வசதியும் கியா கார்னிவல் காருக்கு கிடைத்திருக்கும் வரவேற்பிற்கு முக்கியமான காரணங்களாக உள்ளன.

Most Read Articles

English summary
Kia Motors India Sales Report For June 2020. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X