Just In
- 14 min ago
இந்தியாவின் மலிவான க்ரூஸர் மோட்டார்சைக்கிள், பஜாஜ் அவென்ஜெர்ஸின் விலை அதிகரிப்பு!!
- 7 hrs ago
எக்ஸ்ட்ரா பம்பர் வரிசையில் அடுத்த அதிரடி! இனி இது இல்லாமல் டூவீலர் ஓட்டி பந்தா காட்ட முடியாது! என்ன தெரியுமா?
- 8 hrs ago
2021 சஃபாரியின் வருகையில் எந்த தாமதமும் இல்லை!! மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தும் டாடா மோட்டார்ஸ்
- 9 hrs ago
2021 ஸ்கோடா சூப்பர்ப் செடான் கார் இந்தியாவில் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.31.99 லட்சம்
Don't Miss!
- News
Coronavirus Vaccines: இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் இன்று தொடக்கம்
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 16.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் அவசர முடிவுகள் எடுக்காமல் இருப்பது நல்லது…
- Movies
அம்மாவ பத்தி ஏன் பேசின.. நான் ஒண்ணும் ஸ்கூல் பொண்ணு கிடையாது.. பாலாஜியை வெளுத்து வாங்கிய ஷிவானி!
- Sports
அடுத்தடுத்த இடத்துல இருக்கற அணிகள் மோதும் 59வது போட்டி... வெற்றி யாருக்கு.. ரசிகர்கள் ஆர்வம்
- Finance
கலவரத்திற்கு முன் பிட்காயின் மூலம் பேமெண்ட்.. அமெரிக்காவில் நடந்த கொடூரம்..!
- Education
ரூ.1.13 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மேற்கூரை பெட்டகத்துடன் வரும் 2021 கார்னிவல் ஹை-லிமௌசைன்!! முழு விபரத்தையும் வெளியிட்டது கியா
நான்காம் தலைமுறை கார்னிவல் காரின் படத்தையும் காரை பற்றிய தகவல்களை கியா மோட்டார்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.

கியா தற்போது வெளியிட்டிருப்பது அதன் சொந்த நாடான தென் கொரியாவிற்கான புதிய தலைமுறை கார்னிவல் காராகும். மற்ற உலக நாட்டு சந்தைகளுக்கு இந்த கார் இதன் பின்னரே வெளியிடப்படவுள்ளது. இந்தியாவில் கியாவின் ப்ரீமியம் எம்பிவி மாடலான கார்னிவல் மூன்று வேரியண்ட்களில் இந்த ஆண்டு துவக்கத்தில் நடைபெற்ற 2020 ஆட்டோ எக்ஸ்போவின் மூலம் அறிமுகமானது.

வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவரும் இந்த கார் இந்தியாவில் அறிமுகமாகி வெறும் 9 மாதங்கள் மட்டுமே ஆகுவதால், இதன் புதிய தலைமுறையின் வருகை அடுத்த வருடத்திலும் இல்லாமல், அதற்கு அடுத்த 2022ஆம் ஆண்டில் தான் இருக்கும்.

ஆனால் மற்ற நாட்டு சந்தைகளில் ஹை-லிமௌசைன் என்ற கூடுதல் சேர்ப்புடன் கார்னிவலின் பலத்தை கியா நிறுவனம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கார்னிவல் ஹை-லிமௌசைன் வரிசையில் 7-இருக்கை மற்றும் 9-இருக்கை தேர்வுகளில் கார்கள் வழங்கப்படுகின்றன.

கார்கோ இடத்திற்காக கூடுதலாக பொருத்தப்பட்ட மேற்கூரை பெட்டகத்தின் காரணமாக காரின் நீளம் 45மிமீ அதிகரிக்கப்பட்டு 5,200மிமீ ஆகவும், உயரம் 305மிமீ உயர்த்தப்பட்டு 2,045மிமீ ஆகவும் கொண்டுவரப்பட்டுள்ளது. இருப்பினும் காரின் அகலம் 1,995மிமீ ஆகவும், வீல்பேஸின் நீளம் 3,090மிமீ ஆகவும் தான் தொடர்ந்துள்ளன.

கியா கார்னிவல் ஹை-லிமௌசைனின் 7-இருக்கை வெர்சனின் விலை சர்வதேச சந்தையில் 62.71 மில்லியன் வுன் ஆகவும், 9-இருக்கை வெர்சனின் விலை 60.66 மில்லியன் வுன் ஆகவும் உள்ளது. இந்த இரு வெர்சன்களில் மேற்கூரை பெட்டகம் தனித்தனியாக வழங்கப்படவில்லை. புதிய தலைமுறைக்காக கார்னிவல் ஹை-லிமௌசைன் வெளிப்புறத்தில் அப்கிரேட்களை பெற்றுள்ளது.

பக்கவாட்டில் வழங்கப்பட்ட படிக்கட்டு, பின்பக்க டெயில்கேட்டிற்கு நேர்த்தியான தோற்றத்தை வழங்கும் விதத்தில் வழங்கப்பட்டுள்ளது. மேற்கூரையில் வழங்கப்பட்டுள்ள ப்ரேக் விளக்கு, முன்பக்க பம்பர் பாதுக்காப்பான் மற்றும் சறுக்கு தட்டுகள் உள்ளிட்டவை கூடுதல் பாதுகாப்பு அம்சங்களாக உள்ளன.

இதன் 7-இருக்கை வெர்சனில் கால்களுக்கான இரண்டாவது வரிசையில் தலையணை உடன் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ள கேப்டன் இருக்கை மற்றும் மூன்றவாவது இருக்கை வரிசைக்கான கூடுதல் இட வசதிகளினால் 9-இருக்கை வெர்சனை காட்டிலும் கூடுதல் விலையினை பெற்றுள்ளது. 9-இருக்கை வெர்சனில் 2-2-2-3 என்ற இருக்கை அமைப்பு பின்பற்றப்பட்டுள்ளது.

வாகன நிலைப்பாட்டு மேலாண்மை, இபிடியுடன் ஏபிஎஸ், ப்ரேக் உதவி, தன்னிச்சையான அவசர கால ப்ரேக், இயங்கு பாதையில் இருந்து விலகி சென்றால் எச்சரிக்கும் வசதி, பின்பக்கமாக ரிவர்ஸ் வரும்போது குறுக்காக வேறொரு வாகனம் வருவதை எச்சரிக்கும் வசதி, ஆக்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், 7 காற்றுப்பைகள், ஹை பீம் அசிஸ்ட் உள்ளிட்டவை இந்த இரு வெர்சன்களிலும் பாதுகாப்பு அம்சங்களாக கொடுக்கப்பட்டுள்ளன.

இயக்க ஆற்றலை வழங்குவதற்கு கார்னிவல் ஹை-லிமௌசைன் காரில் வழங்கப்பட்டுள்ள 3.5 லிட்டர் வி6 பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 290 பிஎச்பி மற்றும் 355 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும். இதனுடன் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் இணைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த எம்பிவி காரில் வழங்கப்பட்டுள்ள மற்ற அம்சங்களாக நப்பா லெதர் இருக்கை அமைப்பு, ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், 12.3 இன்ச் தொடுத்திரை, கேபினை சுற்றிலும் விளக்குகள், மேற்கூரையில் ஏசி துளைகள், எல்இடி ஹெட்லேம்ப்கள் உள்ளிட்டவை உள்ளன.