Just In
- 1 hr ago
இந்தியாவின் மலிவான க்ரூஸர் மோட்டார்சைக்கிள், பஜாஜ் அவென்ஜெர்ஸின் விலை அதிகரிப்பு!!
- 9 hrs ago
எக்ஸ்ட்ரா பம்பர் வரிசையில் அடுத்த அதிரடி! இனி இது இல்லாமல் டூவீலர் ஓட்டி பந்தா காட்ட முடியாது! என்ன தெரியுமா?
- 9 hrs ago
2021 சஃபாரியின் வருகையில் எந்த தாமதமும் இல்லை!! மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தும் டாடா மோட்டார்ஸ்
- 11 hrs ago
2021 ஸ்கோடா சூப்பர்ப் செடான் கார் இந்தியாவில் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.31.99 லட்சம்
Don't Miss!
- News
கோவின் செயலியில் பதிவு செய்வது எப்படி?.. என்னென்ன ஆவணங்கள் தேவை?.. முழு விவரம் இதோ!
- Movies
சத்தியமங்கலத்தில் ஷுட்டிங்.. வெற்றிமாறன் இயக்கும் படம்.. சூரி ஜோடியாக இவர்தான் நடிக்கிறாராமே?
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 16.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் அவசர முடிவுகள் எடுக்காமல் இருப்பது நல்லது…
- Sports
அடுத்தடுத்த இடத்துல இருக்கற அணிகள் மோதும் 59வது போட்டி... வெற்றி யாருக்கு.. ரசிகர்கள் ஆர்வம்
- Finance
கலவரத்திற்கு முன் பிட்காயின் மூலம் பேமெண்ட்.. அமெரிக்காவில் நடந்த கொடூரம்..!
- Education
ரூ.1.13 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
விற்பனையில் பிரம்மாண்ட வளர்ச்சியை பதிவு செய்தது கியா... எவ்வளவு சதவீதம் தெரியுமா?
கியா நிறுவனம் கடந்த நவம்பர் மாதம் விற்பனையில் பிரம்மாண்டமான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கியா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்திய சந்தையில் காலடி எடுத்து வைத்தது. இந்திய சந்தைக்கான தங்களது முதல் தயாரிப்பாக செல்டோஸ் எஸ்யூவியை கியா மோட்டார்ஸ் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. தற்போது இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்படும் மிட்-சைஸ் எஸ்யூவி கார்களில் ஒன்றாக கியா செல்டோஸ் திகழ்கிறது.

செல்டோஸ் எஸ்யூவி காருக்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து, கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில், கார்னிவல் எம்பிவி காரை கியா மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்தது. அதன்பின் தங்களது மூன்றாவது தயாரிப்பாக சொனெட் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி காரை, கியா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.
ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

கியா சொனெட் காம்பேக்ட் எஸ்யூவி காருக்கும் இந்திய சந்தையில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதன் பலனாக கடந்த நவம்பர் மாதம் கியா நிறுவனம் மொத்தம் 21,022 கார்களை, இந்திய சந்தையில் விற்பனை செய்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் அதிக கார்களை விற்பனை செய்யும் நிறுவனங்களின் பட்டியலில் கியா நிறுவனம் நான்காவது இடத்தில் உள்ளது.

இதற்கிடையே கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்தியாவில் கியா நிறுவனம் மொத்தம் 14,005 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. ஆனால் நடப்பாண்டு நவம்பர் மாதம் 21,022 கார்களை விற்பனை செய்துள்ளது. இதன் மூலம் விற்பனையில் 50 சதவீத வளர்ச்சியை கியா பதிவு செய்துள்ளது. இதற்கு செல்டோஸ் மற்றும் சொனெட் ஆகிய கார்களுக்குதான் கியா நன்றி சொல்ல வேண்டும்.

அதே சமயம் நடப்பாண்டு அக்டோபர் மாதம் கியா நிறுவனம் 21,021 கார்களை விற்பனை செய்திருந்தது. அதாவது அதன்பின் வந்த நவம்பர் கியா நிறுவனம் தனது விற்பனை எண்ணிக்கையை அப்படியே தக்க வைத்து கொண்டுள்ளது. கியா நிறுவனம் தற்போது இந்தியாவில் விற்பனை செய்து வருவதிலேயே சொனெட்தான் விலை குறைவான கார்.

தற்போதைய நிலையில் 6.71 லட்ச ரூபாய் முதல் 12.99 லட்ச ரூபாய் வரையிலான விலைகளில் கியா சொனெட் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபக்கம் கியா செல்டோஸ் எஸ்யூவி காரின் விலை 9.89 லட்ச ரூபாயில் இருந்து தொடங்குகிறது. செல்டோஸ் காரின் டாப் வேரியண்ட்டின் விலை 17.34 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்தும் எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

இருப்பதிலேயே கார்னிவல்தான் இந்திய சந்தையில் கியா நிறுவனம் விற்பனை செய்து வரும் விலை உயர்ந்த கார் ஆகும். கியா கார்னிவல் எம்பிவி காரின் விலை 24.95 லட்ச ரூபாயில் இருந்து தொடங்குகிறது. அதே சமயம் கியா கார்னிவல் காரின் டாப் வேரியண்ட்டின் விலை 33.95 லட்ச ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவும் எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

இதில், செல்டோஸ் மற்றும் சொனெட் ஆகிய இரண்டு கார்களும் விற்பனையில் தலை சிறந்து விளங்கி வருகின்றன. இந்த இரண்டு கார்களையும் இந்தியாவில் விற்பனை செய்வதுடன் மட்டுமல்லாது, உலகின் பல்வேறு நாடுகளுக்கு இங்கிருந்து கியா மோட்டார்ஸ் நிறுவனம் ஏற்றுமதியும் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.