வேற லெவலில் காட்சியளிக்கும் செல்டோஸ் ஓர் ஆண்டுநிறைவு எடிசன்... டிவிசி வீடியோவை வெளியிட்டது கியா...

கியா மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் செல்டோஸ் ஆண்டுநிறைவு எடிசன் காரின் தொலைக்காட்சி கமர்ஷியல் (டிவிசி) வீடியோவை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

வேற லெவலில் காட்சியளிக்கும் செல்டோஸ் ஓர் ஆண்டுநிறைவு எடிசன்... டிவிசி வீடியோவை வெளியிட்டது கியா...

சமீபத்தில் டீலர்ஷிப் ஷோரூம் ஒன்றில் இருந்து ஸ்பை படங்கள் வெளியானதை தொடர்ந்து தற்போது இந்த ஸ்பெஷல் எடிசன் காரின் டிவிசி வீடியோ தயாரிப்பு நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஸ்பெஷல் எடிசன், 2019 ஆகஸ்ட்டில் அறிமுகமான செல்டோஸின் ஓர் ஆண்டு நிறைவை நினைவுக்கூரும் விதமாக வெளியிடப்படுகிறது.

செல்டோஸ் எஸ்யூவி காரின் எச்டிஎக்ஸ் ட்ரிம்மில் கொண்டுவரப்படவுள்ள இந்த எடிசன் வழக்கமான செல்டோஸ் காருடன் ஒப்பிடுகையில் வெளிப்புறம் மற்றும் உட்புறத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தினை ஏற்றுள்ளது. இருப்பினும் விலை வெறும் ரூ.30,000 மட்டுமே கூடுதலாக நிர்ணயிக்கப்படவுள்ளது.

வேற லெவலில் காட்சியளிக்கும் செல்டோஸ் ஓர் ஆண்டுநிறைவு எடிசன்... டிவிசி வீடியோவை வெளியிட்டது கியா...

முன் மற்றும் பின்பக்கத்தில் புதிய டிசைனிலான பம்பர்களை இந்த லிமிடேட் எடிசன் கார் ஏற்றுவருகிறது. இந்த பம்பர்கள் தான் வழக்கமான செல்டோஸை காட்டிலும் 60மிமீ நீளமானதாக இந்த ஆண்டுநிறைவு ஸ்பெஷல் எடிசனை காட்டுகின்றன. இருப்பினும் கூடுதல் நீளத்திற்கு ஏற்றாற்போல் உட்புற கேபினில் எந்த மாற்றமும் இல்லை.

வேற லெவலில் காட்சியளிக்கும் செல்டோஸ் ஓர் ஆண்டுநிறைவு எடிசன்... டிவிசி வீடியோவை வெளியிட்டது கியா...

பக்கவாட்டுகளில் புதிய சறுக்கு தட்டுகளை பெற்றுள்ள இந்த ஸ்பெஷல் எடிசனில் அலாய் சக்கரங்கள் புதிய டிசைனில் கருப்பு நிறத்தில் 17 இன்ச்சில் வழங்கப்பட்டுள்ளன. கார் மொத்தமும் கருப்பு நிறத்தில் காட்சியளித்தாலும், பக்கவாட்டு சறுக்கு தட்டுகள், பம்பரின் அடிப்பகுதி மற்றும் மூடுபனி விளக்குகளில் ஆரஞ்ச் நிறத்தை பார்க்க முடிகிறது.

வேற லெவலில் காட்சியளிக்கும் செல்டோஸ் ஓர் ஆண்டுநிறைவு எடிசன்... டிவிசி வீடியோவை வெளியிட்டது கியா...

மேலும் கருப்பு அலாய் சக்கரங்களின் மையத்திலும் ஆரஞ்ச் நிறம் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆரஞ்ச் நிறங்கள் 2020 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட கியாவின் எக்ஸ்-லைன் கான்செப்ட் மாடலை நினைவுப்படுத்துகின்றன. இந்த லிமிடேட் எடிசன் காருக்கு இரு இரு-டோன் நிறத்தேர்வுகளை தயாரிப்பு நிறுவனம் வழங்கவுள்ளது.

வேற லெவலில் காட்சியளிக்கும் செல்டோஸ் ஓர் ஆண்டுநிறைவு எடிசன்... டிவிசி வீடியோவை வெளியிட்டது கியா...

இதில் இரும்பு சில்வர் உடன் அரோரா கருப்பு பேர்ல் மற்றும் க்ராவிட்டி க்ரே உடன் அரோரா கருப்பு பேர்ல் உள்ளிட்ட நிறங்கள் அடங்குகின்றன. பின்கதவில் ஓர் ஆண்டுநிறைவுக்கான முத்திரையுடன் வரவுள்ள இந்த ஸ்பெஷல் எடிசன் எச்டிஎக்ஸ் ட்ரிம்மில் உருவாக்கபட்டுள்ளதால், எல்இடி ஹெட்லேம்ப்கள், எல்இடி டெயில்லேம்ப்கள் மற்றும் நேர்த்தியான எல்இடி ஃபாக் விளக்குகளை பெற்றுள்ளது.

வேற லெவலில் காட்சியளிக்கும் செல்டோஸ் ஓர் ஆண்டுநிறைவு எடிசன்... டிவிசி வீடியோவை வெளியிட்டது கியா...

இவை மட்டுமின்றி பின் பயணிகளுக்கும் ஏசி, சாவியில்லா நுழைவு, சன்ரூஃப், இரட்டை காற்றுப்பைகள், இபிடியுடன் ஆண்டி-லாக் ப்ரேக்குகள் உள்ளிட்டவற்றையும் பெற்றுவரவுள்ள இந்த எடிசனின் முழு-கருப்பு நிற கேபின் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவுடன் 10.25 இன்ச் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், யுவிஒ இணைப்பு, ரிமோட் என்ஜின் ஸ்டார்ட், சுற்றிலும் விளக்கு, வயர் இல்லா சார்ஜர், 6-ஸ்பீக்கர் ஆடியோ போன்றவற்றை கொண்டிருக்கும்.

வேற லெவலில் காட்சியளிக்கும் செல்டோஸ் ஓர் ஆண்டுநிறைவு எடிசன்... டிவிசி வீடியோவை வெளியிட்டது கியா...

செல்டோஸ் எச்டிஎக்ஸ் ட்ரிம்மிற்கு வழங்கப்படும் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் தேர்வுகளை அப்படியே இந்த ஆண்டுநிறைவு எடிசன் காருக்கும் கியா மோட்டார்ஸ் நிறுவனம் வழங்கவுள்ளது. இந்த இரு என்ஜின் தேர்வுகளுக்கும் 6-ஸ்பீடு மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் நிலையாக வழங்கப்பட, பெட்ரோல் என்ஜினிற்கு மட்டும் கூடுதலாக சிவிடி கியர்பாக்ஸ் தேர்வு கொடுக்கப்படுகிறது.

Most Read Articles

English summary
Kia Seltos Anniversary Edition Revealed In New TVC; Launch Soon
Story first published: Thursday, October 15, 2020, 13:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X