செல்டோஸ் காருக்கு கியா வழங்கும் Buy Back திட்டம்... 3 ஆண்டுகள் கழித்து எவ்வளவு விலை கிடைக்கும்?

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட கியா செல்டோஸ் கார் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றிருக்கிறது. அறிமுகம் செய்யப்பட்ட சில மாதங்களிலேயே விற்பனையில் இந்தியாவின் நம்பர்-1 எஸ்யூவி மாடல் என்ற பெருமையையும் பெற்றது.

செல்டோஸ் காருக்கு கியா வழங்கும் Buy Back விலை உறுதித் திட்டம்... நிபந்தனைகளும், பயன்களும்!

இந்த நிலையில், கொரோனா பிரச்னையால் கார் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல சிறப்பு கடன் திட்டங்கள் மற்றும் அறிவிப்புகளை கார் நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில், செல்டோஸ் காருக்கு பல சிறப்பு திட்டங்களை கியா மோட்டார் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

செல்டோஸ் காருக்கு கியா வழங்கும் Buy Back விலை உறுதித் திட்டம்... நிபந்தனைகளும், பயன்களும்!

அதில், கியா செல்டோஸ் காரின் ரீசேல் மதிப்பை உறுதி செய்யும் வகையில் ஒரு திட்டத்தை கியா அறிவித்துள்ளது. அதாவது, காரை திரும்ப விற்பனை செய்யும்போது அதிக மதிப்பை உறுதி செய்யும் வகையில் சிறப்பு Buy Back திட்டத்தை கியா அறிவித்துள்ளது. அதாவது, பயன்படுத்தப்பட்ட செல்டோஸ் காரை சில ஆண்டுகள் கழித்து திரும்பி வாங்கி்க் கொள்வதற்கான வாய்ப்பை வழங்குகிறது.

செல்டோஸ் காருக்கு கியா வழங்கும் Buy Back விலை உறுதித் திட்டம்... நிபந்தனைகளும், பயன்களும்!

இந்த திட்டம் கியா செல்டோஸ் எஸ்யூவியை வாங்க விரும்புவோருக்கு அதிக மதிப்பையும், நம்பிக்கையும் தரும் வகையில் அமைந்துள்ளது. அதாவது, சில ஆண்டுகள் கழித்து காரை விற்பனை செய்ய விரும்பும் வாடிக்கையாளர்கள் கியா டீலரிடமே அதிக மதிப்புடன் திரும்ப விற்கும் வகையில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

செல்டோஸ் காருக்கு கியா வழங்கும் Buy Back விலை உறுதித் திட்டம்... நிபந்தனைகளும், பயன்களும்!

இந்த Buy Back திட்டத்தை தேர்வு செய்யும் கியா செல்டோஸ் வாடிக்கையாளர்கள் வாங்கிய தேதியில் இருந்து முதல் மூன்று ஆண்டுகளுக்கு காரை விற்பனை செய்ய இயலாது. விற்பனை செய்யப்பட்ட தேதியில் இருந்து ஆண்டுகளில் கியா டீலரிடமே செல்டோஸ் எஸ்யூவியை விற்பனை செய்தால், 60 சதவீத ரீசேல் விலையையும், 4 மற்றும் 5 ஆண்டுகளில் விற்பனை செய்தால் 55 சதவீத ரீசேல் மதிப்புடன் செல்டோஸ் காரை விற்பனை செய்துவிடலாம்.

செல்டோஸ் காருக்கு கியா வழங்கும் Buy Back விலை உறுதித் திட்டம்... நிபந்தனைகளும், பயன்களும்!

இதற்கு மேலும் சில நிபந்தனைகளும் உள்ளன. 3 ஆண்டுகளில் கார் 45,000 கிமீ தூரம் வரை மட்டுமே கார் ஓடியிருக்க வேண்டும். 4 ஆண்டுகளில் விற்பனை செய்தால் அதிகபட்சமாக 55,000 கிமீ தூரத்திற்கு மிகாமலும், 5 ஆண்டுகளில் 70,000 கிமீ தூரத்திற்கு மிகாமலும் கிலோமீட்டர் ரீடிங் இருக்க வேண்டியது அவசியம்.

செல்டோஸ் காருக்கு கியா வழங்கும் Buy Back விலை உறுதித் திட்டம்... நிபந்தனைகளும், பயன்களும்!

மேலும், கியா நிறுவனத்தின் மூலமாக விற்பனை செய்யும் வரை கார் காப்பீடு புதுப்பிக்க வேண்டும். வெளியில் உள்ள ஏஜென்ட் மூலமாக காருக்கு காப்பீடு செய்தால், இந்த திட்டத்தின் நிபந்தனைகளை மீறியதாக எடுத்துக் கொள்ளப்படுவதுடன் திரும்ப விற்பனை செய்வதற்கான தகுதியையும் இழக்க வேண்டும்.

செல்டோஸ் காருக்கு கியா வழங்கும் Buy Back விலை உறுதித் திட்டம்... நிபந்தனைகளும், பயன்களும்!

மேலும், குறித்த நேரத்தில் கியா சர்வீஸ் மையத்தில் மட்டுமே செல்டோஸ் காரை திரும்ப விற்பனை செய்யும் வரை பராமரிப்பு மற்றும் பழுதுநீக்கு பணிகளை செய்திருக்க வேண்டும். குறித்த நேரத்தில் பராமரிப்பு செய்யப்படாவிட்டால், இந்த திட்டத்திற்கான தகுதியை இழக்கும்.

செல்டோஸ் காருக்கு கியா வழங்கும் Buy Back விலை உறுதித் திட்டம்... நிபந்தனைகளும், பயன்களும்!

விபத்தில் சிக்கி புதுப்பிக்கும் பணிகள் செய்யப்பட்டால், இந்த திட்டத்திற்கான தகுதியை அந்த செல்டோஸ் கார் இழந்துவிடும். மேற்கண்ட 4 நிபந்தனைகளையும் பூர்த்தி செய்தால் மட்டுமே டீலரிடம் உரிய ரீசேல் மதிப்புடன் விற்பனை செய்வதற்கான தகுதியை பெற முடியும். இதற்காக ரூ.13,000 செலுத்தி தகுதிச் சான்று பெற வேண்டும் என்றும் டீலர் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Most Read Articles
English summary
Here are complete details about Kia Seltos buy-back Scheme conditions and benefits details.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X