புதிய ஹூண்டாய் க்ரெட்டாவையும் விற்பனையில் ஒரு கை பார்த்த கியா செல்டோஸ்...

கியா செல்டோஸ் மாடல் இந்தியாவில் சிறப்பாக விற்பனையாகும் எஸ்யூவி என்கிற பட்டத்தை மூன்றாவது முறையாக சொந்தமாக்கியுள்ளது. இதனால் புதிய ஹூண்டாய் க்ரெட்டா அடுத்த இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்த முழுமையான தகவல்களை இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.

புதிய ஹூண்டாய் க்ரெட்டாவையும் விற்பனையில் ஒரு கை பார்த்த கியா செல்டோஸ்...

கியா நிறுவனத்தில் இருந்து கடந்த ஆண்டு இறுதியில் இந்திய சந்தையில் அறிமுகமான முதல் தயாரிப்பு மாடலாக விளங்கும் செல்டோஸ் கடந்த மார்ச் மாதத்தில் 7,466 யூனிட் விற்பனையை சந்தையில் பதிவு செய்துள்ளது.

புதிய ஹூண்டாய் க்ரெட்டாவையும் விற்பனையில் ஒரு கை பார்த்த கியா செல்டோஸ்...

இந்த கார் விற்பனையில் முந்தியுள்ள க்ரெட்டா எஸ்யூவி மாடல் ஹூண்டாய் நிறுவனத்தின் சமீபத்திய அறிமுக காராகும். செல்டோஸை விற்பனையில் மிக நெருங்கமாக பின்தொடர்ந்துள்ள க்ரெட்டா அந்த எஸ்யூவி மாடலை விட வெறும் 100 யூனிட்கள் மட்டுமே பின் தங்கியுள்ளது.

புதிய ஹூண்டாய் க்ரெட்டாவையும் விற்பனையில் ஒரு கை பார்த்த கியா செல்டோஸ்...

கடந்த மார்ச் மாதத்தில் மொத்தம் 6,706 கார்கள் விற்பனையாகி ஹூண்டாய் க்ரெட்டா மிக நீண்ட மாதங்களுக்கு பிறகு இந்திய சந்தையில் ஒரு மாதத்தில் சிறப்பாக விற்பனையான டாப்-10 கார்கள் லிஸ்ட்டில் நுழைந்துள்ளது.

புதிய ஹூண்டாய் க்ரெட்டாவையும் விற்பனையில் ஒரு கை பார்த்த கியா செல்டோஸ்...

2020 க்ரெட்டாவை பற்றி கூற வேண்டுமென்றால், இந்த காரில் புதிய ஸ்டைலிங் மற்றும் உலகளாவிய டிசைனில் இன்-லைன்களை ஹூண்டாய் நிறுவனம் வழங்கியுள்ளது. இந்நிறுவனத்தின் வெளிநாட்டு சந்தைகளில் விற்பனையில் உள்ள பாலிசேட் எஸ்யூவியில் உள்ள ப்ராண்ட்டின் தனித்துவமான பெரிய க்ரில்-ஐ 2020 க்ரெட்டா கார் கொண்டுள்ளது.

புதிய ஹூண்டாய் க்ரெட்டாவையும் விற்பனையில் ஒரு கை பார்த்த கியா செல்டோஸ்...

எல்இடி ப்ரோஜெக்டர்களுடன் ஹெட்லேம்ப்பை பெற்றுள்ள புதிய க்ரெட்டா கார், எல்இடி டிஆர்எல்களை ஹெட்லேம்ப் க்ளஸ்ட்டரை சுற்றிலும் கொண்டுள்ளது. அதேபோல் அலாய் சக்கரங்கள் டைமண்ட்-கட் டிசைனிலும் பின்புறம் சிறிது மாற்றங்களுடனும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

புதிய ஹூண்டாய் க்ரெட்டாவையும் விற்பனையில் ஒரு கை பார்த்த கியா செல்டோஸ்...

இதனால் காரின் முன்புறத்திற்கு ஏற்ற வகையில் பின்புற பகுதியும் காட்சியளிக்கிறது. 2020 க்ரெட்டா மாடலில் இயக்க ஆற்றலுக்கு கியா நிறுவனம் செல்டோஸ் மாடலில் வழங்கியுள்ள அதே என்ஜின் தேர்வுகளை தான் ஹூண்டாய் நிறுவனம் வழங்கியுள்ளது.

புதிய ஹூண்டாய் க்ரெட்டாவையும் விற்பனையில் ஒரு கை பார்த்த கியா செல்டோஸ்...

இந்த வகையில் புதிய க்ரெட்டா எஸ்யூவி கார், 1.5 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் டீசல் மற்றும் 1.4 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ற மூன்று என்ஜின் தேர்வுகளை பெற்றுள்ளது. இதேபோல் இந்த என்ஜின்கள் வெளிப்படுத்தக்கூடிய ஆற்றல் அளவுகளிலும் செல்டோஸ் மற்றும் க்ரெட்டா மாடல்கள் ஒத்து காணப்படுகின்றன.

புதிய ஹூண்டாய் க்ரெட்டாவையும் விற்பனையில் ஒரு கை பார்த்த கியா செல்டோஸ்...

இதில் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்களுடன் ட்ரான்ஸ்மிஷனிற்கு 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் நிலையாகவும், கூடுதல் தேர்வாக ஐவிடி மற்றும் சிவிடி என்ற இரு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகின்றன. 1.4 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜினிற்கு 7-ஸ்பீடு டிசிடி மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வுகளாக வழங்கப்படுகின்றன.

புதிய ஹூண்டாய் க்ரெட்டாவையும் விற்பனையில் ஒரு கை பார்த்த கியா செல்டோஸ்...

தற்சமயம் உலகம் முழுவதும் பரவி வரும் வைரஸ் ஆட்டோமொபைல் துறையை தலைக்கீழாக புரட்டி போட்டுள்ளது. இதில் சமீபத்திய அறிமுகமான ஹூண்டாய் க்ரெட்டாவும் தப்பவில்லை. கியா செல்டோஸ் உடன் தீவிரமாக விற்பனையில் போட்டியிட்டு வரும் க்ரெட்டா மாடல் கடந்த மார்ச் மாதத்தில் தான் சந்தையில் வலுவாக காலூன்ற திட்டமிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
மேலும்... #ஆட்டோ #auto news
English summary
Kia Seltos Sales Overtakes New Hyundai Creta: Still The Best-Selling SUV In India
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X