குறைந்த விலையில் மின்சார காரை களமிறக்கும் கியா! அதுவும் செல்டோஸ் மாடலில்! ஆவலை தூண்டும் அறிவிப்பு!

கியா நிறுவனம், செல்டோஸ் மாடலில் குறைந்த விலை மின்சார காரை களமிறக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

குறைந்த விலையில் மின்சார காரை களமிறக்கும் கியா... அதுவும் செல்டோஸ் மாடலில்... நாவை சப்பு கொட்ட வைத்த அறிவிப்பு!

இந்தியாவின் மாபெரும் வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக கியா நிறுவனம் உருவாகியிருக்கின்றது. செல்டோஸ் எனும் எஸ்யூவி ரக கார் மூலம் இந்தியாவில் கால் தடம் பதித்த இந்நிறுவனம், அக்காரின் மூலமே இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக மாறியிருக்கின்றது. இதுமட்டுமின்றி, கியா கார்னிவல் எம்பிவி சொகுசு காரை களமிறக்கி நாட்டின் சொகுசு வாகன விற்பனையில் அது களமிறங்கியிருக்கின்றது.

குறைந்த விலையில் மின்சார காரை களமிறக்கும் கியா... அதுவும் செல்டோஸ் மாடலில்... நாவை சப்பு கொட்ட வைத்த அறிவிப்பு!

இவ்விரு மாடல் கார்களுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பே நிலவி வருகின்றது. இந்த நிலையிலேயே கியா நிறுவனம், அதன் அடுத்தடுத்த புதிய மாடல்களை இந்தியாவில் களமிறக்க திட்டமிட்டு வருகின்றது. இதன்படி, விரைவில் கியா சொனட் எனும் சிறிய உருவமுடைய எஸ்யூவி ரக காரை களமிறக்க இருக்கின்றது.

குறைந்த விலையில் மின்சார காரை களமிறக்கும் கியா... அதுவும் செல்டோஸ் மாடலில்... நாவை சப்பு கொட்ட வைத்த அறிவிப்பு!

இதன் அறிமுகம் வருகின்ற ஆகஸ்ட் 7ம் தேதி நடைபெற இருப்பதாக கியா நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த நிலையில், தற்போது கியா நிறுவனம் மற்றுமொரு புதிய காரை இந்திய வாகனச் சந்தையில் களமிறக்க தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இம்முறை எரிபொருள் அல்லாத வாகனத்தை அறிமுகம் செய்ய இருப்பதாகக் கூறப்படுகின்றது.

குறைந்த விலையில் மின்சார காரை களமிறக்கும் கியா... அதுவும் செல்டோஸ் மாடலில்... நாவை சப்பு கொட்ட வைத்த அறிவிப்பு!

இதற்காக மின்சார திறன் கொண்ட கார் தயார் செய்யப்பட்டு வருவதாகும் அந்த தகவல் தெரவிக்கின்றது. மேலும், அதிக ஆவலைத் தூண்டுகின்ற வகையில், தனது முந்தைய தயாரிப்புகளைப் போலவே கியா நிறுவனம் புதிய மின்சார காரையும் குறைந்த விலையில் விற்பனைக்குக் களமிறக்கப்படதாக அந்த தகவல் கூறுகின்றது.

குறைந்த விலையில் மின்சார காரை களமிறக்கும் கியா... அதுவும் செல்டோஸ் மாடலில்... நாவை சப்பு கொட்ட வைத்த அறிவிப்பு!

அந்த மின்சார கார் செல்டோஸ் வரிசையைக் கூடுதல் பலப்படுத்தும் வகையில் செல்டோஸ் மாடலிலேயே உருவாக்கப்பட்டு வருகின்றது. தற்போது உருவாக்கம் பணியில் இது இருப்பதால் வருகின்ற 2021ம் ஆண்டிற்கு அது களமிறக்கப்படலாம் என கூறப்படுகின்றது.

குறைந்த விலையில் மின்சார காரை களமிறக்கும் கியா... அதுவும் செல்டோஸ் மாடலில்... நாவை சப்பு கொட்ட வைத்த அறிவிப்பு!

கியா செல்டோஸ் எஸ்யூவி காருக்கு இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் பலவற்றில் அமோகமான வரவேற்பு கிடைத்து வருகின்றது. எனவேதான், நல்ல வரவேற்பைப் பெற்று வரும் இந்த மாடலிலேயே மின்சார தேர்வை வழங்க கியா முடிவு செய்திருக்கின்றது. இதனை உள்நாட்டிலேயே வைத்து கட்டமைக்க இருப்பதாகவும் அது தெரிவித்துள்ளது. அதேசமயம், உலகளவில் இந்த காரை விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது கியா.

குறைந்த விலையில் மின்சார காரை களமிறக்கும் கியா... அதுவும் செல்டோஸ் மாடலில்... நாவை சப்பு கொட்ட வைத்த அறிவிப்பு!

அந்தவகையில், முதல் நாடாக சீனாவை தேர்வு செய்துள்ளது கியா. இங்குதான் செல்டோஸ் மின்சார கார் முதலில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதைத் தொடர்ந்து, கியாவின் பிற வர்த்தக நாடுகளான இந்தியா போன்ற நாடுகளில் அறிமுகம் செய்ய அது திட்டமிட்டுள்ளது. கியா செல்டோஸ் மாடல் மட்டுமின்றி நிரோ மற்றும் சோல் ஆகிய இரு மாடல்களிலும் மின்சார கார்களை கியா தயாரித்து வருகிறது.

குறைந்த விலையில் மின்சார காரை களமிறக்கும் கியா... அதுவும் செல்டோஸ் மாடலில்... நாவை சப்பு கொட்ட வைத்த அறிவிப்பு!

ஆனால், அவற்றைக் காட்டிலும் மிகக் குறைந்த விலையில் செல்டோஸ் மின்சார கார் இருக்கும் என தெரிகின்றது. தற்போது வெளியாகியிருக்கும் தகவலில், கியா செல்டோஸ் தற்போது அந்நிறுவனத்தின் மிகக் குறைந்த விலையுடைய மின்சார காராக அறிமுகமாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. ஆகையால், தற்போது விற்பனையில் இருக்கும் செல்டோஸ் எஸ்யூவி காரைப் போலவே மின்சார மாடல் செல்டோஸ் காரும் மலிவான விலையில் எதிர்பார்க்கப்படுகின்றது.

குறைந்த விலையில் மின்சார காரை களமிறக்கும் கியா... அதுவும் செல்டோஸ் மாடலில்... நாவை சப்பு கொட்ட வைத்த அறிவிப்பு!

புதிதாக தயாராகி வரும் கியா செல்டோஸ் மின்சார காரின் தோற்றம் மற்றும் ஸ்டைல் ஆகிய அனைத்தும் தற்போது விற்பனையில் எரிபொருள் எஞ்ஜினைக் கொண்ட செல்டோஸ் காரை மாடலைப் போலவே இருக்கும் என கூறப்பட்டுள்ளது. அதேசமயம், லேசான மாற்றங்களுடன் முன்பக்க கிரில் அமைப்பு, பம்பர் மற்றும் ஏரோடைனமிக் அமைப்பு ஆகியவை இடம்பெற இருக்கின்றது. இவை செல்டோஸ் காரை மின்சார மாடல் என்பதை உணர்த்துவதற்காக செய்யப்படும் மாற்றங்கள் ஆகும்.

குறைந்த விலையில் மின்சார காரை களமிறக்கும் கியா... அதுவும் செல்டோஸ் மாடலில்... நாவை சப்பு கொட்ட வைத்த அறிவிப்பு!

இதுமட்டுமின்றி, அலாய் வீல், பனி விளக்கு மற்றும் உடற்பகுதியின் மேற்பரப்பில் நீல நிறத்தில் கூடுதல் பாகங்கள் உள்ளிட்டவை இணைக்கப்பட இருக்கின்றன. இதேபோன்று மின்சார காரின் பின் பக்கத்திலும் லேசான மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. இந்த காரின் அதிகாரப்பூர்வ ரேஞ்ஜ் மற்றும் பேட்டரி திறன் பற்றிய தகவல்கள் வெளியிடப்படவில்லை.

குறைந்த விலையில் மின்சார காரை களமிறக்கும் கியா... அதுவும் செல்டோஸ் மாடலில்... நாவை சப்பு கொட்ட வைத்த அறிவிப்பு!

இருப்பினும், தற்போது வெளியாகியிருக்கும் தகவலின் அடிப்படையில் புதிய கியா செல்டோஸ் மின்சார கார் ஒரு முழுமையான சார்ஜில் 400 கிமீ ரேஞ்ஜை என வழங்கும் என கூறப்படுகின்றது. இந்த காரை கியா நிறுவனம், அதன் தென் கொரிய கார் தயாரிப்பு ஆலையான யான்செங்கில் வைத்துதான் முதலில் தயாரிக்க இருக்கின்றது.

குறைந்த விலையில் மின்சார காரை களமிறக்கும் கியா... அதுவும் செல்டோஸ் மாடலில்... நாவை சப்பு கொட்ட வைத்த அறிவிப்பு!

இங்குதான் வருடம் ஒன்றிற்கு 10,000 யூனிட்டுகள் என்ற வீதத்தில் கியா செல்டோஸ் மின்சார மாடல் தயாரிக்கப்பட இருக்கின்றது. ஏற்கனவே, கியா செல்டோஸ் எரிபொருள் வெர்ஷனில் பட்டைய கிளப்பும் விற்பனையைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில், அதே மாடலில் மின்சார கார் விற்பனைக்கு வருவது அதன் ரசிகர்கள் ஆவலைத் தூண்டும் வகையில் அமைந்துள்ளது.

Most Read Articles
மேலும்... #கியா #kia motors #kia seltos
English summary
Kia Seltos EV Expected Later This Year. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X